Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Font ResizerAa
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Have an existing account? Sign In
Follow US
Suzuki

2025 சுசூகி ஆக்சஸ் 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

ரூ.1.03 லட்சத்தில் சுசூகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டரின் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட மாடலின் மைலேஜ் 49 கிமீ வரை கிடைக்கின்றது.

By
MR.Durai
ByMR.Durai
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.
Follow:
Last updated: 16,May 2025
Share
4 Min Read
SHARE

2025 suzuki access 125

சுசூகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற 125சிசி ஸ்கூட்டர் மாடலான ஆக்சஸ் 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் மற்றும் நுட்பவிபரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.

Contents
  • 2025 Suzuki Access 125
  • 2025 Suzuki Access 125 on-Road Price Tamil Nadu
  • சுசூகி ஆக்செஸ் 125 நுட்பவிபரங்கள்
  • 2025 Suzuki Access 125 Rivals
  • Faqs about Suzuki Access 125

2025 Suzuki Access 125

இந்தியாவின் முதல் 125சிசி ஸ்கூட்டர் என்ற பெருமையுடன் விளங்கும் ஆக்செஸ் 2025 புதிய நிறங்களை பெற்று பல்வேறு மாற்றங்களை கொண்டதாக வந்துள்ள OBD2B இணக்கமான, ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் 124cc இன்ஜின்  6,500 rpm-ல் அதிகபட்சமாக 8.31 hp பவர், 5,500 rpm-ல் 10.2 Nm டார்க் வழங்குகின்றது. இந்த மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் உள்ளது.

ஆக்சஸ் 125சிசி மாடலில் ஸ்டாண்டர்டு, ஸ்பெஷல் எடிசன் மற்றும் ரைட் கனெக்ட் எடிசன் என மூன்று விதமாக விற்பனைக்கு கிடைக்கின்றது. ரைட் கனெக்ட் எடிசனில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் ப்ளூடூத் இணைப்புடன் கூடியதாக அமைந்துள்ளது. பெட்ரோல் இருப்பின் அளவு, சராசரி எரிபொருள் மைலேஜ் & நிகழ்நேரத்தில் கிடைக்கின்ற மைலேஜ் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.

ரைட் கனெக்ட் என்பது ப்ளூடுத் இணைப்பின் வாயிலாக டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், இனகம்மிங் அழைப்பு, எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்அப் காட்சி, தவறிய அழைப்பு மற்றும் படிக்காத எஸ்எம்எஸ் எச்சரிக்கை, எச்சரிக்கையை மீறிய வேகம், ஃபோன் பேட்டரி நிலை ஆகியற்றை டிஜிட்டல் கிளஸ்ட்டரில் அறிந்து கொள்ளலாம்.

டிரம் மற்றும் டிஸ்க் பிரேக் என இருவிதமான ஆப்ஷனை பெறுகின்ற முன்புற டயரில் 190 மிமீ டிஸ்க் பிரேக்குடன் பின்புறத்தில் 130 மிமீ டிரம் பிரேக் கொண்டதாக உள்ளது. ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டம் ஆனது கொடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஆக்செஸ் 125 மாடலில் 90/90-12 54J மற்றும் 90/100-10 53J  ட்யூப்லெஸ் பெற்றதாக உள்ளது.

ஆக்சஸ் 125 மாடலின் பரிமாணங்கள் நீளம் 1,835mm அகலம் 690mm உயரம் மற்றும் 1,155mm, 1260 mm வீல்பேஸ் கொண்டு கிரவுண்ட் கிளியரண்ஸ் ஆனது 160 மிமீ கொண்டதாக ஆக்சஸ் 125 ஆனது 106 கிலோ மற்றும் 105 கிலோ (அலாய் வீல்) கொண்டதாவும் 5 லிட்டர் கொள்ளளவு பெற்ற பெட்ரோல் டேங்க் விளங்குகின்றது. பல்வேறு வசதிகளில் யூஎஸ்பி சார்ஜிங் போர்ட், க்ரோம் பாகங்கள், எல்இடி ஹெட்லைட், ரைட் கனெக்ட் வேரியண்ட் தவிர மற்ற வேரியண்டில் அனலாக் கிளஸ்ட்டர் உள்ளது. இந்த ஸ்கூட்டரின் பூட்ஸ்பேஸ் கொள்ளளவு  24.4 லிட்டர் ஆக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

