Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2024 பஜாஜ் பல்சர் N150 மாடலின் விலை, மைலேஜ், சிறப்புகள்

by MR.Durai
19 July 2025, 6:56 pm
in Bajaj
0
ShareTweetSend

Discontinued – பஜாஜ் ஆட்டோ நிறுவன Pulsar N150 பைக்கின் 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் விலை ரூ.1.18 லட்சம் முதல் ரூ.1.24 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  பல்சர் என் 150 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நுட்ப விபரங்கள் மற்றும் சிறப்பு அம்சங்களை அறிந்து கொள்ளலாம்.

2024 Pulsar N150

2024 பஜாஜ் பல்சர் N150

புதுப்பிக்கப்பட்ட பல்சர் என் 150 பைக்கில் இரண்டு வேரியண்டுகள் இடம்பெற்றுள்ளன. ஒன்று அடிப்படையான மாடல் இதில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் அல்லாமல் உள்ள நிலையில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள டாப் வேரியண்டில் டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் ப்ளூடூத் வாயிலாக ஸ்மார்ட்போனை இணைக்கும் வசதி உள்ளது.

பல்சர் என்150 டிசைன்: புராஜெக்டர் எல்இடி ஹெட்லேம்ப் உடன் மேற்பகுதியில் பைலட் லேம்ப் என மிக ஆக்ரோஷமான தோற்றத்தை வழங்குகின்ற பைக்கில் ஸ்போர்ட்டிவான கருப்பு மற்றும் வெள்ளை என இரு நிறங்களை பெற்று சிறப்பான ரைடிங் கையாளுமை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள மாடல் ஸ்போர்ட்டிவ் தோற்றத்தை ஆரம்ப நிலை 150cc சந்தையில் வெளிப்படுத்துகின்றது.

Pulsar N150 எஞ்சின் விபரம்: பல்சரின் என்150 பைக்கில் இடம்பெற்றுள்ள 149.68 cc ஒற்றை சிலிண்டர் 4 ஸ்ட்ரோக் என்ஜின் ஆனது அதிகபட்சமாக 10.66 kW (14.5 PS) 8500 rpm-ல் மற்றும் 6,000rpm-ல் 13.5 Nm டார்க்கை உற்பத்தி செய்கின்றது. இதில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் பெறுகிறது.

Pulsar N150 engine

சஸ்பென்ஷன் மற்றும் சேஸ்: இந்த பைக்கின் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர் உள்ளது.  90/90 – 17 டயருடன் பின்புறத்தில் 120/80 – 17 டயரை பெற்று ட்யூப்லெஸ் ஆக அமைந்துள்ளது. டிஸ்க் பிரேக் 260mm மற்றும் பின்புறத்தில் 230mm டிஸ்க் அல்லது 130 மிமீ டிரம் பிரேக் கொண்டு சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பெற்றுள்ளது.

வேரியண்ட்: பேஸ் வேரியண்டின் ஆனது முந்தைய 2023 மாடலை போலவே அமைந்து பின்புறத்தில் டிரம் பிரேக் பெற்ற செமி அனலாக் கிளஸ்ட்டருடன் வந்துள்ளது.

அடுத்து புதிதாக வந்துள்ள டாப் வேரியண்டில் இருபக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் பெற்று புதிதாக இணைக்கப்பட்டுள்ள ரைட் கனெக்ட் வசதி மூலம் இன்கம்மிங் அழைப்புகளை ஏற்க அல்லது நிராகரிக்கும் வசதி உட்பட மொபைல் தொடர்பான பேட்டரி இருப்பு, சிக்னல், எஸ்எம்எஸ் அலர்ட் அம்சங்கள், பைக்கின் பெட்ரோல் இருப்பு, சராசரி மைலேஜ் விபரம் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். கியர் பொசிஷன் இன்டிகேட்டர், சராசரி மைலேஜ், ரைடிங்கை பொறுத்து தற்பொழுது மைலேஜ் எவ்வளவு கிடைக்கும் உள்ளிட்ட விபரங்களை பெறலாம்.

2024 பஜாஜ் பல்சர் என்150 நுட்பவிபர அட்டவனை

பஜாஜ் பல்சர் N150 Base/Top
எஞ்சின் மற்றும் டிரான்ஸ்மிஷன்
எஞ்சின் வகை சிங்கிள் சிலிண்டர், 4-ஸ்ட்ரோக்
Bore & Stroke –
இடப்பெயர்ச்சி (cc) 149.68 cc
Compression ratio –
குளிரூட்டும் முறை ஏர்
அதிகபட்ச சக்தி 10.66 kW (14.5 PS) @ 8,500 rpm
அதிகபட்ச டார்க் 13.5 Nm @ 6,000 rpm
டிரான்ஸ்மிஷன் வகை  5 ஸ்பீடு
சேஸிஸ் மற்றும் சஸ்பென்ஷன்
சேஸிஸ் வகை ட்யூப்லெர்
முன் சஸ்பென்ஷன் டெலிஸ்கோபிக் ஃபோர்க், 31 மிமீ
பின் சஸ்பென்ஷன் மோனோ ஷாக் அப்சார்பர்
முன் பிரேக் டிஸ்க்  260 மிமீ
பின் பிரேக் டிரம் 130 மிமீ /டிஸ்க்  230 மிமீ
பிரேக்கிங் முறை சிங்கிள் சேனல் ஏபிஎஸ்
வீல் & டயர்
சக்கர வகை அலாய்
முன்புற டயர் 90/90 – 17
பின்புற டயர் 120/80 – 17
பரிமாணங்கள் மற்றும் எடை
நீளம் –
அகலம் –
உயரம் –
வீல்பேஸ் 1,352 மிமீ
இருக்கை உயரம் 790 மிமீ
கிரவுண்ட் கிளியரண்ஸ் 165 மிமீ
எரிபொருள் கொள்ளளவு 14 லிட்டர்
எடை (Kerb) 145 கிலோ
செயல்திறன் மற்றும் மைலேஜ்
அதிகபட்ச வேகம் 115 kmph
மைலேஜ் 45-50 kmpl
பிற அம்சங்கள்
பேட்டரி 12V 8.0Ah
ஸ்டார்டர் வகை எலக்ட்ரிக் செல்ஃப்
கருவிகள் மற்றும் முக்கிய அம்சங்கள் எல்சிடி கிளஸ்ட்டர் பெற்று ரைட் கனெக்ட்மூலம் ஸ்மார்ட்போன் தொடர்பான பல அம்சங்களை பெறலாம்
விலை (எக்ஸ்ஷோரூம்) Base – ₹ 1,17,798 Ride Connect – ₹ 1,24,000

2024 பல்சர் என்150 நிறங்கள்

பல்சர் என்150 பைக் மாடலில் பேரல் மெட்டாலிக் வெள்ளை மற்றும் பிளாக் என இரு நிறங்களை கொண்டுள்ளது.

2024 Bajaj Pulsar N150 on-Road Price in Tamil nadu

பஜாஜின் பல்சர் என்150 பைக்கின் ஆன்ரோடு விலை ரூ. 1.40 லட்சம் முதல் ரூ.1.51 லட்சம் வரை அமைந்துள்ளது.

2024 Bajaj Pulsar N150 Ex-showroom on-road Price
Pulsar N150 ₹ 1,17,798 ₹ 1,40,671
Pulsar N150 Ride connect ₹ 1,24,000 ₹ 1,50,898

(All price Tamil Nadu)

குறிப்பிடப்பட்டுள்ள விலை சென்னை உட்பட அனைத்து தமிழ்நாட்டின் நகரங்களுக்கும் பொருந்தும் கூடுதலாக ஆக்செரீஸ் சேர்க்கப்படும் பொழுது விலை மாறுபடக்கூடும்.

பல்சர் என்150 போட்டியாளர்கள்

150cc-160cc உள்ள யமஹா FZ-S சீரிஸ், சுசூகி ஜிக்ஸர் 155, டிவிஎஸ் அப்பாச்சி RTR 160, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R மற்றும் ஹோண்டா SP160 பைக்குகளை பஜாஜ் பல்சர் N150 பைக் எதிர்கொள்ளுகின்றது.

2024 பஜாஜ் பல்சர் N150 பற்றிய FAQs

பஜாஜ் பல்சர் என்150 எஞ்சின் திறன் என்ன?

149.68 cc ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக பவர் 10.66 kW @ 8500 rpmல் மற்றும் 6,000rpm-ல் 13.5 Nm டார்க் வழங்குகின்றது.

பஜாஜ் பல்சர் N150 பைக்கின் மைலேஜ் எவ்வளவு ?

பல்சர் என்150 பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 45-50 கிமீ வரை கிடைக்கலாம்.

பஜாஜ் பல்சர் N150 ஆன் ரோடு விலை எவ்வளவு ?

2024 பஜாஜ் Pulsar N150 சென்னை ஆன்ரோடு விலை ரூ.1.40 லட்சம் முதல் ரூ.1.51 லட்சம் வரை உள்ளது.

2024 Bajaj Pulsar N150 பைக்கின் போட்டியாளர்கள் யார் ?

150cc-160cc உள்ள யமஹா FZ-S சீரிஸ், சுசூகி ஜிக்ஸர் 155, டிவிஎஸ் அப்பாச்சி, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் மற்றும் ஹோண்டா SP160 பைக்குகளும் உள்ளன.

2024 பஜாஜ் பல்சர் N150 வாங்கலாமா ?

வலுவான பல்சர் பிராண்டின் மதிப்புடன் N150 மாடலின் சிறப்பான ரைடிங் கையாளுமை, பிரேக்கிங் திறன் பெற்றிருக்கின்ற மாடலில் தற்பொழுது டிஜிட்டல் கிளஸ்ட்டர் கூடுதல் அம்சமாக இருக்கின்றது. 45-48 கிமீ தருகின்ற 150cc மாடலாக உள்ள நிலையில் சில பிளாஸ்டிக் பாகங்களின் தரத்தை மேம்படுத்த வேண்டியுள்ளது.

2024 பஜாஜ் பல்சர் என் 150 புகைப்படங்கள்

Related Motor News

2025 யமஹா FZ-S Fi பைக்குகள் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

பஜாஜ் கோகோ எலக்ட்ரிக் ஆட்டோரிக்‌ஷா விலை மற்றும் முக்கிய சிறப்புகள்.!

2025 பஜாஜ் பல்சர் RS 200 பைக்கின் எதிர்பார்ப்புகள் என்ன.?

100% எத்தனாலில் இயங்கும் பஜாஜ் பல்சர் அறிமுகம்

பஜாஜ் சேத்தக் ப்ளூ 3202 ஸ்கூட்டரின் சிறப்புகள்

பஜாஜ் சேட்டக் 3201 SE ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு வெளியானது

2024 bajaj pulsar n150 white
2024 Pulsar N150
2024 bajaj pulsar n150 side view
2024 Pulsar N150
Pulsar N150 engine
2024 bajaj pulsar n150 rear
bajaj pulsar n150 2024
2024 bajaj pulsar n160-and pulsar n150 ride connect app features
Tags: 150cc Bikesbajaj autoBajaj Pulsar N150
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

பல்சர் 125 பைக்

பஜாஜ் பல்சர் 125 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

பல்சர் NS125 விலை

பஜாஜ் பல்சர் NS125 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

2025 பஜாஜ் சேத்தக் 35 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

பஜாஜ் பல்சர் N125 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் விலை, மைலேஜ், சிறப்பு அம்சங்கள்

2025 பஜாஜ் பல்சர் NS200 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பு அம்சங்கள்

2024 பஜாஜ் சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச், சிறப்புகள்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan