Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஹோண்டா டியோ 125 Vs டியோ 110 ஒப்பீடு எந்த ஸ்கூட்டர் வாங்கலாம்

by MR.Durai
14 July 2023, 12:52 pm
in Bike Comparison
0
ShareTweetSend

honda dio 125vs dio 110 compare

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனத்தின் ஸ்போர்ட்டிவ் டியோ 125 Vs  டியோ 110 என இரு மோட்டோ ஸ்கூட்டர் மாடலை ஒப்பீடு செய்து அறிந்து கொள்ளலாம். டிசைன் அம்சங்களில் இரு மாடல்களும் ஒரே மாதிரியாக அமைந்துள்ளது.

இரண்டு மாடல்களும் ஸ்டைலிங் அம்சங்களில் பெரிதாக வித்தியாசம் இல்லாமல் மாறுபட்ட பாடி கிராபிக்ஸ் கொண்டதாக சிறிய வித்தியாசங்களை பெற்றதாக அமைந்துள்ளது.

Honda Dio 125 Vs Dio 110

முதலில் டிசைன் அம்சங்களில் ஸ்டைலிஷான எல்இடி ஹெட்லைட் வழங்கப்பட்டு, நேர்த்தியான பாடி கிராபிக்ஸ் கொண்டு ஸ்டைலிஷான இரண்டு டிப் பெற்ற புகைப்போக்கி எக்ஸ்ஹாஸ்ட் பெற்று க்ரோம் பூச்சு கொண்டுள்ளது. டியோ 110 மாடலில் கருமை நிறத்தை பெற்ற ஷீல்டு உள்ளது.

டியோ 125சிசி மாடலில் ஹோண்டா லோகோ ஆனது ஃபுளோர் போர்டிலும், 110 மாடலில் முன்புற அப்ரானிலும் உள்ளது. சில ஸ்டைலிஷான பாடி கிராபிக்ஸ் ஆனது வழங்கப்பட்டுள்ளது.

dio 125 vs dio 110 scooter

இரு மாடல்களும் முழுமையான டிஜிட்டல் கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு பல்வேறு மேம்பட்ட தகவல் கிடைக்கின்றது. பெட்ரோல் இருப்பின் அளவு, சராசரி எரிபொருள் மைலேஜ் & நிகழ்நேரத்தில் கிடைக்கின்ற மைலேஜ் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். ட்ரிப் மீட்டர், கடிகாரம், சைட் ஸ்டாண்ட் இண்டிகேட்டர், ஸ்மார்ட் கீ & பேட்டரி இண்டிகேட்டர், ஈக்கோ இண்டிகேட்டர் மற்றும் சர்வீஸ் இண்டிகேட்டர் போன்ற விவரங்களை மீட்டர் காட்டுகிறது.

ஹெச்-ஸ்மார்ட் எனப்படுகின்ற அம்சத்தின் மூலம், ஸ்மார்ட் ஃபைண்ட் – ஸ்கூட்டரை கண்டுபிடிக்கும் வகையில் நான்கு இண்டிகேட்டர்களும்  ஒளிரும், ஸ்கூட்டரிலிருந்து 10 மீட்டருக்குள் இருந்தால், வாகனத்தின் இருப்பிடத்தை எளிதாக அறிந்து கொள்ளலாம்.

ஸ்மார்ட் அன்லாக் –  ஸ்கூட்டரிலிருந்து இரண்டு மீட்டருக்குள் இருந்தால், கைப்பிடியை லாக் திறக்கலாம், மேலும் பெட்ரோல் டேங்க் மூடி மற்றும் இருக்கையையும் திறக்கலாம்.

ஸ்மார்ட் சேஃப் – ஸ்கூட்டரில் இருந்து இரண்டு மீட்டருக்குள் இருப்பதால் உங்கள் ஸ்கூட்டரை இயக்கலாம். தூரம் அதிகரிக்கும் பொழுது ஸ்கூட்டர் தானாகவே பூட்டிக் கொள்ளும், ஒருவேளை ஸ்கூட்டரை லாக் செய்ய வேண்டும் என்றால் மூன்று வினாடிகளுக்கு பொத்தானை அழுத்துவதன் மூலம் இந்த அம்சத்தையும் செயல்படுத்தலாம்.

ஸ்மார்ட் ஸ்டார்ட் –  கீ இல்லாமல் ஸ்கூட்டரை ஆன் செய்ய, ஸ்டார்ட் பட்டனை அழுத்தினால் போதும்.

டியோ 125 ஸ்கூட்டரில் 123.92cc என்ஜின், அதிகபட்சமாக 8.16 bhp at 6,250 rpm பவர் மற்றும் 10.4 Nm டார்க் at 5000rpm வெளிப்படுத்துகின்றது. இதில் CVT கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

109.51cc என்ஜின் பொருத்தப்பட்டுள்ள டியோ 110 மாடல் 8,000 rpm-ல் 7.75 bhp மற்றும் 5,500 rpm-ல் 9.03 Nm டார்க் 5250 rpm-ல் வெளிப்படுத்தும். இந்த பைக்கில் 4 வேக கியர்பாக்ஸ்  பெற்றிருந்தது.

Specs Honda Dio 125 Honda Dio 110
என்ஜின் 123.92cc Fi, Air-cooled 109.51cc Fi Air Cooled
பவர் 8.16 bhp at 6,250rpm 7.75 bhp at 5500 rpm
டார்க் 10.4 NM at 5000 rpm 9.03 NM at 5250 rpm
கியர்பாக்ஸ் CVT CVT
மைலேஜ் 48 Kmpl 50 Kmpl
அதிகபட்ச வேகம் 90 Kmph 82 Kmph

dio 125 vs dio 110 side view

சஸ்பென்ஷன், டயர், பிரேக் – ஒப்பீடு

Specs Honda Dio 125 Honda Dio 110
முன் சஸ்பென்ஷன் டெலிஸ்கோபிக்  டெலிஸ்கோபிக்
பின் சஸ்பென்ஷன் ஸ்பிரிங் லோட் ஹைட்ராலிக் யூனிட் ஸ்விங்
பிரேக்கிங் சிஸ்டம் CBS CBS
முன்பக்க பிரேக் 190 mm டிஸ்க் 130 mm டிரம்
பின்பக்க பிரேக் 130 mm டிரம் 130 mm டிரம்
வீல் F/R 90/90-12 54J & 90/100-10 53J  ட்யூப்லெஸ் 90/90-12 54J & 90/100-10 53J  ட்யூப்லெஸ்

டியோ 125 ஸ்கூட்டரில் முன்பக்கத்தில் 190 மிமீ டிஸ்க் பிரேக்குடன் பின்புறத்தில் 130 மிமீ டிரம் பிரேக் கொண்டதாக உள்ளது. டியோ 110 ஸ்கூட்டர் மாடலில் 130 மிமீ டிரம் பிரேக்குடன் பின்புறத்தில் 130 மிமீ டிரம் பிரேக் கொண்டதாக உள்ளது. இரு மாடல்களிலும் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது.

இரு மாடல்களும் பொதுவாக 90/90-12 54J மற்றும் 90/100-10 53J  ட்யூப்லெஸ் பெற்றதாகவும், டியோ 110 மாடல் குறைந்த விலை வேரியண்டில் ஸ்டீல் வீல் கொண்டுள்ளது.

dio 125 vs dio 110 scooter

பரிமாணங்கள் ஒப்பீடு

Specs Honda Dio 125 Honda Dio 110
எடை 104 Kg 103 Kg
இருக்கை உயரம் 708mm 650mm
கிரவுண்ட் கிளியரன்ஸ் 171mm 160mm
நீளம் 1,830mm 1,808mm
அகலம் 723mm 707mm
உயரம் 1,172mm 1,150mm
வீல் பேஸ் 1,260mm 1,260mm
சேசிஸ் அண்டர் போன் அண்டர் போன்

இரண்டு மாடல்களும் 1260 mm வீல்பேஸ் கொண்டு கிரவுண்ட் கிளியரண்ஸ் ஆனது 171 மிமீ கொண்டதாக டியோ 125 விளங்குகின்றது. இரண்டு மாடல்களுக்கு இடையிலான வித்தியாசம் 1 கிலோ மட்டும் ஆகும்.

விலை ஒப்பீடு

இரு மாடல்களும் வெவ்வேறு என்ஜின் பெற்றுள்ள டியோ 125, டியோ 110 இளைய தலைமுறையினர் பெரிதும் விரும்பும் வகையில் அமைந்துள்ளது.

Related Motor News

ஸ்கூட்டர் சந்தையில் சரிவை சந்திக்கும் ஹோண்டா., வளர்ச்சி பாதையில் டிவிஎஸ்.!

2025 டிவிஎஸ் ஜூபிடர் 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்

2025 சுசூகி பர்க்மேன் ஸ்டீரிட் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

சுசூகி அவெனிஸ் 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

ஸ்போர்ட்டிவ்.., ஹீரோ ஜூம் 125 ஸ்கூட்டரின் முக்கிய அம்சங்கள்

Model Ex-Showroom  Tamil Nadu
Honda Dio 125 Rs.86,900 – Rs.94,800
Honda Dio 110 Rs.76,003 , Rs. 80,004, Rs. 83,504 (Smart)

honda dio 125

Honda Dio 125 Vs Dio 110 On-road Price in Tamil Nadu

ஹோண்டா டியோ 125 மற்றும் டியோ 110 போட்டியாக, டிவிஎஸ் என்டார்க், ஏப்ரிலியா SR 125, சுசூகி அவெனிஸ், ஹீரோ ஜூம், யமஹா ரே இசட் ஆர் போன்ற மாடல்கள் அமைந்துள்ளன.

Model On-Road  Tamil Nadu
Honda Dio 125 Rs. 1,02,457 – Rs 1,11,675 (Smart)
Honda Dio 110 Rs.92,670 , Rs. 97,780, Rs. 1,01,350 (Smart)

ஹோண்டா டியோ 125 ஸ்கூட்டரின் போட்டியாளர்கள் விலை ஒப்பீடு

Tags: 110cc Scooters125cc ScootersHonda DioHonda Dio 125
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

கேடிஎம் 160 டியூக் Vs யமஹா MT-15 V2

கேடிஎம் 160 டியூக் Vs யமஹா MT-15 V2 ஒப்பீடு., எந்த பைக் வாங்கலாம்.?

2025 suzuki access 125 vs hero destini 125

சுசூகி ஆக்சஸ் 125 Vs ஹீரோ டெஸ்டினி 125 – எந்த ஸ்கூட்டரை வாங்கலாம்..!

2024 பஜாஜ் பல்சர் N250 vs பல்சர் F250 இரு பைக்குகளுக்கும் உள்ள வித்தியாசங்கள்

பல்சர் NS400Z vs NS200 ஒப்பீடு.., எந்த NS பைக்கை வாங்கலாம்.!

2024 பஜாஜ் பல்சர் NS200 vs டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V ஒப்பீடு

2024 பஜாஜ் பல்சர் NS160 vs போட்டியாளர்களின் என்ஜின், விலை, வசதிகள் ஒப்பீடு

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R, டிவிஎஸ் ரைடர் 125 மற்றும் பஜாஜ் பல்சர் 125: எது சிறந்த 125cc ஸ்போர்ட்ஸ் பைக்?

ஜாவா 350 பைக்கின் போட்டியாளர்கள் விலை ஒப்பீடு

2024 பஜாஜ் சேட்டக் vs ஏதெர் 450S vs டிவிஎஸ் ஐக்யூப் Vs ஓலா S1 ஏர் – ஒப்பீடு

ஹார்லி X440, டிரையம்ப் ஸ்கிராம்பளர் 400x, ஸ்பீட் 400 உடன் 350-450cc பைக்குகளின் ஆன்-ரோடு விலை பட்டியல் ஒப்பீடு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan