Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-கிளாஸ் ஹேட்ச்பேக் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் விற்பனைக்கு வந்துள்ளது.டீசல் மாடல் ஏ180 சிடிஐ என்ற பெயருடன் 2.2 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 109பிஎச்பி ஆகும் . ஏ180 ஸ்டைல் உச்சகட்ட வேகம் மணிக்கு 190கிமீ ஆகும். 7 ஸ்பீடு டிஎஸ்ஜி முடுக்கிபெட்டி பயன்படுத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் மாடல் ஏ180 ஸ்போர்ட் பெயருடன் 1.6 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 122பிஎச்பி ஆகும் . ஏ180 ஸ்டைல் உச்சகட்ட வேகம் மணிக்கு 202கிமீ ஆகும். 7 ஸ்பீடு டிஎஸ்ஜி முடுக்கிபெட்டி பயன்படுத்தப்பட்டுள்ளது. 17 இன்ச் ஆலாய் வீல், ஈக்கோ முறையில் ஆன்/ஆஃப் வசதி, 7 காற்றுப்பைகள், பூளுடூத், யூஎஸ்பி, ஐ-பாட் இனைப்பு என பல வசதிகள் உள்ளன.மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-கிளாஸ் கார் விலை( மும்பை எக்ஸ்ஷோரூம்)மெர்சிடிஸ் ஏ-கிளாஸ் பெட்ரோல் மாடல் ஏ180 ஸ்போர்ட் ரூ.22.73 லட்சம்மெர்சிடிஸ் ஏ-கிளாஸ் டீசல் மாடல் ஏ180 சிடிஐ…

Read More

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்தியாவில் மூன்றாவது இருசக்கர வாகன ஆலையை பெங்களூர் அருகில் திறந்துள்ளது.பெங்களூர் நரசப்பூர் பகுதியில் தொடங்கப்பட்டுள்ள இந்த ஆலைக்கான முதலீடு ரூ.1350 கோடியாகும். சுமார் 96 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலையில் வருடத்திற்க்கு 12 லட்சம் பைக்கள் உற்பத்தி செய்ய முடியும். அடுத்த மாதம் முதல் உற்பத்தியை இந்த ஆலையில் தொடங்க உள்ளது.

Read More

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி கார் வரும் ஜூன் 11ந்த தேதி விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.ரூ.50000 செலுத்தி ஈக்கோஸ்போர்ட் காரை முன்பதிவு செய்து கொள்ளலாம். ஜூன் இறுதியிலோ அல்லது ஜூலை துவக்கத்திலோ ஈக்கோஸ்போர்ட் டெலிவிரி செய்யலாம் என கூறப்படுகின்றது. எனவே உங்கள் அருகில் உள்ள டீலரை அனுகவும்.விலை விபரங்கள் பற்றி இதுவரை எந்த அதிகார்ப்பூர்வ தகவலும் இல்லை.

Read More

டொயோட்டா கரோல்லா ஆல்டிஸ் காரில் டிரைவ் சாஃப்ட்டில் ஏற்ப்பட்டுள்ள தொழில்நுட்ப காரணத்தால் இதனை திரும் பெற உள்ளது. அதாவது 2012 ஆகஸ்ட் 3 முதல் கடந்த பிப்பரவரி 14 வரை உள்ள காலத்தில் தயாரிக்கப்பட்ட 1000 கார்களை மட்டும் திரும்ப பெற உள்ளது.இந்த டிரைவ் சாஃப்ட்டில் பிரச்சனை இருப்பது உறுதியானல் அவற்றை இலவசமாக டொயோட்டா மாற்றிதரும். இதுகுறித்த விவரங்களை வாடிக்கையாளர்களுக்கு டொயோட்டா விரைவில் தெரிவிக்கும்.

Read More

இந்தியாவில் மிக எதிர்பார்க்கப்படும் கார்களில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி முதன்மை வகிக்கின்றது. வருகின்ற ஜூன் மாதம் விற்பனைக்கு வருவதனை உறுதி செய்துள்ளது. மேலும் ஜூன் முதல் முன்பதிவு தொடங்குகின்றது.10 விதமான மாறுபட்டவையில் வெளிவரவுள்ள ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி இந்திய எஸ்யூவி சந்தையில் தனியான இடத்தை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது.ஈக்கோஸ்போர்ட் காரில் இந்தியாவிலே முதன்முறையாக அதிநவீன அவசர கால சேவையை வழங்கவுள்ளது. விபத்து நேரிட்டால் உடனடியாக உங்கள் அலைபேசி 108 சேவை மையத்திற்க்கு அழைத்து உதவி கோரும். இதனால் விரைவாக விபத்தில் பாதிக்கபட்டவர்களுக்கு உதவி கிடைக்கும்.வரும் ஜூன் 1 முதல் முன்பதிவு தொடங்கின்றது. மேலும் ஜூன் 11 தேதி முதல் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Read More

டொயோட்டா நிறுவனம் மினி எஸ்யூவி காரை களமிறக்க திட்டமிட்டு வருகின்றது. மேலும் சிறிய ரக கார்களை உருவாக்கும் எண்ணத்திலும் உள்ளதாம். மிக பெரும் வரவேற்பினை பெற்று வரும் மினி எஸ்யூவி சந்தையை குறிவைத்து டொயோட்டா களமிறங்க உள்ளது.டொயோட்டா இன்னோவா விற்பனை கடந்த சில மாதங்களாகவே சரிவினை சந்தித்து வருகின்றது. இந்தியாவின் டொயோட்டா விற்பனையில் பெரும்பங்கு இன்னோவையே சாரும்.எடியாஸ் மற்றும் லீவா போன்ற கார்களும் மிக பெரும் வரவேற்பினை பெற தவறியுள்ளது. சிறிய ரக கார்களில் லீவா மட்டுமே இந்தியாவில் உள்ளது. மேலும் ஒரு சிறிய ரக காரை மற்றும் மினி எஸ்யூவி கார்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.இந்தியாவில் டீசல் எஞ்சின் தயாரிக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இதற்க்காக இந்தியாவின் எதிர்கால கொள்கைகளை பொருத்து இந்தியாவில் டீசல் எஞ்சின் ஆலையை உருவாக்கும்.மினி எஸ்யூவி பற்றி அனைத்து ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்களும் சிந்திக்க காரணம் டஸ்ட்டர், வரப்போகின்ற ஈக்கோஸ்போர்ட் ஆகியவை காரணம்.

Read More