ரெனோ டஸ்டர் காம்பெக்ட் எஸ்யூவி வாடிக்கையாளர்களின் விருப்பத்தின் பெயரில் ஆர்எக்ஸ்இசட் டாப் வேரியண்டில் பின்புற ஏசி வென்ட் நீக்கிவிட்டு மேலும் சில வசதிகளை சேர்த்து ஆர்எக்ஸ்இசட் ப்ளஸ் என்ற வேரியண்ட்டினை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.ஆர்எக்ஸ்இசட் ஆப்ஷன் வேரியண்ட்டை விட ரூ.5000 குறைவான விலையில் புதிய ஆர்எக்ஸ்இசட் ப்ளஸ் கிடைக்கும். மேலும் இவற்றில் உள்ள கூடுதல் வசதிகள் லெதர் இருக்கைகள், சாட்நவ் நேவிகேஷன் சிஸ்டமும், ஃபாக்ஸ் வுட் பினிஷிங்கும் ஆர்எக்ஸ்இசட் ப்ளஸ் மாறுபட்டவையில் கிடைக்கும்.ரெனோ டஸ்டர் ஆர்எக்ஸ்இசட் ப்ளஸ் விலை ரூ.12.13லட்சம்(டெல்லி எக்ஸ்ஷோரூம்)
Author: MR.Durai
ஃபோர்டு ஃபிகோ விற்பனைக்கு வந்த 3 ஆண்டுகளில் 3 லட்சம் கார்களை விற்பனை செய்து புதிய சாதனையை எட்டியுள்ளது. இந்தியா மட்டுமல்லாது 37 அயல்நாடுகளிலும் ஃபிகோ விற்பனை செய்யப்படுகின்றது.ஃபோர்டு ஃபிகோ காரின் வளர்ச்சி ஃபோர்டு நிறுவனத்தை தனிப்பட்ட அடையாளத்தை தொடர்ந்து உறுதி செய்து வருகின்றது. மேலும் பல புதிய டீலர்ஷிப்களை திறக்க திட்டமிட்டுள்ளது.வருகிற 2015 ஆம் ஆண்டிற்க்குள் 500 டீலர்ஷிப்கள் மற்றும் சிறப்பான சர்வீஸ் வழங்க திட்டமிட்டுள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் ஐ10 மற்றும் ஐ20 காருக்கு இடையிலான காரினை சோதனை செய்து வந்தது. தற்பொழுது அந்த காருக்கான பெயர் மற்றும் படங்களை வெளியிட்டுள்ளது. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 என பெயரிடப்பட்டுள்ள இந்த காரனது வருகிற செப்டம்பர் மாத முதல் வாரத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் கிராண்ட் ஐ10 பெட்ரோல் காரின் விலை ரூ.4 லட்சம் மற்றும் டீசல் காரின் விலை ரூ.5 லட்சத்தில் தொடங்கலாம்.புதிய 1.1 லிட்டர் 3சிலிண்டர் கொண்ட டீசல் என்ஜின் பொருத்த வாய்ப்புள்ளது. இந்த என்ஜின் 70எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். மேலும் ஐ10 காரில் உள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் கப்பா என்ஜின் பொருத்தப்படலாம்.
மத்திய அரசு குவாட்ரிசைக்கிள் என்ற புதிய பிரிவு வாகனங்களுக்கான அனுமதி வழங்கியுள்ளது. இதற்க்கான தனிப்பட்ட விதிகளை வகுத்துள்ளது. மேலும் வருகிற அக்டோபர் 13 முதல் குவாட்ரிசைக்கிள் சாலைகளில் இயங்கும்.குவாட்ரிசைக்கிள் விதிமுறைகள்1. குவாட்ரிசைக்கிள் வாகனங்களில் “Q” வார்த்தை பெரிய அளவுகளில் முன்னால் எழுதியிருக்க வேண்டும்.2. நெடுஞ்சாலைகளில் இயக்ககூடாது. கிராமங்கள் மற்றும் நகரங்களில் மட்டுமே இயக்க வேண்டும்.3. குவாட்ரிசைக்கிளின் உச்சகட்ட வேகம் மணிக்கு 70கிமீ மட்டுமே.4. பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.5. பயணிகளுக்கான வாகனத்தில் டிரைவருடன் சேர்த்து 4 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. மேலும் சரக்கு வாகனத்தில் டிரைவருடன் சேர்த்து 2 நபர்கள் மட்டுமே பயணிக்க வேண்டும்.6. பயணிகளுக்கான குவாட்ரிசைக்கிள் 450கிலோ எடை மட்டுமே இருத்தல் அவசியம் சரக்கு வாகனங்களின் எடை 550 கிலோ மட்டுமே இருக்க வேண்டும்.பஜாஜ் நிறுவனம் இந்தியாவில் முதன்முறையாக குவாட்ரிசைக்கிளை விற்பனைக்கு கொண்டு வருகின்றது. இதனை தொடர்ந்து மஹிந்திரா, டாடா, பியாஜியோ போன்ற நிறுவனங்களும் களமிறக்கலாம்.ஆட்டோரிக்ஷாவிற்க்கு மாற்றாக…
மாருதி ஆல்டோ 800 காரின் விஎகஸ்ஐ வேரியண்ட் கூடுதல் வசதிகளுடன் ஜூன் மாதம் விற்பனைக்கு வந்தது. தற்பொழுது காற்றுப்பைகள் ஆப்ஷனலாக விற்பனைக்கு வந்துள்ளது.சென்ட்ரல் லாக்கிங், ஃபுல் வீல் கவர்கள், அனைத்து கதவுகளிலும் பவர் விண்டோ, ரியர் ஸ்பாய்லர், ஆகியவை கூடுதலாக விஎக்ஸ்ஐ வேரியண்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தன. மேலும் 4 ஸபீக்கருடன் மற்றும் ஸ்டீரியோவுடன் கூடிய யூஎஸ்பி இணைப்பு, இடதுபுற ரியர் வியூ கண்ணாடி, மற்றும் காற்றுப்பைகள்.ஆல்டோ 800 விஎக்எஸ்ஐ வேரியண்டில் காற்றுப்பைகள் ஆப்ஷனலாக பொருத்திக்கொள்ளலாம். இதன் மதிப்பு ரூ.18000 ஆகும். சென்னை விலை ரூ3.93 லட்சம் ஆகும்.
ஜாகுவார் நிறுவனம் முதல் எஸ்யூவி காரினை களமிறக்க உள்ளது வாகனவியல் துறையினர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பினை தூண்டியுள்ளது. வருகிற பிராங்ஃபர்ட் மோட்டார் ஷோவில் தன்னுடைய முதல் எஸ்யூவி காரை பார்வைக்கு வைக்க உள்ளது.ஜாகுவார் எஸ்யூவி காரின் பெயர் குறித்து முழுமையான விவரங்கள் தெரியவில்லை. ஆனால் க்யூ டைப் அல்லது எஸ்க்யூ டைப் என்ற பெயரில் இருக்கலாம். ஜாகுவார் எக்ஸ்ஜே காரின் பிளாட்பாரத்தில் உருவாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.4 வீல் டிரைவ் கொண்டிருக்கும். இதன் என்ஜின் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் 2.0 லிட்டர் ட்ர்போ சார்ஜ்டு டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம். மேலும் லேண்ட் ரோவர் எவோக் கார்களில் பொருத்தப்பட்டுள்ள 2.2 லிட்டர் மற்றும் 3.0 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம்.