Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

டீலருக்கு வந்த 2024 பஜாஜ் பல்சர் F250 பைக்கின் சிறப்புகள்

By MR.Durai
Last updated: 18,May 2024
Share
SHARE

பஜாஜ் பல்சர் F250

விற்பனையில் உள்ள பல்சர் N250 அடிப்படையில் வந்துள்ள 2024 ஆம் ஆண்டிற்கான செமி ஃபேரிங் செய்யப்பட்ட பல்சர் F250 பைக்கில் இடம்பெற்றுள்ள முக்கிய வசதிகளில் குறிப்பாக டிஜிட்டல் கிஸ்ட்டர் மற்றும் கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளுடன் ரூ.1.51 லட்சத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

பல்சர் N250 மற்றும் F250 என இரு பைக்குகளும் ஒரே 250சிசி என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்றன. 249.07cc, SOHC ஆயில் கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 24.5hp மற்றும் 21.5Nm டார்க்கை உருவாக்குகிறது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உடன் ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது.

முன்பக்கத்தில் தொடர்ந்து டெலிஸ்கோபிக் ஃபோர்க் பெற்றுள்ள மாடலின் பின்புற சஸ்பென்ஷன் மோனோஷாக் பெற்றுள்ளது. இரு பக்க டயரில் முன்புறத்தில் 300 மிமீ மற்றும் பின்புறத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றுள்ளது. முந்தைய மாடலில் பின்புறத்தில் இடம்பெற்றிருந்த டயர் மாற்றப்பட்டு தற்பொழுது 140/70-17 டயர் உள்ளது. முன்பறத்தில் வழக்கம் போல 110/70-17 டயர் உள்ளது.

ஆனால் N250 ஏபிஎஸ் ரைட் மோடு மற்றும் டிராக்‌ஷன் கண்ட்ரோல் வசதியை F250 இந்த வசதிகளை பெற்றிருக்கவில்லை என்றே தெரிகின்றது.

பஜாஜ் பல்சர் F250

சமீபத்தில் வந்த அனைத்து பஜாஜ் பல்சர் பைக்குகளிலும் டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் ரைட் கனெக்ட் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த மாடலும் ஸ்மார்ட்போன் தொடர்பான இணைப்புகளை வழங்குகின்றது. பெரும்பாலான டீலர்களுக்கு வந்தடைந்துள்ள பஜாஜ் பல்சர் F250 விலை ரூ.1.51 லட்சத்தில் துவங்கலாம்.

நேக்டூ ஸ்டைல் பெற்ற பல்சர் N250 மாடலில் ஏபிஎஸ் ரைடிங் மோடு, டிராக்‌ஷன் கண்ட்ரோல் வசதி, முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க் போன்ற வசதிகள் பெற்றிருக்கும் நிலையில் F250 இந்த வசதிகளை பெறவில்லை.

image source – youtube/vehicleboss

best 125cc bikes
125சிசி பைக் சந்தையில் ஹோண்டா, ஹீரோ, பஜாஜ் மற்றும் டிவிஎஸ்
ஹீரோவின் கிளாமர் X பற்றி அறிய வேண்டிய 5 அம்சங்கள்
ஹீரோ கிளாமர் X பைக்கின் போட்டியாளர்கள் யார்.?
இந்தியாவின் குறைந்த விலை க்ரூஸ் கண்ட்ரோல் ஹீரோ கிளாமர் எக்ஸ் 125 சிறப்புகள்
ஏதெரின் பட்ஜெட் விலை EL எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியானது
TAGGED:Bajaj PulsarBajaj Pulsar 250Bajaj Pulsar F250
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
ola roadster x electric
Ola Electric
ஓலா ரோட்ஸ்டர் X எலக்ட்ரிக் பைக்கின் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
Honda CB350 H'ness on-road price
Honda Bikes
2025 ஹோண்டா CB350 ஹைனெஸ் விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
2025 honda unicorn 160 onroad price
Honda Bikes
2025 ஹோண்டா யூனிகார்ன் 160 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
2025 Royal Enfield scram 440
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 440 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved