Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

மஹிந்திரா வெரிட்டோ வைப் ஹேட்ச்பேக் கார் ரூ.5.63 லட்சத்தில் அறிமுகம் செய்துள்ளனர். டீசலில் மட்டுமே வைப் கிடைக்கும். 3 விதமான மாறுபட்டவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள வைப் எடியாஸ் லீவா, செயில் யுவா போன்ற கார்களுக்கு சவாலாக விளங்கும்.செடான் பிரிவில் வெளிவந்த வெரிட்டோ காரை 4 மீட்டருக்குள் குறைத்து விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. ரெனோ கே9கே 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருககும். இதன் ஆற்றல் 64 பிஎச்பி மற்றும் டார்க் 180என்எம் ஆகும்.மஹிந்திரா வெரிட்டோ வைப் மைலேஜ் லிட்டருக்கு 20.8கிமீ ஆகும். டாப் வேரியண்டில் ஏபிஎஸ், காற்றுப்பைகள் என பாதுகாப்பு வசதிகள் உள்ளன. மேலும் யூஎஸ்பி, பூளூடூத் இனைப்பு, டீஃபோக்கர் போன்றவை உள்ளன.மஹிந்திரா வெரிட்டோ வைப் விலை(எக்ஸ்ஷரூம் மும்பை)டி2 ரூ.5.63 லட்சம் டி4 ரூ.5.89 லட்சம் டி6 ரூ.6.49 லட்சம்

Read More

பஜாஜ் ஆர்இ60 குவாட்ரிசைக்கிளுக்கு வர்த்தக ரீதியான சந்தையில் மட்டுமே மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மிகுந்த மகிழ்ச்சி கொண்டுள்ள பஜாஜ் நிறுவனத்துக்கு ஒரு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.என்ன அதிர்ச்சி என்றால் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், பியாஜியோ, போலரிஸ் போன்ற நிறுவனங்களும் குவாட்ரிசைக்கிளுக்கு ஆர்வம் தெரிவித்துள்ளது. பியாஜியோ நிறுவனம் ஐரோப்பா சந்தையில் குவாட்ரிசைக்கிள் விற்பனையில் நல்ல இடத்தினை பெற்றுள்ளது.எனவே இந்திய சந்தையில் பல நிறுவனங்கள் ஆர்வம் தெரிவிப்பதால் பஜாஜ் ஆர்இ60 குவாட்ரிசைக்கிளுக்கு கடும் நெருக்கடி ஏற்படுவது உறுதி என்பதே வல்லுனர்களின் கருத்து குவாட்ரிசைக்கிளுக்கு அரசு வகுக்க உள்ள முழுமையான திட்டமே இந்த நிறுவனங்களின் வருகையை உறுதிப்படுத்தும்.எனவே பஜாஜ் ஆர்இ60க்கு கடுமையான போட்டி காத்திருக்கின்றது.

Read More

மிக வசீகரமான புதிய தோற்றத்தில் புதிய கரொல்லா வரும் ஜூன் 6 அன்று அறிமுகம் செய்யப்பட்ட உள்ளது. புதிய கரொல்லா வடிவமைப்பு, இடவசதி, புதிய நுட்பங்கள் என இளம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வெளிவரவுள்ளது.கரொல்லா காரில் உள்ள 1.8 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் என இரண்டு எஞ்சினும் மேம்படுத்தப்பட்டிருக்கும். முடுக்கியில் மாற்றங்கள் இருக்காது. உட்ப்புற கட்டமைப்பு நவீன வசதிகளுடன் சொகுசாக விளங்கும்.கரொல்லா ஃப்யூரியா என்ற பெயரில் புதிய கரொல்லா 2014 ஆம் ஆண்டின் துவக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது. புதிய கரொல்லாவில் நேர்த்தியான வடிவம், நவீன நுட்பங்கள், புதிய தோற்றத்துடன் முகப்பு கிரீல், அழகான முகப்பு விளக்குகள் மற்றும் மிக சிறப்பான இடவசதி என அசத்தும்..

Read More

நெதர்லாந்து நாட்டின் ஸ்பைக்கர் சொகுசு கார் நிறுவனம் 2013 இறுதிக்குள் இந்தியாவில் தன்னுடைய கார்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. எனவே டெல்லியில் இறக்குமதியாளர் மற்றும் டீலரை நியமித்துள்ளது.ஸ்பைக்கர் நிறுவனம் பார்முலா-1 பந்தயங்களில் 2007 ஆம் ஆண்டு பங்கேற்றது. இந்த அணிதான் தற்பொழுது விஜ்ய மல்லையாவின் கீழ் செயல்படும் சஹாரா ஃபோர்ஸ் இந்தியா ஆகும்.ஸ்பைக்கர் நிறுவனம் இரண்டு விதமான கார்களை விற்பனை செய்து வருகின்றது. அவை சி8 அலிரான் மற்றும் பி6 வெனேட்டர் ஆகும்.சி8 அலிரான் காரில் ஆடி நிறுவனத்தின் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 400பிஎஸ் மற்றும் டார்க் 480என்எம் ஆகும்.பி6 வெனேட்டர் காரில் வி6 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 380பிஎஸ் ஆகும்.ஸ்பைக்கர் கார்களின் விலை ரூ.2 கோடியை தாண்டும்.

Read More

சாதரண சாலைகளில் பயன்படுத்தும் கார்களை போல ரேஸ் கார் நுட்பத்தினை அஸ்டன் மார்டின் வேண்டேஜ் எஸ் காரில் அஸ்டன் மார்டின் புகுத்தியுள்ளது. புதிய வி12 வேண்டேஜ் எஸ் 6.2 லிட்டர் எஞ்சினுடன் சீறுகின்றது.6.2 லிட்டர் எஞ்சின் 12 சிலிண்டர்களை கொண்டு விளங்குகின்றது. இதன் ஆற்றல் 565பிஎச்பி மற்றும் டார்க் 620 என்எம் ஆகும். 7 ஸ்பீடு முடுக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது.வேண்டேஜ் எஸ் காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 328கிமீ ஆகும்.மூன்று விதமான மோட்களை புதிய வேண்டேஜ் எஸ் கொண்டுள்ளது. அவை சாதரண பயணம், ஸ்போர்ட் பயணம் மற்றும் டிராக் பயணம் ஆகும்.மிக நேர்த்தியான வடிவமைப்பினை கொண்டு விளங்கும் வேண்டேஜ் எஸ் கார் கார்பன் ஃபைபர் பாடியை கொண்டதாக விளங்கும். இனி படங்களை முழுதாக ரசிங்க…

Read More

இந்திய சந்தையின் தொடர் விற்பனை சரிவின் காரணமாக அனைத்து கார்களுக்கு சலுகைகளை நிறுவனங்கள் வாரி வழங்கியுள்ளது. இதன் மூலம் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மாருதி சுஸூகிஇந்தியாவின் முதன்மையான விற்பனையாளராக விளங்கும் மாருதி கடந்த சில மாதங்களாகவே சரிவை கண்டுள்ளது.ரூ.3000(ஆம்னி) முதல் ரூ.70,000 (எக்ஸ்4 டீசல்)வரை சலுகைகள் வழங்கியுள்ளது.ஹூண்டாய்ஹூண்டாய் மோட்டார்ஸ் சரிவை சந்தித்துள்ளது. ரூ.19,262 (இயான்)முதல் ரூ.65,327 (சொனாட்டா) வரை சலுகைகள் வழங்கியுள்ளது.டாடாடாடா மோட்டார்ஸ் மற்ற நிறுவனங்களை விட மிக பெரும் சரிவை சந்தித்துள்ளது. ரூ.30000 (இண்டிகா இவி2)முதல் ரூ.1,00,000(ஆர்யா) வரை சலுகைகள் வழங்கியுள்ளது.மஹிந்திராமஹிந்திரா வரி உயர்வினால் பெரும் சரிவை சந்தித்துள்ளது. ரூ.5000 (பொலிரோ)முதல் ரூ.58,888(குவான்ட்டோ) வரை சலுகைகள் வழங்கியுள்ளது.செவ்ரோலெட்செவர்லே ரூ.5,000(செயில்)முதல் ரூ.35,000 (டவேரா) வரை சலுகைகள் வழங்கியுள்ளது.டொயோட்டாடொயோட்டா நிறுவனத்தின் பிரபலமான இன்னோவா காரின் விற்பனை சரிந்துள்ளது. ரூ.17,500(எடியாஸ் மற்றும் லீவா) முதல் ரூ.35,000 (இன்னோவா மற்றும் ஆல்டிஸ்) வரை சலுகைகள் வழங்கியுள்ளது.ஹோண்டாஹோண்டா அமேஸ் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. ஆனால் மற்ற கார்களின்…

Read More