Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டட்சன் பிராண்டில் நிசான் நிறுவனம் வருகிற ஜூன் 15ந்த தேதி டெல்லியில் அறிமுகம் செய்யப்படுகின்றது. முதற்கட்டமாக வெளிவரவுள்ள காரின் மாதிரி படத்தினை டட்சன் தன் இணையத்தில் வெளியிட்டுள்ளது.நடுத்தர மக்களின் சந்தையை மட்டுமே குறிவைத்து களமிறக்கப்பட உள்ள டட்சன் கார்கள் 3 முதல் 4 லட்சத்திற்க்குள் மட்டுமே இருக்கும். தற்பொழுது கே2 என்ற பெயரில் உருவாகி வரும் சிறிய ரக காரின் மாதிரி படம் வெளிவந்துள்ளது.குறைந்த விலை கார் என்றாலும் மிக சிறப்பான இடவசதியினை கொண்டிருக்கும்.

Read More

உலகின் மிக வேகமான எலக்ட்ரிக் ரேஸ் கார் என்ற சாதனையை பிரிட்டன் ட்ரேசன் டெக்னாலஜிஸ் கார் பெற்றுள்ளது. லோலா பி12 69/ இவி காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 328.6 கிமீ வேகத்தை தொட்டுள்ளது.யார்க்சிரில் உள்ள ஆர்ஏஃஎப் ரேஸ் டிராக்கில் இந்த சாதனையை நிகழ்த்தியது. கடந்த வாரம் நிசான் நிறுவனம் லீ மேன்ஸ் போட்டியில் ஜியிஒட் ஆர்சி (ZEOD RC Zero Emission On Demand Racing Car) என்ற எலக்ட்ரிக் ரேஸ் காரை பார்வைக்கு வைத்தது. இந்த காரானது பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் என இரண்டிலும் செயல்படும். மேலும் இந்த காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 300 கிமீ என கூறியது. எனவே இந்த கார்தான் உலகின் வேகமான எலக்ட்ரிக் ரேஸ் கார் கடந்த வாரம் சொல்லப்பட்டாலும் இந்த வாரம் ட்ரேசன் மணிக்கு 328 கிமீ என்ற வேகத்தினை எட்டியுள்ளது.2014 செப்டம்பர் மாதம் முதன்முதலாக தொடங்க உள்ள எலக்க்ட்ரிக் ரேஸான ஃஎப்ஐஏ…

Read More

இசுசூ நிறுவனம் ஜப்பானை தலைமையிடமாக கொண்டு செய்படும் மிக பிரபலமான எஸ்யூவி மற்றும் பிக்அப் வாகனங்களின் தயாரிப்பாளராகும். இந்தியாவின் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இனைந்து செயல்பட்டு வருகின்றது.கடந்த சில மாதங்களுக்கு முன் எம்யூ7 எஸ்யூவி மற்றும் டிமேக்ஸ் பிக்அப் டிரக்கை இந்தியாவவில் முழுதும் கட்டமைக்கப்பட்ட வாகனமாக விற்பனை செய்து வருகின்றது. இந்தியாவில் ஹைந்திராபாத் மற்றும் கோவையில் மட்டுமே டீலர்களை கொண்டுள்ளது.எச்எம் மற்றும் இசுசூ நிறுவத்துடன் ஏற்பட்டுள்ள ஒப்பந்தமானது. இசுசூ வாகனங்களின் பாகங்களை தாய்லாந்தில் உள்ள இசுசூ ஆலையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள எச்எம் ஆலையில் அசெம்பிள் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.இசுசூ மோட்டர்ஸ் பிரிஷிடென்ட் தக்காசி க்கிச்சூ கூறுகையில் இந்தியாவில் மிக சிறப்பான வரவேற்பினை நாங்கள் பெருவோம் என்ற நம்பிக்கை உள்ளது. முன்பு அறிமுகம் செய்யப்பட்ட எம்யூ7 எஸ்யூவி மற்றும் டிமேக்ஸ் பிக்அப் என இரண்டும் சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளது. ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் எம்டி மற்றும் சிஇஒ உத்தம் போஸ் கூறுகையில் இசுசூ…

Read More

பஜாஜ் சக்கன் ஆலையில் வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளதால் சில நாட்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட கேடிஎம் 390 பைக்கின் டெலிவரி மிக தாமாதமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இந்த ஆலையில்தான் பஜாஜ் பல்சர் 200என்எஸ், கேடிஎம் 390, கேடிஎம் 200 மற்றும் கவாஸகி பைக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. எனவே இவற்றின் டெலிவரி போன்றவை பெருமளவு பாதிக்கும்.கேடிஎம் 390 பைக் டெஸ்ட் டிரைவ்களுக்கான பைக்கள் கூட இல்லையாம்.

Read More

மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் காரின் மேம்படுத்தப்பட்ட இ கிளாஸ் விற்பனைக்கு வந்துள்ளது. நவீன நுட்பங்களுடன் வெளிவந்துள்ள இ கிளாஸ் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் கிடைக்கும். மேலும் வரையறுக்கப்பட்ட பதிப்பும் விற்பனைக்கு வந்துள்ளது.சிறப்பான பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் 8 காற்றுப்பைகள், பிரேக் உதவி, பார்க்கிங் உதவி போன்ற வசதிகளும் உள்ளன.ஆக்டிவ் பானட், வுட் பினிஷ், நெப்பா லெதர் அப்ஹோல்ஸ்டரி, பனரோமிக் சன்ரூஃப் , புதிய டெயில் கிளஸ்ட்டர், அழகிய டேஷ்போர்டு வடிவமைப்பு, பல பயன் தரவல்ல ஸ்டீயரிங் வீல், கியர் ஷிப்ட் பேடில், ஸ்பிளிட் முகப்பு விளக்குகள், பகல் நேரங்களிலும் எரியும் விளக்குகள், புது விதமான கிரில் என இ கிளாஸ் பல வசதிகளுடன் மேம்படுத்தியுள்ளனர்.ஈக்கோ நுட்பத்தினை பயன்படுத்தியுள்ளனர். இந்த நுட்பமானது மிக சிறப்பான முறையில் எரிபொருளை சிக்கனப்படுத்த உதவும். ஸ்டார் மற்றும் ஸ்டாப் செய்வது சுலபம்.அவனத்கார்டே என்ற பெயரில் வரையறுக்கப்பட்ட பதிப்பு வெஇவந்துள்ளது இவற்றில் 100 கார்கள் மட்டுமே…

Read More

சவாலை தரக்கூடிய விலையில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் விற்பனைக்கு வந்துள்ளது. எனவே எஸ்யூவி சந்தையில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி பற்றி முழுவிபரங்கள் அனைத்தும் முன்பே வெளிவந்துவிட்டன. ரூ.5.59 லட்சதில் தொடங்கும் ஈக்கோஸ்போர்ட் டாப் வேரியண்ட்டின் விலையே 8.99 லட்சம்தான்.3 விதமான என்ஜின்களில் 4 விதமான வேரியண்ட்டில் கிடைக்கும். அவற்றில் இரண்டு விதமான பெட்ரோல் என்ஜின் மற்றும் டீசல் என்ஜின் ஆகும். அவைஉலகின் சிறந்த என்ஜினுக்கான விருதினை வென்ற ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின் டாப் வேரியண்டான டைட்டானியத்தில் மட்டுமே கிடைக்கும். ஈக்கோபூஸ்ட் 1.0 லிட்டர் என்ஜின் ஆனது 125 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 112 பிஎஸ் ஆகும். 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். மற்றும் 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்யிலும் கிடைக்கும்.1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். 91 பிஎஸ் ஆற்றலை…

Read More