Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2024 மஹிந்திரா எக்ஸ்யூவி 400 புரோ சிறப்புகள் மற்றும் ஆன் ரோடு விலை

by MR.Durai
13 January 2024, 7:17 am
in Car News
0
ShareTweetSend

xuv400 ev review

மின் வாகன சந்தையில் புதுப்பிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2024 மஹிந்திரா XUV400 புரோ எலக்ட்ரிக் எஸ்யூவி காரில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன் ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம்.

வெளிப்புற தோற்ற அமைப்பில் எந்தவொரு மாற்றங்களும் இல்லாமல் EV லோகோ மட்டும் சேர்க்கப்பட்டு, இன்டிரியரில் பெரிய அளவில் மாற்றங்களை தந்து கூடுதல் வசதிகளை கொடுத்துள்ளது.

2024 Mahindra XUV400 Pro

டாடா நெக்ஸான்.இவி காருக்கு சவால் விடுக்கின்ற மாடல் வெளிப்புற தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லையென்றாலும் கூடுதலாக எல்இடி ஹெட்லேம்ப் வசதி தற்பொழுதும் இணைக்கவில்லை. புதிய மஹிந்திரா XUV400 காரின் முந்தைய ஒற்றை கருப்பு நிற இன்டிரியருக்கு பதிலாக தற்பொழுது கருப்பு மற்றும் பீஜ் கலவையை கொண்டுள்ளதால் மிக கவர்ச்சிகரமாக உள்ளது.

2024-mahindra-xuv-400

புதுப்பிக்கப்பட்ட ஸ்டீயரிங் வீல் பெற்று டேஸ்போர்டின் மத்தியில் 10.25 அங்குல ஃபீரி ஸ்டாண்டிங் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்டதாக அமைந்துள்ளது.  புதிய சிஸ்டத்தில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே உடன் Adrenox கார் இணைப்பு தொடர்பாக 50க்கு மேற்பட்ட வசதிகளை பெறுகின்றது. 2,600மிமீ வீல்பேஸ் கொண்டுள்ள இந்த காரில் 378 லிட்டர் கொள்ளளவு பெற்ற பூட் ஸ்பேஸ் உள்ளது.

148 hp பவர் மற்றும் 310 Nm டார்க் உடன் 375 கிமீ என MIDC சான்றிதழ் வழங்கப்பட்டு 34 kWh பேட்டரி பெற்று அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜ் மூலம் உண்மையான ரேஞ்ச் 250 கிமீ ரேஞ்ச், கூடுதலாக வரவுள்ள 456 கிமீ என MIDC சான்றிதழ் வழங்கப்பட்டு 39.4 kwh பேட்டரி மூலம் சிங்கிள் சார்ஜ் மூலம் 290 கிமீ -310 கிமீ வரை வெளிப்படுத்துகின்றது. 7.2kW சார்ஜரை பயன்படுத்தினால் 0-100% சார்ஜ் செய்ய 6 மணிநேரம் எடுக்கும்.

Fun, Fast, மற்றும்  Fearless என மூன்று மோடுகளை பெறும் எலக்ட்ரிக் XUV400 கார் 0-100 கிமீ வேகத்தை வெறும் 8.3 வினாடிகளில், மோடில் அதிகபட்ச வேகம் மணிக்கு 150 கிமீ ஆக உள்ளது. Fun மோட் ஆனது மணிக்கு 90 கிமீ ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

  • XUV400 EC Pro 34.5kwh (3.3kwh charger) ₹ 15.49 லட்சம்
  • XUV400 EC Pro 34.5kwh (7.2kwh charger) ₹ 16.74 லட்சம்
  • XUV400 EC Pro 39.5kwh (7.2kwh charger) ₹ 17.49 லட்சம்

(ex-showroom)

2024 mahindra xuv400 pro dashboard

எக்ஸ்யூவி 400 காரில் EC pro 34.5 kWh (3.3 kW AC Charger), EL pro 34.5 kWh (7.2 kW AC Charger), மற்றும் EL pro 39.5 kWh (7.2 kW AC Charger) என மூன்று விதமான வேரியண்ட் பெறுகின்றது.

