Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

ஹீரோ மோட்டோகார்ப் மத்திய அமெரிக்க நாடுகளில் விற்பனையை தொடங்கியுள்ளது. இண்டி மோட்டாஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து விற்பனையை தொடங்கியுள்ளது.மத்திய அமெரிக்காவில் உள்ள குவான்ட்மாலா, இஐ சால்வேடார் மற்றும் ஹாண்டூராஸ் போன்ற நாடுகளில் முதற்கட்டமாக விற்பனையை தொடங்கியுள்ளது.ஹீரோ பைக் மாடல்களான ஸ்பிளென்டர் என்எக்ஸ்ஜி, சூப்பர் ஸ்பிளென்டர், எச்எஃப் டான், கிளாமர், அச்சிவர், ஹங்க் மற்றும் கரீஷ்மா பைக்களை விற்பனை செய்ய உள்ளது.மேலும் வரும்காலங்ளில் லத்தின் அமெரிக்கா, மற்ற மத்திய அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவிலும் விற்பனை செய்ய தனது டீலர்களை அங்குள்ள தனது கூட்டணி நிறுவனங்களுடன் இணைந்து தொடங்க உள்ளனர்.தற்பொழுது விற்பனையில் உள்ள வெளிநாடுகள் இலங்கை, வங்கதேசம், நேபாளம் மற்றும் கொலம்பியா ஆகும்.

Read More

லம்போர்கினி உரஸ் எஸ்யூவி விற்பனைக்கு வருவதனை லம்போர்கினி உறுதி செய்துள்ளது. உரஸ் எஸ்யூவி 2017 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.லம்போர்கினி எல்எம்002 எஸ்யூவி 1986 முதல்1993 வரை விற்பனையில் இருந்தது. அதன் பின்பு உரஸ் எஸ்யூவி விற்பனைக்கு வரவுள்ளது. இதன் வடிவமைப்பானது எம்எல்பி தளத்தில் உருவாக்கப்படுவதனால் இலகு எடையாக இருக்கும். அலுமினியம் மற்றும் கார்பன் ஃபைபர் பயன்படுத்தப்பட்டிருக்கும். இதனால் வாகனத்தின் எடை மிக குறைவாக இருக்கும்.50வது ஆண்டு கொண்டாட்டத்தில் உள்ள லம்போர்கினி ஈகோஸ்டா என்ற கான்செப்ட்டை அறிமுகம் செய்தது. தற்பொழுது லம்போர்கினி உரஸ் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வருவதனை உறுதிசெய்துள்ளது

Read More

பஜாஜ் நிறுவனம் ஆர்இ60 என்ற குவாட்ரிசைக்கிளை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதற்காக மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கின்றது.ஆர்இ60 குவாட்ரிசைக்கிள் தற்பொழுது பஜாஜ் சோதனை செய்து வருகின்றது. சோதனை படங்களை ஆட்டோகார் இந்தியா வெளியிட்டுள்ளது. குவாட்ரிசைக்கிள் என்றால் ஆட்டோரிக்‌ஷாவுக்கும் காருக்கும் இடைப்பட்ட நிலையில் உள்ள வாகனமாகும். இதனால் எந்த பிரிவில் அனுமதி வழங்குவது என மத்திய அரசு ஆய்வு செய்து வருகின்றது.இவற்றில் மிக குறைவாகவே பாதுகாப்பு இருக்கும் என்பதே பலரின் கருத்து ஆனால் இதனை ஆட்டோரிக்‌ஷாவிற்க்கு மாற்றாகவும் அதனைவிடவும் பாதுகாப்பாகவும் இருக்கும். மேலும் கார்பன்டை ஆக்‌ஸைடு குறைவாகவே வெளிவரும் என பஜாஜ் தெரிவித்துள்ளது.ஆர்இ60 குவாட்ரிசைக்கிளில் 216 சிசி DTSi பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 20 பிஎச்பி வரை வெளிப்படுத்தும்.இதன் இருக்கை அமைப்புகள் 2+2 அல்லது 1+3 என இருக்கலாம். மேலும் பூட் ஸ்பேஸ் 40 லிட்டர் இருக்கும்.thanks to autocarindia

Read More

லம்போர்கினி நிறுவனத்தின் பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு இகோஸ்டா என்ற கான்செப்ட் காரை அறிமுகம் செய்துள்ளது. இகோஸ்டா என்பதற்க்கு பொருள் சுயநலமாகும். இந்த காரில் ஒருவர் மட்டுமே பயணிக்க முடியும்.தனிநபர் மிக சிறப்பான அனுபவத்தினை இகோஸ்டா கார் மூலம் பெற முடியும். எனவேதான் இதன் பெயர் இகோஸ்டா. மேலும் இகோஸ்டா ஜெட் விமானங்களின் அடிப்படை மற்றும் தரைவழி வாகனங்களின் நோக்கத்தினை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது என ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் தலைமை வடிவமைப்பாளர் வாட் டி சில்வா தெரிவித்துள்ளார்.இதன் இருக்கை வடிவமைப்பானது தனிநபர் மட்டும் பயணிக்கும் வடிவில்தான் இருக்க வேண்டும் என்பதில் திட்டமிட்டு வடிவமைத்துள்ளனர். இதன் பாடி கார்பன் ஃபைபர் மற்றும் அலுமினியம் போன்ற பொருட்களால் மட்டும் உருவாக்க உள்ளனர்.இகோஸ்டாவில் 5.2 லிட்டர் வி10 எஞ்சின் பொருத்தப்படும். இதன் ஆற்றல் 600எச்பி வரை வெளிப்படுத்தும். இதன் உட்ப்புறம் மற்றும் வெளிப்புறத்தில் மிக நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த உள்ளனர்.லம்போர்கினி நிறுவனத்தின் 50வது ஆண்டு கொண்டாட்டத்தில் இகோஸ்டா கான்செப்ட் அறிமுகம்…

Read More

மிக பெரிய எதிர்பார்ப்புடன் அறிமுகம் செய்யப்பட்ட டாடா நானோ மிக பெரும் தோல்வியை சந்திக்க போவதாகவே தெரிகின்றது. எனவே இதற்க்காக கட்ட அமைக்கப்பட்ட ப்ரித்யோக குஜராத் சனந்த் ஆலையின் முதலீட்டை ஈடுகட்ட டாடா மோட்டார்ஸ் புதிய ஹேட்ச்பேக் முயற்சியை கையில் எடுத்துள்ளது.கடந்த ஏப்ரல் மாதம் நானோ விற்பனை வெறும் 948 மட்டுமே ஆகும். சனந்த் ஆலையின் மொத்த உற்பத்தி திறன் 2.50 இலட்சம் நானோ கார்களாகும். உற்பத்தி தொடங்கியது முதல் இன்று வரை முழு உற்பத்தி அளவை ஒருமுறைக்கூட எட்டவில்லை மாற்றாக உற்பத்தி குறைப்பே செய்து வருகின்றது.தற்பொழுது இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் நானோ கார்களின் எண்ணிக்கை 20% குறைவே ஆகும். மேலும் ஸ்டாக்களும் அதிகம் சேர்ந்துவிட்டதாம்.இண்டிகா காரின் தளத்தில் புதிய ஹேட்ச்பேக் காரின் வடிவமைப்பிற்க்கான செயல்பாட்டினை டாடா முன்னேடுத்துள்ளது. இந்த புதிய ஹேட்ச்பேக் கோட் பெயர் X0 ஆகும். மேலும் இந்த கார் நானோவிற்க்கும் இண்டிகா காருக்கும் இடைப்பட்ட நிலையில்…

Read More

இலகுரக டிரக்களில் டாடா ஏஸ் முன்னிலை வகிக்கும் எல்சிவி ஆகும். மேலும் இதன் சக போட்டியாளர்களாக விளங்கும் அசோக் லேலண்ட் தோஸ்த் மற்றும் மஹிந்திரா மேக்சிமோ போன்றவைகளும் சிறப்பான வளர்ச்சி அடைந்துவருகின்றது.ஏஸ், தோஸ்த் மற்றும் மேக்சிமோ என மூன்றினையும் ஒப்பிடாக கானலாம்.சின்ன யானை என்ற அடைமொழியுடன் 2005 ஆம் ஆண்டு முதல் விற்பனையில் உள்ள டாடா ஏஸ் சிறப்பான முத்திரை பதித்த மினி டிரக் ஆகும்.நல்ல சிறப்பான இடவசதி கொண்டதாக அசோக் லேலண்ட் தோஸ்த் விளங்குகின்றது. வாடிக்கையாளர்களின் அனுபவத்தின் படி 2.5 முதல் 3 டன் வரை இலகுவாக ஏற்ற முடிகின்றதாம். சக்தி வாய்ந்த எஞ்சினுடன் விளங்கும் தோஸ்த் நன்மதிப்பினை பெற்று வலம் வருகின்றது.மஹிந்திரா மேக்சிமோ ப்ளஸ் டிரக்கில் ஃப்யூல் ஸ்மார்ட் டெக்னாலஜி என்ற நவீன நுட்பத்தினை அறிமுகம் செய்துள்ளது. இந்த நுட்பமானது. நமக்கு விருப்பமான தேர்வினை செய்ய உதவுகின்றது, அதாவது எரிபொருள் சிக்கனம்(மைலேஜ்) அல்லது அதிகப்படியான ஆற்றல் என இரண்டில்…

Read More