Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் ஃபிளெக்ஸ் ஃப்யூவல் அறிமுகம்

By MR.Durai
Last updated: 30,August 2023
Share
SHARE

toyota Innova Hycross Flex-Fuel prototype

டொயோட்டா நிறுவனம் முதன்முறையாக BS6 2.0 அடிப்படையில் வெளியிட்டுள்ள முதல் ஃபிளெக்ஸ் ஃப்யூவல் என்ஜின் பெற்ற இன்னோவா ஹைகிராஸ் ஹைபிரிட் கார் E85 (எத்தனால் 85 %) கொண்டு இயங்கும் மாடலாகும்.

இந்தியாவில் விரைவில் எத்தனால் 20 % கலப்பு செய்யப்பட்டு பெட்ரோல் விற்பனை செய்யப்பட உள்ள நிலையில், தற்பொழுது காட்சிப்படுத்தப்பட்டுள்ள E85 மாடல் 15 % பெட்ரோல் மற்றும் 85 % எத்தனால் கலப்பதனால் மாசு உமிழ்வு பெருமளவவு கட்டுக்குள் வருவதுடன், கச்சா எண்ணெய் இறக்குமதி குறைக்கப்படும். எத்தனால் ஆனது கருப்பு சக்கை மற்ற விவசாய கழிவுகளில் இருந்து இந்தியாவிலே தயாரிக்கலாம்.

Toyota innova Hycross Flex Fuel

தற்பொழுது ஆரம்பகட்ட தயாரிப்பு நிலையில் உள்ள இன்னோவா ஹைக்ராஸ் ஃபிளெக்ஸ் ஃப்யூவல் மாடலை ஒன்றிய அமைச்சர்கள் நிதின் கட்கரி மற்றும் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் முன்மாதிரியை அறிமுகம் செய்தனர். ஆனால் விற்பனைக்கு வரும் காலக்கெடு பற்றி அறிவிக்கப்படவில்லை.

இன்னோவா ஹைக்ராஸ் ஃப்ளெக்ஸ் காரில் தொடர்ந்து 186 hp பவர் வெளிப்படுத்தும் 2.0-லிட்டர் அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் என்ஜின்  மின்சார மோட்டார் கொண்டதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.  ஃப்ளெக்ஸ் எரிபொருளை பயன்படுத்தும் வகையில் என்ஜின் பாகங்களை மாற்றியமைத்துள்ளது. குறிப்பாக, வால்வு, வால்வு சீட்டிங், ஸ்பார்க் பிளக், பிஸ்டன் ரிங் டாப் உள்ளிட்ட அமைப்புகளுடன் சிலிண்டர் ஹெட் மூலம் சிறிய மாற்றங்களை தந்து எத்தனால் எரிபொருளுக்கு ஏற்றதாக மேம்படுத்தியுள்ளது.

toyota Innova Hycross Flex-Fuel

ஹைபிரிட் இன்னோவா ஹைக்ராஸ் ஃப்ளெக்ஸ் மாடல் 60 சதவீத எலக்ட்ரிக் பவர் (பேட்டரி பேக்கைப் பயன்படுத்தி) மற்றும் அதே நேரத்தில் 40 சதவீதம் எத்தனால் மூலம் இயங்கும் என்ஜினிலிருந்து பவரை பெற்று இயங்கும்.

வாகனத்தின் ஃப்யூவல் வடிகட்டி, ஃப்யூவல் பம்ப் மற்றும் எத்தனால் சென்சார் நிறுவப்பட்ட எரிபொருள் லைன்களிலும் எத்தனாலுக்கு ஏற்ற செயல்பாட்டை வழங்க பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஃபிளெக்ஸ் ஃப்யூவல் பெற்ற டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் ஆரம்ப கட்ட தயாரிப்பு நிலையில் உள்ளதால் விற்பனைக்கு வர அடுத்த சில ஆண்டுகள் தேவைப்படும்.

toyota innova hycross flex fuel rear

Mahindra Thar Earth Edition in tamil
நவீன வசதிகளுடன் வருமா., 2025 மஹிந்திரா தார் எதிர்பார்ப்புகள்.!
புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்
2025 ரெனால்ட் கிகர் எஸ்யூவி விலை மற்றும் முக்கிய மாற்றங்கள்
பிரீமியம் வசதிகளுடன் வரவுள்ள பாசால்ட் X டீசரை வெளியிட்ட சிட்ரோயன்
எக்ஸ்டர் புரோ பேக்கினை வெளியிட்ட ஹூண்டாய்
TAGGED:Toyota Innova Hycross
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
vida vx2 electric scooter
Vida Electric
ஹீரோ விடா VX2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச, நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2025 Royal Enfield Guerrilla 450 new
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்
2025 பஜாஜ் சேத்தக் 35 ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை
Bajaj
2025 பஜாஜ் சேத்தக் 35 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
honda activa white colour
Honda Bikes
2025 ஹோண்டா ஆக்டிவா 110 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms