Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2024 பஜாஜ் சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் ஆன்-ரோடு விலை பட்டியல்

by MR.Durai
7 August 2024, 10:14 am
in Bike News
0
ShareTweetSend

chetak electric Scooter on-road Tamilnadu

இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒன்றான விளங்குகின்ற பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் 2024 சேட்டக் எலக்ட்ரிக் மாடலில் தற்பொழுது 2901, அர்பேன், பிரீமியம், மற்றும் 3201 SE என நான்கு விதமான வகைகள் கிடைக்கின்ற நிலையில் இவற்றின் பேட்டரி, ரேஞ்ச் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை தொடர்பான பல்வேறு விபரங்கள் இப்பொழுது நாம் அறிந்து கொள்ள போகின்றோம்.

பொதுவாக ஸ்டீல் பாடி பெற்றுள்ள சேட்டக்கில் அதிகபட்சமாக 73 கிலோமீட்டர் வேகம் மற்றும் 136 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் இந்த மாடல் ஆனது 2.9Kwh, 3.2kwh என இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷனை பெறுகின்றது. கூடுதலாக இதில் கலெக்டிவிட்டி சார்ந்த அம்சங்களை பெறுகின்ற டெக்பேக் பெற்று மொத்தமாக தற்பொழுது எட்டு விதமான வகைகளில் கிடைக்கின்றது.

2024 Bajaj Chetak 2901

துவக்க நிலை மாடலாக கிடைக்கின்ற சேட்டக் 2901 மாடல் அதிகபட்சமாக 123 கிமீ ரேஞ்ச் வழங்கும் என சான்றிதழ் பெறப்பட்டு ஸ்டாண்டர்ட் மற்றும் டெக்பேக் என இரு விதமான வேரியண்டுகளில் 2.88kwh லித்தியம் அயன் பேட்டரி கொண்டு இருக்கின்றது.

பஜாஜ் சேட்டக் Blue 2901

குறிப்பாக இந்த மாடலில் வழக்கமான பிசிக்கல் கீ ஆனது கொடுக்கப்பட்டு குறைந்த அளவிலான கணக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை மட்டுமே பெறுகின்றது மேலும் இதனுடைய சார்ஜிங் நேரமானது அதிகபட்சமாக 6 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இதில் டெக் பேக் கொண்ட மாடலில் இரண்டு விதமான ரைடிங் மோடுகள் ஈகோ மற்றும் ஸ்போர்ட்ஸ் பெற்றிருந்தாலும் இந்த இரண்டு பேரியண்டின் அதிகபட்ச வேகமே மணிக்கு 63 கிமீ ஆக மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது.

சிங்கிள் சார்ஜில் ஈக்கோ மோடில் உண்மையான பயணிக்கும் ரேஞ்ச் 70-85 கிமீ வரை வழங்குவதாக பயனர்களின் தரவுகளின் படி குறிப்பிட்டு உள்ளேன். சேட்டக் 2901 ஸ்கூட்டரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ. ₹ 95,998  முதல் ₹ 98,998 வரை உள்ளது.

2024 Chetak 2901 Specification Chetak 2901 Chetak 2901 Tecpac
பேட்டரி பேக் 2.88 kWh 2.88 kWh
பவர் 4kw 4kw
டார்க் – –
டாப் ஸ்பீடு 63 km/h 63 km/h
ரேஞ்ச் (claimed) 123 km 123 km
ரைடிங் மோடு Eco Eco, Sport

2024 சேட்டக் 2901 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை ₹ 1,09,057  முதல் ₹ 1,12,576 வரை கிடைக்கும்.

chetak blue 2901 escooter features

2024 Bajaj Chetak Urbane

சேட்டக் அர்பேன் இ-ஸ்கூட்டரில் 2.9Kwh லித்தியம் பேட்டரி ஆனது முழுமையாக சார்ஜ் செய்ய அதிகபட்சமாக 4 மணி நேரம் 50 நிமிடங்கள் வரை தேவைப்படும். 650 kW போர்டெபிள் சார்ஜ் ஆனது வழங்கப்படுகின்றது.

2024 bajaj chetak escooter

கீ ஃபாப் பெற்றுள்ள அர்பேன் இ-ஸ்கூட்டரின் அதிகபட்சமாக 113 கிமீ ரேஞ்ச் வழங்கும் என சான்றிதழ் பெறப்பட்டு ஸ்டாண்டர்ட் மற்றும் டெக்பேக் என இரு விதமான வேரியண்டுகளில் கிடைக்கின்றது. இதில் டெக்பேக் கொண்ட மாடலில் ஈகோ மற்றும் ஸ்போர்ட்ஸ் என இரண்டு விதமான ரைடிங் மோடுகள் பெற்றிருக்கின்றது.

சிங்கிள் சார்ஜில் ஈக்கோ மோடில் உண்மையான பயணிக்கும் ரேஞ்ச் 85 கிமீ வரை வழங்குவதாக பயனர்களின் தரவுகளின் படி தெரிவிக்கப்பட்டுள்ளது. சேட்டக் அர்பேன் ஸ்கூட்டரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ. ₹ 1,23,319  முதல் ₹ 1,31,319 வரை உள்ளது.

2024 Chetak Urbane Specification Chetak Urbane Chetak urbane Tecpac
பேட்டரி பேக் 2.9 kWh 2.9 kWh
பவர் 4kw 4kw
டார்க் – –
டாப் ஸ்பீடு 63 km/h 73 km/h
ரேஞ்ச் (claimed) 113 km 113 km
ரைடிங் மோடு Eco Eco, Sport

2024 சேட்டக் அர்பேன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை ₹ 1,32,057  முதல் ₹ 1,42,076 வரை கிடைக்கும்.

chetak urbane

2024 Bajaj Chetak Premium

126 கிமீ பயணிக்கும் தொலைவினை கொண்டுள்ள சேட்டக் பிரீமியம் 2024 மாடலில் டிஎஃப்டி கிளஸ்டர் ஆனது கனைக்டிவிட்டி சார்ந்த அம்சங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது. கூடுதலாக டெக்பேக் பல்வேறு கனெக்டிவிட்டி அம்சங்களைக் கொண்ட டாப் வேரியண்டாக இந்த மாடல் அமைந்துள்ளது.

chetak premium

மணிக்கு அதிகபட்சமாக 73 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறனுடன் 4 மணி நேரம் 30 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஏறும் திறனை இதன் 3.2kwh லித்தியம் அயன் பேட்டரி கொண்டிருக்கிறது.

சிங்கிள் சார்ஜில் ஈக்கோ மோடில் உண்மையான பயணிக்கும் ரேஞ்ச் 100 கிமீ வரை வழங்குவதாக பயனர்களின் தரவுகளின் படி தெரிவிக்கப்பட்டுள்ளது. சேட்டக் பிரீமியம் ஸ்கூட்டரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ. ₹ 1,47,243  முதல் ₹ 1,56,243 வரை உள்ளது.

2024 Chetak Premium Specification Chetak Premium Chetak Premium Tecpac
பேட்டரி பேக் 3.2 kWh 3.2 kWh
பவர் 4kw 4kw
டார்க் – –
டாப் ஸ்பீடு 73 km/h 73 km/h
ரேஞ்ச் (claimed) 126 km 126 km
ரைடிங் மோடு Eco Eco, Sport

2024 சேட்டக் பிரீமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை ₹ 1,58,257  முதல் ₹ 1,67,716 வரை கிடைக்கும்.

Related Motor News

குறைந்த விலையில் 127கிமீ ரேஞ்ச் வழங்கும் பஜாஜ் சேட்டக் 3001 வெளியானது

பஜாஜின் சேட்டக் 3503 ரூ.1.10 லட்சத்தில் விற்பனைக்கு வெளியானது

பஜாஜின் சேத்தக் 35 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வேரியண்ட் வாரியான வசதிகள்.!

டிசம்பர் 20ல் பஜாஜ் சேட்டக் 2025 விற்பனைக்கு அறிமுகமாகிறது

ஹீரோ விடா V2 பிளஸ், V2 புரோ, V2 லைட் ஸ்கூட்டர்களின் பேட்டரி, ரேஞ்ச் விபரம்.!

ஹோண்டா QC1 எலெக்ட்ரிக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

2024 Bajaj Chetak 3201 SE

சேட்டக் பிரீமியம் அடிப்படையில் வெளியிடப்பட்டிருக்கின்ற 3201 SE மாடல் 3.2kwh லித்தியம் அயன் பேட்டரி அதிகபட்சமாக 136 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

chetak 3021 se

மணிக்கு அதிகபட்சமாக 73 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறனுடன் 5 மணி நேரம் 30 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஏறும் திறனுடன் ஒற்றை கருப்பு நிறத்தில் மட்டும் கிடைக்கின்ற சேட்டக் 3201 ஸ்கூட்டரில் பாடி கிராபிக்ஸ் Chetak என்ற பேட்ஜ் கொடுக்கப்பட்டு வீல்களிலும் ஸ்டிக்கரிங் செய்யப்பட்டு இருக்கையில் டெஸ்ச்சர் உள்ளது.

ஈக்கோ மோடில் உண்மையான பயணிக்கும் ரேஞ்ச் 105-110 கிமீ வரை வெளிப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், சேட்டக் 3201 எஸ்இ ஸ்கூட்டரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ. ₹ 1,28,774  முதல் ₹ 1,37,774 வரை உள்ளது. அமேசானில் மட்டும் விற்பனைக்கு கிடைக்கின்றது.

2024 Chetak 3201 SE Specification Chetak 3201 SE Chetak 3201 SE
பேட்டரி பேக் 3.2 kWh 3.2 kWh
பவர் 4kw 4kw
டார்க் – –
டாப் ஸ்பீடு 73 km/h 73 km/h
ரேஞ்ச் (claimed) 136 km 136 km
ரைடிங் மோடு Eco Eco, Sport

2024 சேட்டக் 3201 SE எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை ₹ 1,39,757  முதல் ₹ 1,41,176 வரை கிடைக்கும்.

பொதுவாக இந்த மாடல்களில் டியூப்லெர் ஸ்டீல் சேஸ் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள சேட்டக் ஸ்கூட்டரில் முன்புறத்தில் ஒற்றை பக்க ஃபோர்க் மற்றும் மோனோ ஷாக் அப்சார்பர் பின்புறத்தில் கொடுக்கப்பட்டு, முன்புறத்தில் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக்குடன், முன் சக்கரங்களின் 90/90-12 மற்றும் பின்புறத்தில் 90/100-12 பெற்று ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டத்தை பெறுகின்றது.

கொடுக்கப்பட்டுள்ள ஆன்ரோடு விலையில் எவ்விதமான கூடுதல் ஆக்செரீஸ் சேர்க்கப்படவில்லை.

onroad price Tamil Nadu updated – 07-08-2024

Tags: Bajaj ChetakElectric Scooter
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

global spec ktm 390 enduro r

ரூ.3.54 லட்சத்தில் சர்வதேச கேடிஎம் 390 Enduro R விற்பனைக்கு வந்தது

KTM 390 அட்வென்ச்சர் X

புதிய வசதிகளுடன் கேடிஎம் 390 அட்வென்ச்சர் X+ விற்பனைக்கு வந்தது

2025 பஜாஜ் பல்சர் NS400Z பைக்கின் முக்கிய மாற்றங்கள் என்ன.!

இந்தியாவில் 2025 டிரையம்ப் Trident 660 விற்பனைக்கு வெளியானது

ரூ.44,990 விலையில் விடா VX2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாமா..!

2025 பஜாஜ் டோமினார் 400, டோமினார் 250 விற்பனைக்கு வெளியானது

புதிய வசதிகளுடன் 2025 பஜாஜ் டோமினார் 400, டோமினார் 250 டீசர் வெளியானது

புதிய ஐக்யூப் 3.1 வேரியண்டை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்

கூடுதலாக ஏதெர் ரிஸ்டா இ-ஸ்கூட்டரில் S 3.7Kwh வேரியண்ட் வெளியானது

யமஹா ரேஇசட்ஆர் 125 ஹைபிரிட் ஸ்கூட்டருக்கு ரூ.10,010 வரை தள்ளுபடி சலுகை.!

அடுத்த செய்திகள்

Renault Boreal suv in tamil

7 இருக்கை ரெனால்ட் போரியல் எஸ்யூவி இந்திய அறிமுகம் எப்பொழுது.!

global spec ktm 390 enduro r

ரூ.3.54 லட்சத்தில் சர்வதேச கேடிஎம் 390 Enduro R விற்பனைக்கு வந்தது

டெஸ்லா

ஜூலை 15., இந்தியாவில் டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் அறிமுகம்.!

கேரன்ஸ் கிளாவிஸ்.இவி., K-Charge பிளாட்ஃபார்ம் அறிமுகம் செய்த கியா இந்தியா

கேரன்ஸ் கிளாவிஸ்.இவி., K-Charge பிளாட்ஃபார்ம் அறிமுகம் செய்த கியா இந்தியா

new BMW 2 Series Gran Coupe

புதிய BMW 2 சீரிஸ் கிரான் கூபே காருக்கான முன்பதிவு துவங்கியது

KTM 390 அட்வென்ச்சர் X

புதிய வசதிகளுடன் கேடிஎம் 390 அட்வென்ச்சர் X+ விற்பனைக்கு வந்தது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan