லம்போர்கினி கல்லார்டோ ஸ்போர்ட்ஸ் காரை சிறிய ரேஸ் காராக மாற்றி லம்போர்கினி வருகிற பிராங்ஃபர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்ய உள்ளதை உறுதிபடுத்தியுள்ளது.லம்போ சூப்பர் ட்ரோஃபியா பேஸ் காரில் உள்ள 5.2 லிட்டர் வி10 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் குதிரைதிறன் 570 ஆகும். 6 வேக கியர் பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. மிக எடை குறைவான கார்பன் ஃபைபரால் கட்டமைக்கப்பட்டுள்ளதால் மிகவும் எடை குறைவாக இருக்கும்.0-96 கிமீ வேகத்தினை தொட 3.4 நொடிகளை மட்டுமே எடுத்துகொள்கின்றது. லம்போ கல்லார்டோ எல்பி 570-4 ஸ்குவாட்ரா கார்ஸ் காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 320கிமீ ஆகும்.
Author: MR.Durai
ரெனோ டஸ்டர் எஸ்யூவியை அடிப்படையாக கொண்ட நிசான் டெரானோ வருகிற ஆகஸ்ட் 20 அறிமுகம் செய்ய உள்ளதை நிசான் உறுதிப்படுத்தியுள்ளது.டஸ்டரை அடிப்படையாக கொண்ட டெரானோ டஸ்டரை விட ரூ.50000 முதல் 75000 வரை கூடுதலான விலையில் இருக்குமாம். டஸ்டரை விட கூடுதலான வசதிகளை டெரானோ கொண்டிருக்கும். வருகிற அக்டோபர் முதல் விற்பனைக்கு வரும்.
ஹோண்டா அமேஸ் செடான் காரின் காத்திருப்பு காலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால் உற்பத்தியை அதிகரிக்க ஹோண்டா திட்டமிட்டுள்ளது. எனவே இதன் மூலம் மாதம் 5500 கார்கள் வரை தயாரிக்க உள்ளது. தற்பொழுது மாதம் 5000 அமேஸ் கார்களை தயாரிக்கின்றது.கிரேட்டர் நொய்டா ஆலையின் மூன்றாவது ஸ்ஃபிட்டிலும் அமேஸ் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளதால் காத்திருப்பு காலம் 5 மாதத்தில் இருந்த மூன்றாக குறையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சுசூகி நிறுவனம் புதிய காம்பெக்ட் எஸ்யூவி வருகிற பிராங்ஃபர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகப்படுத்த உள்ளதை உறுதிசெய்யும் வகையில் டீசர் படங்களை வெளியிட்டுள்ளது.கடந்த 2011 ஆம் ஆண்டில் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்கப்பட்ட எக்ஸ்ஏ ஆல்ஃபா எஸ்யூவி காரை ஒத்திருப்பதால் இதே எஸ்யூவி அடுத்த ஆண்டு மாருதி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரலாம்.இந்த புதிய மினி எஸ்யூவி காரின் பெயர் ஐவி-4 என சுசூகி பெயரிட்டுள்ளது. இந்த எஸ்யூவி ரெனோ டஸ்டர், ஈக்கோஸ்போர்ட் , போன்ற கார்களுக்கு மாபெரும் சவாலினை தரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் ஃபோர்ஸ் ஒன் எஸ்யூவி காரில் இரண்டு புதிய வேரியண்ட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இஎக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ் வேரியண்ட்கள் விற்பனைக்கு வந்துள்ளன.ஃபோர்ஸ் ஒன் எஸ்யூவி இரண்டு ஆண்டுகளுக்கு முன் விற்பனைக்கு வந்தது. இதுவரை 2600 கார்களுக்கு மேல் விற்பனை செய்துள்ளது. தற்பொழுது இரண்டு புதிய மாறுபட்டவைகளை அறிமுகம் செய்துள்ளனர்.இஎக்ஸ் வேரியண்ட்டில் 2596சிசி டர்போ டீசல் என்ஜின் பொருத்தபட்டுள்ளது. 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர். பவர் ஸ்டீயரீங் சென்ட்ரல் லாக்கிங், ஏசி, பனி விளக்குகள் கொண்டுள்ள இஎக்ஸ் மாறுபட்டவை டாக்ஸி சந்தையை குறிவைத்து களமிறக்கியுள்ளனர்.எஸ்எக்ஸ் மாறுபட்டவை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2.2 லிட்டர் ஒஎம்611 காமன் ரெயில் என்ஜின் பொருத்தியுள்ளனர். இது பிஎஸ் 4 என்ஜின் ஆகும். இவற்றில் ஏபிஎஸ், இபிடி போன்ற வசதிகளை கொண்டுள்ளது.மேலும் மிக விரைவில் எல்எக்ஸ் என்ற மாறுபட்டவை 4×4 டிரைவ் போன்ற வசதிகளுடன் பல பாதுகாப்பு வசதிகளுடன் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.ஃபோர்ஸ் ஒன் எஸ்யூவி…
மெர்சிடிஸ் பென்ஸ் இ சீரிஸ் காரின் மிகுந்த சக்தி வாய்ந்த இ63 ஏஎம்ஜி செடான் கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இ63 ஏஎம்ஜி காரின் விலை ரூ.1.29 கோடியாகும்.இ63 ஏஎம்ஜி காரில் மிகுந்த சக்தி வாயந்த 5.5 லிட்டர் டிவின் டர்போ வி8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 557பிஎச்பி மற்றும் டார்க் 720என்எம் ஆகும். முந்தைய இ63 ஏஎம்ஜி காரை விட கூடுதலாக 37பிஎச்பி ஆற்றல் கிடைக்கும். 7 ஜி வேக ட்ரானிக் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.இ63 ஏஎம்ஜி காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 250கிமீ ஆகும்.முந்தைய இ63 காரைவிட ஸ்டைல் போன்றவற்றில் பல மாற்றங்களை பென்ஸ் கொடுத்துள்ளது. மிக ஸ்டைலான முகப்பு மேலும் மேம்படுத்தப்பட்ட சொகுசு வசதிகளுடன் வந்துள்ளது. சக்கரங்களில் ஏஎம்ஜி முத்திரை பொறிக்கப்பட்டுள்ளது.மெர்சிடிஸ் பென்ஸ் இ63 ஏஎம்ஜி காரின் விலை ரூ 1.29 கோடி(டெல்லி விலை)