More Auto News

Suzuki : சுசூகி ஆக்செஸ் ஸ்கூட்டரின் டிரம் பிரேக்கில் சி.பி.எஸ் அறிமுகம்
50 லட்சம் உற்பத்தி இலக்கை எட்டிய சுசூகி ஆக்சஸ் 125
2025 ஹீரோ டெஸ்டினி 125 விற்பனைக்கு அறிமுகமானது
சுசூகி ஆக்சஸ் 125 Vs ஹீரோ டெஸ்டினி 125 – எந்த ஸ்கூட்டரை வாங்கலாம்..!
ஹோண்டா ஸ்கூட்டர்களின் ஆன்-ரோடு விலை பட்டியல்

கூடுதலாக வெளியிடப்பட்டுள்ள ரைட் கனெக்ட் TFT எடிசனில் 4.2 அங்குல கிளஸ்ட்டருடன் மற்றபடி புதிதாக பேர்ல் மேட் அக்வா சில்வர் என்ற நிறத்துடன் வழக்கமான 4 நிறங்களை

  • Standard Edition Drum Brake Variant – ₹ 88,036
  • Special Edition Disc Brake Variant – ₹ 94,736
  • Ride Connect Edition Disc Brake with Alloy Wheel –  ₹ 99,336
  • Access Ride Connect TFT Edition – ₹ 1,06,136

(ex-showroom Tamil Nadu)

2025 Suzuki Access 125 on-Road Price Tamil Nadu

2025 சுசூகி ஆக்சஸ் 125 ஸ்கூட்டர் ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர் மற்ற மாவட்டங்களுக்கும் புதுச்சேரி மாநிலத்துக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

  • Standard Edition Drum Brake Variant – ₹ 1,06,832
  • Special Edition Disc Brake Variant – ₹ 1,14,996
  • Ride Connect Edition Disc Brake with Alloy Wheel –  ₹ 1,20,572
  • Access Ride Connect TFT Edition – ₹ 1,27,986

(All Price On-road Tamil Nadu)

  • Standard Edition Drum Brake Variant – ₹ 98,146
  • Special Edition Disc Brake Variant – ₹ 1,04,965
  • Ride Connect Edition Disc Brake with Alloy Wheel –  ₹ 1,12,353
  • Access Ride Connect TFT Edition – ₹ 1,19,910

(All Price on-road Pondicherry)

suzuki access rideconnect tft edition

சுசூகி ஆக்செஸ் 125 நுட்பவிபரங்கள்

என்ஜின்
வகை ஏர் கூல்டு, 4 stroke
Bore & Stroke 52.5 X 57.4 mm
Displacement (cc) 124 cc
Compression ratio 10.0:1
அதிகபட்ச பவர் 8.31 hp  at 6,500 rpm
அதிகபட்ச டார்க் 10.2 Nm  at 5,000 rpm
எரிபொருள் அமைப்பு Fuel injection (FI)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம் அண்டர் போன்
டிரான்ஸ்மிஷன் ஆட்டோமேட்டிக்
கிளட்ச் டிரை டைப்
சஸ்பென்ஷன்
முன்பக்கம் டெலிஸ்கோபிக்
பின்பக்கம் ஸ்விங் ஆர்ம்
பிரேக்
முன்புறம் 190 மிமீ டிஸ்க் / 130 மிமீ டிரம்
பின்புறம் டிரம் 130 mm (with CBS)
வீல் & டயர்
சக்கர வகை அலாய்/ ஸ்டீல்
முன்புற டயர்  90/90-12 54J ட்யூப்லெஸ்
பின்புற டயர்  90/100-10 53J ட்யூப்லெஸ்
எலக்ட்ரிக்கல்
பேட்டரி 12V-4Ah MF பேட்டரி
ஸ்டார்டர் வகை எலக்ட்ரிக் செல்ஃப்/கிக்
பரிமாணங்கள்
நீளம் 1835 mm
அகலம் 690 mm
உயரம் 1155 mm
வீல்பேஸ் 1260 mm
இருக்கை உயரம் 773 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ் 160 mm
எரிபொருள் கொள்ளளவு 5.3 litres
எடை (Kerb) 106 kg/ 105 kg (Alloy)

சுசூகி ஆக்சஸ் 125 நிறங்கள்

விற்பனையில் உள்ள மூன்று வேரியண்டிலும் சேர்த்து பச்சை, நீலம், கருப்பு, வெள்ளை அடிப்படையில் மொத்தமாக 12 விதமான மாறுபட்ட நிறங்களில் கிடைக்கின்றது.

2025 suzuki access 125 white
2025 suzuki access 125 black
2025 suzuki access 125 blue
2025 suzuki access 125 green
access 125

2025 Suzuki Access 125 Rivals

சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ஆக்சஸ் 125 ஸ்கூட்டரின் போட்டியாளர்கள் ஆக்டிவா 125, டிவிஎஸ் ஜூபிடர் 125, ஹீரோ டெஸ்டினி 125, யமஹா ஃபேசினோ மற்றும் பல்வேறு 125சிசி மாடல்களை எதிர்கொள்ளுகின்றது.

Faqs about Suzuki Access 125

2025 சுசூகி ஆக்சஸ் 125 ஸ்கூட்டர் மைலேஜ் எவ்வளவு ?

புதிய சுசூகி ஆக்சஸ் 125 ஸ்கூட்டரின் மைலேஜ் 48-49KMPL ஆகும்.

2025 சுசூகி ஆக்சஸ் 125 ஸ்கூட்டர் பவர் விபரம் ?

2025 சுசூகி ஆக்சஸ் 125 ஸ்கூட்டரில் உள்ள 124cc இன்ஜின்  6,500 rpm-ல் அதிகபட்சமாக 8.31 bhp பவர், 5,000 rpm-ல் 10.2 Nm டார்க் வழங்கும்.

2023 சுசூகி ஆக்சஸ் 125 ஸ்கூட்டர் போட்டியாளர்கள் ?

சுசூகி ஆக்சஸ் 125 போட்டியாளர்கள், டியோ 125 உட்பட ஆக்டிவா 125, டிவிஎஸ் ஜூபிடர் 125, ஹீரோ டெஸ்டினி 125 மற்றும் பல்வேறு 125சிசி ஸ்கூட்டர்கள் உள்ளன.

2025 சுசூகி ஆக்சஸ் 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை ?

2023 சுசூகி ஆக்சஸ் 125 ஸ்கூட்டர் ஆன்-ரோடு விலை ₹ 1.06 லட்சம் முதல் ₹ 1.21 லட்சம் வரை அமைந்துள்ளது.

ஆக்செஸ் 125 வேரியண்ட் விபரம் .?

ஸ்டாண்டர்டு, ஸ்பெஷல் எடிசன் மற்றும் ரைட் கனெக்ட் எடிசன் என மூன்று வகைகளில் உள்ளது.

2025 Suzuki Access 125 Scooter Image Gallery

2025 suzuki access 125
2025 suzuki access 125 green
2025 suzuki access 125 blue
2025 suzuki access 125 black
2025 suzuki access 125 white
access 125
2025 suzuki access 125
2025 சுசூகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டரின் மாற்றங்கள் மற்றும் முக்கிய சிறப்புகள்
ரூ.2,300 வரை சுசுகி ஆக்செஸ் 125 பிஎஸ்6 ஸ்கூட்டர் விலை உயர்ந்தது
சுசூகி அக்சஸ் 125 ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா.?
சுசூகி ஸ்கூட்டர்களின் ஆன்-ரோடு விலை பட்டியல் – ஏப்ரல் 2023
இந்தியாவின் 5 சிறந்த பிஎஸ்-6 ஸ்கூட்டர்கள்
TAGGED:125cc ScootersSuzuki Access 125
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 Honda dio 110cc
Honda Bikes
2025 ஹோண்டா டியோ ஸ்கூட்டர் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
ஹீரோ மேவ்ரிக் 440
Hero Motocorp
ஹீரோ மேவ்ரிக் 440 விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
2025 Royal Enfield bullet 350 logo
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
ola roadster x plus electric bike
Ola Electric
ஓலா ரோட்ஸ்டர் X+ எலெக்ட்ரிக் பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்புகள்
Automobile Tamilan - All Rights Reserved
2025 Automobile Tamilan - All Rights Reserved