XUV400 EC pro

  • புஷ் பட்டன் தொடக்க/நிறுத்தம் &  கீலெஸ் நுழைவு
  • DATC
  • பின்புற ஏசி வென்ட்கள்
  • பின்புற USB
  • USB சார்ஜிங் போர்ட்கள் – 1
  • OCPI (திறந்த சார்ஜ் பாயிண்ட் இடைமுகம்) ஹப் ஒருங்கிணைப்பு
  • பின்புற டிஸ்க் பிரேக்குகள்
  • கவர் கொண்ட R16 ஸ்டீல் சக்கரங்கள்
  • பின்புற ஸ்பாய்லர்
  • இருக்கை பெல்ட் உயரம் சரிசெய்தல்
  • 2 ஏர்பேக்குகள்
  • ISOFIX குழந்தை இருக்கை அறிவிப்பாளர்கள்
  • பின்புற இருக்கைகளை பிரிக்கவும் – 60:40
  • துணி இருக்கைகள்
  • உயரத்தை சரிசெய்யக்கூடிய முன் இருக்கை பெல்ட்கள்
  • சேமிப்பகத்துடன் கூடிய பேட் செய்யப்பட்ட முன் ஆர்ம்ரெஸ்ட்
  •  பின்தொடரும் முகப்பு விளக்குகள்
  • LED டெயில்-லேம்ப்கள்
  • செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்
  • எலக்ட்ரிக் சரிசெய்யக்கூடிய ORVMகள்
  • முன் மற்றும் பின் பவர் ஜன்னல்கள், 1 டச் டவுன்
  • டிரைவ் முறைகள்
  • இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பம்
  • ESP
  • பூட் விளக்கு
  • டயர் அழுத்தம் கண்காணிப்பு

xuv400 tamil review

XUV400 EL pro

EC pro வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக அல்லது மாற்றாக

  • 10.25-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (அலெக்சா உடன்)
  • 10.25-இன்ச் டிஜிட்டல் கருவிகள் காட்சி
  • வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் கார்ப்ளே
  • வயர்லெஸ் சார்ஜர்
  • ஷார்க் துடுப்பு ஆண்டெனா
  • USB சார்ஜிங் போர்ட்கள் – 2
  • க்ரூஸ் கட்டுப்பாடு
  • தானியங்கு முறையில் மங்கலான IRVM
  • முன்புறம் பனி விளக்குகள்
  • நான்கு ஸ்பீக்கர்கள் + இரண்டு ட்வீட்டர்கள்
  • 16-இன்ச் டைமண்ட்-கட் அலாய் வீல்
  • மின்சாரம் மடிக்கக்கூடிய ORVMகள்
  • கூரை தண்டவாளங்கள்
  • ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள் + LED DRLகள்
  • கதவு உறைக்குள் சாடின் செருகல்
  • ஆறு ஏர்பேக்குகள்
  • பின்புற டிஃபோகர், வைப்பர் வாஷர்
  • Leatherette இருக்கைகள் & தோல் மூடப்பட்ட ஸ்டீயரிங்
  • பிஞ்ச் எதிர்ப்புடன் கூடிய மின்சார சன்ரூஃப்
  • ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட ஆடியோ & ஃபோன் கட்டுப்பாடு
  • உயரத்தை சரிசெய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை
  • வேனிட்டி மிரர்களுடன் ஒளிரும் சன் விசர்
  • கப் ஹோல்டர்களுடன் பின்புற மைய ஆர்ம்ரெஸ்ட்
  • க்ளோவ்பாக்ஸ் வெளிச்சம்
  • ஸ்மார்ட்வாட்ச் இணைப்பு
  • புளூடூத், USB இணைப்பு
  • ரிவர்ஸ் கேமரா ( வழிகாட்டுதல்கள்)
  • மழையை உணர்ந்து செயல்படும் வைப்பர்
  • ஆட்டோ ஹெட்லைட்

xuv400 rear view

2024 Mahindra XUV400 Pro onroad Price in Tamil Nadu

புதுப்பிக்கப்பட்ட மஹிந்திரா XUV400 எலகட்ரிக் எஸ்யூவி காரின் தமிழ்நாடு ஆன் ரோடு விலை பட்டியல் பின்வருமாறு ;-

  • XUV400 EC Pro 34.5kwh (3.3kwh charger) ₹ 16,51,543
  • XUV400 EC Pro 34.5kwh (7.2kwh charger) ₹ 17,84,654
  • XUV400 EC Pro 39.5kwh (7.2kwh charger) ₹ 18,63,751

(on road price in TamilNadu)

போட்டியாளரான நெக்ஸான்.ev மாடலை விட சற்று கூடுதலான ரேஞ்ச் வெளிப்படுத்துகின்ற டாப் வேரியண்ட் மிக சிறப்பான சாய்ஸாக அமைந்துள்ளது.

அறிமுக சலுகை விலை மே 31, 2024 வரை மட்டுமே பொருந்தும் முன்பதிவு கட்டணமாக ரூ.21,000 வசூலிக்கப்படும் நிலையில் மஹிந்திரா XUV400 விநியோகம் பிப்ரவரி 2024 முதல் துவங்க உள்ளது.

xuv400 suv

Related Motor News

பாரத் கிராஷ் டெஸ்டில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திராவின் மூன்று கார்கள்.!

ரூ.4.40 லட்சம் வரை மஹிந்திராவின் XUV400, XUV300 கார்களுக்கு தள்ளுபடி

₹ 15.49 லட்சத்தில் 2024 மஹிந்திரா XUV400 புரோ விற்பனைக்கு வெளியானது

மஹிந்திரா XUV400 புரோ எலக்ட்ரிக் எஸ்யூவி படங்கள் வெளியானது

ஜனவரி 2024ல் வரவிருக்கும் எஸ்யூவி மற்றும் கார்கள்

மஹிந்திரா XUV400 EV புரோ காரின் புதிய வேரியண்ட் விபரம் வெளியானது

Tags: Mahindra XUV 400
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

சிஎன்ஜி ஹூண்டாய் ஆரா செடானில் E வேரியண்ட் அறிமுகம்

ரூ.8.08 லட்சத்தில் ஹூண்டாய் ஆரா S AMT வேரியண்ட் வெளியானது

ஜூலை 15., வின்ஃபாஸ்ட் VF6, VF7 முன்பதிவு துவங்குகின்றது

ஜூலை 15., வின்ஃபாஸ்ட் VF6, VF7 முன்பதிவு துவங்குகின்றது

6 ஏர்பேக்குடன் புதிய டொயோட்டா கிளான்ஸா விற்பனைக்கு வெளியானது

7 இருக்கை ரெனால்ட் போரியல் எஸ்யூவி இந்திய அறிமுகம் எப்பொழுது.!

ஜூலை 15., இந்தியாவில் டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் அறிமுகம்.!

புதிய BMW 2 சீரிஸ் கிரான் கூபே காருக்கான முன்பதிவு துவங்கியது

ரூ.8.94 லட்சம் முதல் மஹிந்திரா XUV 3XO REVX விற்பனைக்கு அறிமுகமானது

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

மஹிந்திரா BE 6, XEV 9e கார்களில் பேக் டூ வேரியண்டில் 79kWh பேட்டரி வெளியானது

அடுத்த செய்திகள்

சிஎன்ஜி ஹூண்டாய் ஆரா செடானில் E வேரியண்ட் அறிமுகம்

ரூ.8.08 லட்சத்தில் ஹூண்டாய் ஆரா S AMT வேரியண்ட் வெளியானது

yamaha fz-x hybrid

ரூ.1.52 லட்சத்தில் FZ-X மைல்டு ஹைபிரிட் ஆப்ஷனை வெளியிட்ட யமஹா

ஹீரோ விடா VX2 Go போட்டியாளர்கள் யார்? விலை, ரேஞ்சு, சிறப்புகள்.!

ஹீரோ விடா VX2 Go போட்டியாளர்கள் யார்? விலை, ரேஞ்சு, சிறப்புகள்.!

ஜூலை 15., வின்ஃபாஸ்ட் VF6, VF7 முன்பதிவு துவங்குகின்றது

ஜூலை 15., வின்ஃபாஸ்ட் VF6, VF7 முன்பதிவு துவங்குகின்றது

propel ev dump truck

ரூ.9.60 லட்சம் வரை எலக்ட்ரிக் டிரக்குகளுக்கு PM e-Drive மானியம் அறிவிப்பு

2025 ஏதெர் 450 இ ஸ்கூட்டர்

ஆகஸ்ட் 30ல் ஏதெர் எலக்ட்ரிக் பைக் கான்செப்ட் அறிமுகமா ?

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan