Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

2005 முதல் 2013 வரை தயாரிக்கப்பட்ட பிஎஸ் 3 மற்றும் பிஎஸ் 4 என இரண்டிலும் விற்பனை செய்யப்பட்ட 1.14 லட்சம் செவர்லே தவேரா கார்களை மாசுக் கட்டுப்பாடு பிரச்சனைகளின் காரணமாக ஜிஎம் திரும்ப பெறுகின்றது.பிஎஸ் 3யில் 2.5 லிட்டர் என்ஜினும் பிஎஸ் 4 யில் 2.0 லிட்டர் என்ஜினும் திரும்ப பெறப்படுகின்றது. மாசுக் கட்டப்பாடு விதிகளை சரிவர பூர்த்தி செய்ய தவறிவிட்டதால் இவற்றை மட்டும் திரும்ப பெறுகின்றது.கடந்த மாதம் முதல் தவேரா, செயில் யுவா, போன்ற கார்களின் உற்பத்தியை தற்காலிகமாக செவர்லே நிறுத்தி வைத்துள்ளது. இந்த வாரம் இவற்றின் உற்பத்தியை தொடங்க உள்ளதாம்.

Read More

மாருதி சுசூகி எஸ்எக்ஸ்4 மற்றும் டொயோட்டா கரோல்லா அல்டிஸ் கார்களுக்கு வரியை திரும்ப பெற்றுள்ளனர். பொது பட்ஜெட்டில் 1500சிசி மேலும் 4 மீட்டருக்கு அதிகமான நீளம் மற்றும் 170மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ள கார்களுக்கு 27 சதவீத வரியில் இருந்து 30 சதவீத வரியாக உயர்த்தப்பட்டது. இவை எஸ்யூவி கார்களுக்கான வரி உயர்வு என சொல்லப்பட்டாலும் சில செடான் வகை கார்களும் சிக்கின.தற்பொழுது சுசூகி எஸ்எக்ஸ்4 மற்றும் கரோல்லா அல்டிஸ் கார்களுக்கான வரியை திரும்ப பெற்றுள்ளனர்

Read More

இந்திய கார்களின் தனிப்பட்ட அடையாளமாக கருதப்படுகிற அம்பாசடர் புதிய பொலிவுடன் விரைவில் விற்பனைக்கு வருவதனை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் சிஇஒ உத்தம் போஸ் உறுதிசெய்துள்ளார்.சில பத்தாண்டுகளுக்கு முன் இந்திய சாலைகளின் ஆக்கரிமித்திருந்த அம்பாசடர் பல வெளிநாட்டு நிறுவனங்களின் வருகை மற்றும் அவற்றின் வடிவமைப்பு போன்ற காரணங்களால் அம்பாசடர் சந்தையை வெகுவாக இழந்தது. ஆனாலும் இன்று தனியான அடையாளத்துடனே விளங்குவதனை மறுப்பதற்க்கில்லை..அம்பாசடர் என்ற பெயரில் இனைப்பாக பெயரை இனைத்து புதிய அம்பாசிடர் நாட்ச்பேக் காரை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. புதிய அம்பி இன்றைய நவீன கார்களுக்கு இனையான கட்டமைப்பு மற்றும் வசதிகளுடன் விளங்கும். இதனால் இளைய வாடிக்கையாளர்களையும் வெகுவாக கவரமுடியும் என உத்தம் போஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.மேலும் அம்பாசடர் கார்களுக்கு நைஜீரியா மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்தும் ஆர்டர்களை பெற்றுள்ளதால் அடுத்த மாதம் முதல் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளனர்.இந்தியாவின் அடையாளம் புதிய பொலிவுடன் வெளிவருவதனை காண காத்திருப்போம்…விரைவில்

Read More

யமஹா ரே ஸ்கூட்டரில் ஸ்டீயரீங் இயக்குவதில் உள்ள நுட்பக் கோளாறை சரி செய்வதற்க்காக 56,082 ரே ஸ்கூட்டர்களை யமஹா திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.ஸ்டீயரீங் ஹைன்டில் பாரில் வெல்டிங் செய்யப்பட்டுள்ள இடங்களில் சிறப்பான வலிமை இல்லாமல் இருக்கின்றதாம். இதனால் ஸ்டீயரிங் கட்டப்பாடு சிறப்பாக இல்லை என பல கட்ட சோதனைகளில் யமஹா உறுதிசெய்துள்ளதாம். எனவே இதுபோன்ற பிரச்சனைகளில் பாதிக்கப்பட்ட 56,082 ஸ்கூட்டர்களை மட்டும் திரும்ப பெறுகின்றது.ரே இசட் ஸ்கூட்டரில் எவ்விதமான பிரச்சனைகளும் இல்லை என்பதனை யமஹா நிறுவனம் உறுதிசெய்துள்ளது.

Read More

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி காரின் காத்திருப்பு காலம் தினமும் அதிகரித்து வருகின்றதாம். மிக சிறப்பான விலையில் விற்பனைக்கு வந்துள்ள ஈக்கோஸ்போர்ட் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.விற்பனைக்கு வந்த 17 நாட்களில் 30000 முன்பதிவுகளை ஈக்கோஸ்போர்ட் கடந்துள்ளது. டீசல் கார்களுக்கு பேஸ் வேரியண்ட் ஆம்பியன்ட்டிற்க்கு 2 மாதங்கள் டிரென்ட் வேரியண்ட்டிற்க்கு 3 மாதங்கள் வரை டைட்டானியத்திற்க்கு 6 மாதங்கள் வரையும் டைட்டானியம் ஆப்ஷன் மாடலுக்கு 9 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும்.பெட்ரோல் ஈக்கோஸ்போர்ட் கார்களுக்கு 40 நாட்களை வரை காத்திருக்க வேண்டும்..ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பற்றிய முழு விபரங்களை அறிய கீழே கிளிக் செய்யவும்..ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

Read More

2014 ஹோண்டா ஜாஸ் காரின் அதிகார்வப்பூர்வ படங்களை ஹோண்டா வெளியிட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் விற்பனை குறைவின் காரணமாக தற்காலிகமாக ஜாஸ் உற்பத்தியை ஹோண்டா நிறுத்தியது.வரவிருக்கும் மூன்றாம் தலைமுறை ஜாஸ் காரில் வடிவமைப்பில் பல மாற்றங்களை தந்துள்ளனர். முந்தைய மாடலை விட முகப்பில் பல மாற்றங்களை தந்துள்ளது. மேலும் பின்புற காம்பினேஷன் போன்றவற்றிலும் மாறுதல்களை தந்துள்ளது.மிக சிறப்பான இடவசதி கொண்ட காராக ஜாஸ் தாராளமாக விளங்கும் என்பதில் எவ்விதமான மாற்றுக்கருத்துமிருக்காது. மேலும் மிக சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை தரக்கூடிய ஹைபிரிட் காராக ஜாஸ் ஜப்பானில் விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல இந்தியாவிலும் விற்பனை செய்யப்படலாம்.ஜாஸ் காரின் மிக பெரும் குறையாக இருந்து வந்த டீசல் என்ஜின் இல்லாத குறையை ஹோண்டா நிவர்த்தி செய்யப்போகின்றது. 2014 ஜாஸ் காரில் அமேஸ் காரில் பயன்படுத்தப்பட்ட 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.ஹேட்ச்பேக் சந்தையில் மிக பெரிய சவாலைத் தரக்கூடிய விலையில் ஹோண்டா ஜாஸ்…

Read More