டட்சன் பிராண்டு சிறிய ரக கார்கள் வருகிற 2014 ஆம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரவுள்ளது. இதற்க்கான முயற்சியில் நிசான் மிக தீவரமாக செயல்பட்டு வருகின்றது.இந்தியாவினை மையமாக வைத்து உருவாக்கப்படும் டட்சன் கார்கள் இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பாளர்களுக்கு மிக பெரும் சவாலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. விலை குறைவான காராக விளங்கினாலும் மிக சிறப்பான வடிவமைப்பு தரம் மற்றும் பாதுகாப்பு போன்றவற்றை பெற்று இருக்கும். நடுத்தர இந்திய மக்களை பெரிதும் கவரும்.2017 ஆம் ஆண்டிற்க்குள் மொத்த இந்திய சந்தையின் 10 சதவீதத்தை கைப்பற்ற நிசான் திட்டமிட்டுள்ளது. எனவே அடுத்தடுத்து 5 மாடல்களை விற்பைக்கு கொண்டு வரவுள்ளது.முதற்கட்டமாக கே2 என்ற கோடு பெயரில் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் எஞ்சின் வடிவமைப்பில் மிக தீவரமாக செயல்பட்டு வருகின்றதாம். இந்த காரின் அனைத்து பாகங்களும் இந்தியாவிலே உற்பத்தி செய்யப்படும் என்பதால் விலை குறைவாக இருக்கும். இந்த காரின் விலை 3 லட்சம் முதல்…
Author: MR.Durai
ஹார்லி டேவிட்சன் 24×7 ரோடு உதவி சேவையை இந்தியாவில் தொடங்கியுள்ளது. மிக குறைவான டீலர்களை மட்டுமே கொண்டுள்ள டேவிட்சன் அதாவது நாடு முழுவதும் 9 டீலர்களை மட்டுமே உள்ளது. திடீரென பயணத்தின் பொழுது பழுது ஏற்பட்டால் உதவி செய்ய 24 மணி நேர சேவையை தொடங்கியுள்ளது ஹார்லி டேவிட்சன். இதன் அறிமுகத்தின் பொழுது இந்திய பிரிவின் எம்டி கூறியது.. இந்தியா உதவி சேவை மையத்தின் நோக்கம் 24 மணி நேரமும் மிக சிறப்பான தரமான சேவையை மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
பஜாஜ் பல்சர் 375 பைக் 2013 ஆம் ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மிக நேர்த்தியான வடிவமைப்பில் வெளிவரவுள்ள புதிய பல்சர் கேடிஎம் டியூக் 390 பைக் வெளிவந்த பின்பு வெளிவரும்.கேடிஎம் டியூக் 390 பைக்கில் பயன்படுத்தியுள்ள அதே இன்ஜின் பல்சர் 375 பைக்கிலும் பொருத்தப்பட்டிருக்கும். ஏபிஎஸ் பிரேக்குடன் வெளிவரவுள்ள டியூக் 390 இன்னும் சில மாதங்களில் விற்பனைக்கு வரும்.எவ்வாறு இந்த பல்சர் 375 இருக்கலாம் என்பதற்க்கு ஆட்டோகார் இந்தியா தளம் மாதிரி படத்தை வெளியிட்டு பைக் ரசிகர் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
இந்தியாவின் முன்னணி எஸ்யூவி தயாரிப்பாளாராக விளங்கும் மஹிந்திரா பொது பட்ஜெட்டில் எஸ்யூவி கார்களுக்கு உயர்த்தப்பட்ட வரி உயர்வினால் மிக கடுமையான விற்பனை சரிவை சந்தித்துள்ளது.மத்திய பட்ஜெட்டில் 27 சதவீதமாக இருந்த வரியை 30 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 4 மீட்டருக்குள் இருக்க வேண்டும் என்ஜின் திறன் 1500சிசி மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸ் 170மிமீ க்குள் இருந்தால் வரி உயர்வில் தப்பிக்க முடியும் .ஆனால் மஹிந்திராவின் ஸ்கார்பியோ, பொலிரோ, எக்ஸ்யூவி500 போன்றவை வரி உயர்வினால் பாதிக்கப்பட்டுள்ளது. குவோன்ட்டோ மற்றும் சைலோவின் சில மாறுபட்டவைகள் மட்டும் வரி உயர்வில் இருந்து தப்பித்தது.அவசரகால நடவடிக்கையாக சில மாறுதல் செய்ய முடிவு செய்துள்ளது. மிக பெரிய தாக்கத்தை மஹிந்திரா நிறுவனத்துக்கு இந்த வரி உயர்வு ஏற்படுத்தியுள்ளது. இதற்க்கான முழு மாறுதல்களை செய்ய இரண்டு வருடங்கள் ஆகலாம். தனது எதிர்கால திட்டங்களிலும் இதனை கவனத்தில் கொள்ளும்.மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரின் புதிய டபிள்யூ4 என்ற பேஸ் வேரியண்ட்டை விற்பனைக்கு கொண்டு…
ரு.80000 விலையில் ஸ்போர்ட்ஸ் பைக் கேள்விபதில் பக்கத்தில்….யமஹா ஃபேஸர்யமஹா ஃபேஸர் நல்ல மதிப்பினை பெற்று விளங்கக்கூடிய மிக சிறப்பான பைக்காகும். இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற பைக்காகவும் ஃபேஸர் விளங்குகின்றது.ஃபேஸர் பைக்கில் 153சிசி ஏர்-கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 14 பிஎஸ் மற்றும் 13.6என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். 5 வேக மேனுவல் முடுக்கி பயன்படுத்தியுள்ளனர்.யமஹா ஃபேஸர் பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 58.4கிமீ ஆகும்யமஹா ஃபேஸர் பைக் விலை ரூ.77,941(எக்ஸ்ஷோரூம் சென்னை)யமஹா ஃபேஸர் லிமிடெட் எடிசன் பைக் விலை ரூ.79,480(எக்ஸ்ஷோரூம் சென்னை)யமஹா ஃஎப்இசட்மிக நேர்த்தியான வடிவமைப்பினை பெற்று விளங்கும் ஃஎப்இசட் பணத்திற்க்கு ஏற்ற மதிப்பினை தருகின்றது. ஃஎப்இசட் பைக்கும் இளசுகளின் மத்தியில் நல்ல வரவேற்ப்பில் உள்ளது.ஃபேஸர் பைக்கில் உள்ள அதே 153சிசி ஏர்-கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 14 பிஎஸ் மற்றும் 13.6என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். 5 வேக மேனுவல் முடுக்கி பயன்படுத்தியுள்ளனர்.யமஹா ஃஎப்இசட் பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 60.3கிமீ ஆகும்இரண்டு வேரியண்ட்கள் உள்ளது. அவை யமஹா ஃஎப்இசட்…
2015 போர்ஷே 918 ஸ்பைடர் காரின் அதிகாரப்பூர்வ உற்பத்தி நிலை படங்களை போர்ஷே வெளியிட்டுள்ளது. இரண்டு விதமான ஆற்றலை கொண்டு இயங்கும் ஹைபிரிட் முறையில் போர்ஷே 918 ஸ்பைடர் ஸ்போர்ட்ஸ் காராக உருவாக்கப்படுகிறது.2015 போர்ஷே 918 ஸ்பைடர் காரில் 4.6 லிட்டர் வி8 பெட்ரோல் இன்ஜின் மற்றும் இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மொத்த ஆற்றல் 887எச்பி மற்றும் டார்க் 528 என்எம் ஆகும். 7 வேக தானியிங்கி பிடிகே முடுக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது.போர்ஷே 918 ஸ்பைடர் காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 340கிமீ ஆகும். எலக்ட்ரிக் ஆற்றலை மட்டும் வைத்து இயக்கும்பொழுது வாகனத்தின் உச்சகட்ட வேகம் மணிக்கு 150கிமீ ஆகும்.போர்ஷே 918 ஸ்பைடர் கார் 0-100கிமீ வேகத்தை 2.8 விநாடிகளில் எட்டிவிடும்.எலக்ட்ரிக் ஆற்றலை மட்டும் வைத்து சுமார் 29கிமீ வரை இயக்க முடியும். எலக்ட்ரிக் மோட்டாரில் இயங்கும்பொழுது ரீயர் விங், ஸ்பாய்லர் போன்றவை இயங்காது.