டொயோட்டா நிறுவனத்தின் மிக பிரபலமான எம்பிவி இன்னோவா கார் 4 லட்சம் என்ற விற்பனை எட்டியுள்ளது. இதனை கொண்டாடும் வகையில் குரோம் பூச்சு கொண்ட ஆக்ச்சரீ பேக்கினை ரூ.31000 விலையில் அறிமுகம் செய்துள்ளது.இந்த குரோம் பூச்சு இன்னோவா ஜிஎக்ஸ் வேரியண்டில் மட்டுமே கிடைக்கும். பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் கிடைக்கும். இந்த பேக் அனைத்து டீலர்களிடமும் கிடைக்கும்.கடந்த 2005 ஆம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு வந்த இன்னோவா 4லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது.
Author: MR.Durai
அமெரிக்காவின் எரிக் புயெல் ரேஸிங் நிறுவனத்திடமிருந்து தொழில்நுட்ப விவரங்களை பெற்றுவந்த ஹீரோ மோட்டோகார்ப் தற்பொழுது எரிக் புயெல் ரேஸ் நிறுவனத்தின் 49.2 சதவீத பங்குகளை கைப்பற்றியுள்ளது.ஹோண்டா மற்றும் ஹீரோ பிரிந்த பின்னர் தொழில்நுட்ப உதவிகளுக்காக கடந்த 2012 ஆம் ஆண்டு எரிக் புயெல் நிறுவனத்துடன் ஹீரோ கைகோர்த்தது. 49.2 % பங்குகளின் மொத்த மதிப்பு 25 மில்லியன் டாலர்கள் ஆகும். இவற்றில் 15 மில்லியன் டாலர்களை ஹீரோ செலுத்திவிட்டது. மீதமுள்ள 10 மில்லியன் டாலர்கள் இன்னும் 9 மாதங்களில் செலுத்த உள்ளது.ஹீரோ மற்றும் எரிக் புயெல் கூட்டணியில் புதிய ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்கள் வெளிவரும்
புதிய நிசான் மைக்ரா பல புதிய வசதிகளுடனும் மிக குறைந்த விலையிலான புதிய மைக்ரா ஆக்டிவ் என்ற பெயரில் ரூ.3.50 லட்சத்தில் மைக்ரா ஆக்டிவ் பெட்ரோல் என்ஜினில் மட்டுமே கிடைக்கும்.பழைய மைக்ராவின் சாயலிலே உள்ள மைக்ரா ஆக்டிவ் ஒரு சில முன்புற மாற்றங்களை மட்டுமே கொண்டுள்ளது. 4 விதமான வேரியண்ட்டில் ஆக்டிவ் கிடைக்கும்.புதிய 2013 மைக்ராவில் பல அம்சங்களை இனைத்துள்ளது. எல்இடி டெயில் விளக்குகள், புதிய வண்ணத்தில் சென்ட்ரோல் கன்சோல், இருக்கை வசதிகள் மேம்படுத்தியுள்ளனர், கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, கீலெஸ் என்ட்ரி, புளூடூத், யுஎஸ்பி, 2 டின் ஆடியோ அமைப்பு, ரிவர்ஸ் கேமரா, ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல் சுவிட்சுகள் போன்ற வசதிகளை கொண்டுள்ளது.1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 65பிஎஸ் மற்றும் டார்க் 160என்எம் ஆகும். 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது.1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 75பிஎஸ் மற்றும் டார்க் 104என்எம் ஆகும்.…
ஆடி நிறுவனம் 2013 ஆர்எஸ் 5 கூபே காரை ரூ.95.28 லட்சத்தில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. புதிய ஆடி ஆர்எஸ்5 காரில் எவ்விதமான என்ஜின் மாற்றங்களும் இல்லை ஆனால் வடிவமைப்பில் சில மாற்றங்களும் கூடுதல் வசதிகளையும் 2013 ஆர்எஸ் 5 கொண்டுள்ளது.முழுமையாக கட்டமைக்கப்படு இறக்குமதி செய்யப்படும் ஆர்எஸ் 5 கூபே காரில் உள்ள மாற்றங்கள் முகப்பு கிரில் , புதிய வடிவத்தில் பானட், முன் மற்றும் பின்புற பம்பர்கள், எல்இடி டெயில் விளக்குகள், பகல் நேரத்தில் ஒளிரும் விளக்குகள், நேவிகேஷன் அமைப்பு, ஐ பாட் தொடர்பு, மிக சிறப்பான ஸ்போர்டிவ் சஸ்பன்ஷன் போன்றவைகள் அடங்கும்.4.2 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 444பிஎச்பி மற்றும் டார்க் 430என்எம் ஆகும்.7 வேக எஸ்-ட்ரானிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.0-100 கிமீ வேகத்தினை 4.6 விநாடிகளில் எட்டிவிடும். உச்சகட்ட வேகம் மணிக்கு 280கிமீ ஆகும். 2013 ஆர்எஸ் 5 காரின் விலை ரூ. ரூ.95.28 லட்சம் (மும்பை )
மாருதி ஸ்விஃப்ட் காரின் வரையறுக்கப்பட்ட பதிப்பாக மாருதி ஸ்விஃப்ட் ஆர்எஸ் என்ற பெயரில் மாருதி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ஸ்விப்ட் ஆர்எக்ஸ் விஎக்எஸ்ஐ மற்றும் விடிஐ என இரண்டு வேரியண்டில் மட்டுமே கிடைக்கும்.ஸ்விஃப்ட் ஆர்எஸ்யில் நீளம் மற்றும் கருப்பு வண்ணங்களில் பாடி கிராபிக்ஸ், ரிவைசஸ் செய்யப்பட்ட ரியர் ஸ்பாய்லர் முகப்பு பம்ப்பர் மற்றும் பின்புற பம்ப்பர். மேலும் ஸ்விஃப்ட் எம்பளம் அனைத்து கதவுகளிலும், நீள வண்ணதில் கண்ணாடிகள் மற்றும் ஆடியோ அமைப்பு , ஏயூஎக்ஸ், யூஎஸ்பி இனைப்புடன் வெளிவந்துள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.24,500 ஆகும்.
மஹிந்திரா நிறுவனம் இருசக்கர வாகன பிரிவில் சிறப்பான வளர்ச்சி பாதையில் பயணித்து வருகின்றது. இன்று விற்பனைக்கு வந்த மஹிந்திரா செஞ்சூரோ பைக்கின் விலை ரூ.45,000 ஆகும்.4 விதமான வேரியண்டில் விற்பனைக்கு வந்துள்ள செஞ்சூரோ முதற்கட்டமாக டாப் வேரியண்டில் விற்பனைக்கு வந்துள்ளது. திருட்டினை தடுக்கும் வகையில் இந்த பைக்கில் பாதுகாப்பு ஆலாரம் மற்றும் என்ஜின் இம்மொபைல்சர் வசதிகள் பொருத்தப்பட்டுள்ளன.106.7சிசி எம்சிஐ-5 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது இதன் ஆற்றல் 8.5 எச்பி மற்றும் 8.5 என்எம் டார்க் ஆகும்.மஹிந்திரா செஞ்சூரோ பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 85.4(ARAI) ஆகும்.இந்தியாவிலே முதன்முறையாக பல வசதிகளை மஹிந்திரா செஞ்சூரோ பைக்கில் கொண்டு வந்துள்ளது. குறிப்பாக கீயில் சின்ன விளக்கு, இரவில் வாகனத்தை பார்க்கிங் செய்துவிட்டு நகரும் பொழுது சிறிய தூரத்துக்கான பாதை காட்டும் விளக்குகள் (Guide Me Home Lamp), மற்றும் இருளான இடங்களில் பார்க்கிங் செய்திருந்தால் வாகனத்தினை எளிதாக கண்டுபிடிக்க விளக்குகள்(Find Me Lamp) போன்ற வசதிகள் உள்ளன.5…