மாருதி சுசூகி ரீட்ஸ் காரின் வரையறுக்கப்பட்ட பதிப்பாக ரீட்ஸ் @buzz என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. எல்எக்ஸ்ஐ, எல்டிஐ, விஎக்ஸ்ஐ மற்றும் விடிஐ வேரியண்டில் மட்டும் இந்த கூடுதல் உபகரணங்கள் பொருத்தப்பட்டிருக்கும்.@buzz எடிசன் சிறப்புகள்சிறப்பு பாடி கிராபிக்ஸ், ரியர் பார்க்கிங் சென்சார், யுஎஸ்பி, புளூடூத் இணைப்பு வசதிகளுடன் கூடிய ஆடியோ அமைப்பு, ரிட்ஸ் பெயர் பதிக்கபட்ட லெதர் சீட் கவர்கள்,ஸ்டீயரிங் வீல் கவர், பம்பர் புரொடெக்டர், டோர் சில் கார்டுகள், ரியர் பார்சல் டிரே , 6 ஸ்பீக்கர்கள் என வசதிகளை தந்துள்ளது.இவற்றின் மொத்த மதிப்பு ரூ.17,990 ஆகும்.எல்எக்ஸ்ஐ: Rs 4.50 லட்சம்விஎக்ஸ்ஐ: Rs 4.85 லட்சம்எல்டிஐ: Rs 5.60 லட்சம்விடிஐ: Rs 5.92 லட்சம்
Author: MR.Durai
மேப்மை இந்தியா நிறுவனம் பைக்களுக்கான நேவிகேஷன் சிஸ்டத்தை டிரைல்பிளாசர் 2 என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. நேவிகேஷன் மட்டுமல்லாது பாடல்கள், சினிமா மற்றும் புகைபடங்களையும் கான முடியும்.8.9 செமீ அகலமுள்ள தொடுதிரையை கொண்டுள்ளது. Don’t Panic மென்பொருளும் பொருதத்ப்பட்டுள்ளது.இந்தியாவின் முன்னணி 50 நகரங்களின் வீட்டு முகவரிகள் மற்றும் 5000 மேற்பட்ட நகரங்களின் தெருக்கள் என முக்கியமான அனைத்தும் அடங்கியுள்ளது. இந்த டிரைல்பிளாசர் 2 அமைப்பினை தேவைப்படும் பொழுது மட்டுமே பொருத்தி கொள்ளலாம்.மேப்மை இந்தியா டிரைல்பிளாசர் விலை ரூ.16,900 மட்டுமே.
லம்போர்கினி கல்லர்டோ காருக்கு மாற்றாக லம்போ கப்ரேரா வெளிவர உள்ளதாக கார்பஸ் தளம் சில ஊக படங்களை வெளியிட்டுள்ளது. 2003 முதல் விற்பனையில் உள்ள கல்லர்டோ மிக சிறப்பான வெற்றி பெற்ற காராக வலம் வருகின்றது.மிக குறைவான எடை கொண்ட கார்பன் ஃபைபர்களால் இந்த கார் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 5.2 லிட்டர் வி10 சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 600எச்பி வரை இருக்கலாம்.இந்த வருட செப்டம்பரில் நடைபெறவுள்ள ஃபிரான்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் காட்சி வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அடுத்த வருடம் உற்பத்தி தொடங்கலாம்.
டாடா நானோ விற்பனையை அதிகரிக்கும் பொருட்டும் இளைய சமுதாயத்தை கவரும் வகையிலும் 4 விதமான பாடி கிட்களை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது.இந்த பாடி கிட்கள் சிஎக்ஸ் மற்றும் எல்எக்ஸ் என இரண்டு வேரியண்ட்டில் மட்டும் கிடைக்கும். 2012 நானோ கார்களுக்கும் பாடி கிட்கள் கிடைக்கும்.பானட் ஸ்டிரிப் ஸ்டிக்கர், சைட் ஸ்கர்டு , டீக்ல்கள், கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்களை கொண்டிருக்கும்.நானோ பாடி கிட் விலை விபரம்2013 எல்எக்ஸ் வேரியண்ட்டுக்கு ரூ.27,000ம மற்றும் சிஎக்ஸ் வேரியண்ட்டுக்கு ரூ.15,000 ஆகும்.2012 எல்எக்ஸ் வேரியண்ட்டுக்கு ரூ.28,500 மற்றும் சிஎக்ஸ் வேரியண்ட்டுக்கு ரூ.16,500 ஆகும்.
பியாஜியோ வெஸ்பா ஸ்கூட்டரின் விஎக்ஸ் வேரியண்ட் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. புதிய வெஸ்பா விஎக்ஸ் வேரியண்டில் இரண்டு விதமான புதிய வண்ணங்கள் மற்றும் நுட்பங்களை சேர்த்துள்ளது.வெஸ்பா ஸ்கூட்டரில் 125சிசி 3 வால்வ் சிங்கிள் சிலிண்டர் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 10.06பிஎஸ் மற்றும் டார்க் 10.6என்எம் ஆகும். சிவிடி டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது.புதிய விஎக்ஸ் வேரியண்டில் மெட்டாலிக் கீரின் மற்றும் டுவல் டோன் ரெட் மற்றும் பிங்க் என இரண்டு வண்ணங்களில் கிடைக்கும். மேலும் முன்புறத்தில் டிஸ்க் பிரேக், மேம்படுத்தப்பட்ட கிளஸ்டர், பிஜி இருக்கை ஆப்ஷன், கிராப் ரெயில் போன்றவை இனைக்கப்பட்டுள்ளன.மேலும் எம்ஆர்ஃஎப் ஸ்போர்ட்ஸ் ஜேப்பர் டீயூப்பலஸ் டயர் பொருத்தப்பட்டுள்ளதுஇம்மாத இறுதியில் வெஸ்பா விஎக்ஸ் விற்பனைக்கு வரலாம்
ஹோண்டா ட்ரீம் யுகா பைக்கில் எச்இடி நுட்பத்தை பொருத்தி கூடுதலாக 2 கிமீ மைலேஜ் தந்துள்ளது. முன்பு லிட்டருக்கு 74கிமீ என்று இருந்த மைலேஜ் இப்பொழுது 76 கிமீ ஆக உயர்ந்துள்ளது.என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை ட்ரீம் யுகாவில் 110சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 8.5 பிஎச்பி மற்றும் 9 என்எம் டார்க் ஆகும்.மூன்று விதமான வேரியண்டில் ட்ரீம் யுகா கிடைக்கும். அவை கிக் ஸ்டார்ட்-ஸ்போக் வீல்கிக் ஸ்டார்ட்- அலாய் வீல்செல்ஃப் ஸ்டார்ட்-அலாய் வீல்வண்ணங்கள்கருப்பு, ஆல்ஃபா ரெட் மெட்டாலிக், ஃபோர்ஸ் சில்வர் மெட்டாலிக், மான்சூன் கிரே மெட்டாலிக், மற்றும் மெப்பிள் பிரவுன் மெட்டாலிக் ஆகும்.விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லை.ஹோண்டா ட்ரீம் யுகா விலை ரூ.45,101(டெல்லி எக்ஸ்ஷோரூம்)