இன்டெல் நிறுவனம் ஐடி துறையில் முன்னணி நிறுவனமாகும். இந்த நிறுவனம் ஆட்டோமொபைல் துறை சார்ந்த ஒரு முயற்சினை மேற்கொண்டுள்ளது. அதாவது மழைக்காலங்களில் மிக தெளிவாக சாலைகள் தெரிவதில் சிக்கல் ஏற்படுவதனால் விபத்து அதிகரிக்கின்றது. இதனை குறைக்கும் வகையில் இன்டெல் புதிய நுட்பத்தை உருவாக்கி வருகின்றது.முகப்பு விளக்குகளில் கேமரா ஹோஸ்களை இனைக்கப்பட்டிருக்கும். மழை துளி விழும்பொழுது இயல்பாகவே விழும் ஆனால் பாதையை ஓட்டுனர்க்கு காட்டும் பொழுது படத்தில் உள்ளதை போலேவே காட்டும் இதனால் வாகன ஓட்டிக்கு மிக இயலபாக வாகனத்தை இயக்க முடியும். இது ஒரு மாயம் போலத்தான் மழைத்துளி விழும் ஆனால் குறைவாகத்தான் தெரியும்.இதற்க்காக பிரித்யோகமான ஒரு சிப்பினை உருவாக்கி வருகின்றது. இந்த நுட்பமானது தற்பொழுது சோதனையில் உள்ளது. அடுத்த சில ஆண்டுகளுக்குள் இந்த நுட்பம் உற்பத்தி நிலையை எட்டும் என எதிர்பார்க்கலாம். இந்த தொழில்நுட்பம் வரும்பொழுது மழைக்காலங்களில் ஏற்படும் விபத்தினை பெருமளவு குறைக்க முடியும்.
Author: MR.Durai
செடான் கார் பிரிவில் முதன்மையாக விளங்கும் மாருதி டிசையருக்கு கடுமையான சவாலை ஹோண்டா அமேஸ் கொடுத்துள்ளது. இதனால் டிசையர் காருக்கு மிகப் பெரிய சவால் ஏற்ப்பட்டுள்ளது.அமேஸ் செடான் காரின் மைலேஜ் மிக அதிகப்படியான இடவசதி மற்றும் சிறப்பம்சங்கள் மேலும் டிசையர் காரின் விலையை ஒட்டியோ அமேஸ் விலை ஆகியவை அமேஸ் காரின் வரவேற்ப்புக்கு முக்கிய காரணியாகும்.கடந்த ஏப்ரல் மாதத்தில் 4852 அமேஸ் காரை விற்பனை செய்துள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 70 % பங்கினை அமேஸ் வகிக்கின்றது. இதன் விற்பனை வேகம் தொடர்ந்தால் டிசையர் சரிவினை சந்திக்குமா ?அறிமுகம் செய்து ஒரு மாதம்கூட நிறைவுபெறுவதற்க்கு முன் 22,000 முன்பதிவுகளை கடந்துள்ளது. இது டிசையரின் வரவேற்ப்பிற்க்கு இனையானதாகும்.5 வருடமாக சந்தையில் உள்ள டிசையர் மிக வழுவான அடித்தளத்தை அமைத்துள்ளது. பலதரப்பட்ட இந்திய மக்களின் மிக நன்மதிப்பினை பெற்ற காராகவும் டிசையர் விளங்குவதால் அமேஸ் மிக கடுமையான சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.மாருதி டிசையர்…
ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி காருக்கு அமோக வரவேற்பினை பெற்றுள்ளது. பல வருடங்களாக எஸ்யூவி சந்தையில் முன்னிலை வகித்து வந்த மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவியை மார்ச் மாத விற்பனையில் பின்னுக்கு தள்ளியுள்ளது.ரெனோ டஸ்ட்டர் மார்ச் மாதத்தில் 6300 கார்களை விற்றுள்ளது.இது ரெனோ நிறுவனத்தின் விற்பனையில் 80% பங்கினை டஸ்ட்டர் வகிக்கின்றது. இதே மாதத்தில் ஸ்கார்பியோ 4700 கார்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளது.எஸ்யூவி சந்தையில் ஸ்கார்பியோதான் முதன்மை காராக விளங்கி வந்தது என்பது குறிப்பிடதக்கதாகும். 11 வருடங்களுக்கு மேலாக விற்பனையில் உள்ள ஸ்கார்பியோவிற்க்கு இது சரிவு காலமாகும்.மேலும் விரைவில் வெளிவரவுள்ள ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், நிசான் டஸ்ட்டர் போன்றவை ரெனோ டஸ்ட்டர் மற்றும் ஸ்கார்பியோவிற்க்கு மிகுந்த சவாலை ஏற்ப்படுத்தும்.மஹிந்திரா ஸ்கார்பியோவை புதுப்பிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எஸ்யூவி கார்களுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளதால் தன்னுடைய கார்களின் கிரவுண்ட் கிளியரன்ஸ்யை குறைக்க திட்டமிட்டுள்ளது.மஹிந்திரா நிறுவனத்தை எஸ்யூவி பிரிவில் வீழ்த்துவது சாதரனமாக நடக்க கூடியதல்ல…இந்த செய்தி பிசினஸ் ஸ்டான்டர்டு கட்டுரை அடிப்படையாக…
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரின் 4 விதமான மாறுபட்டவையில் விற்பனைக்கு வரும் என தகவல்கள் கசிந்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படும் ஈக்கோஸ்போர்ட் இன்னும் சில வாரங்களில் விற்பனைக்கு வரும்.3 விதமான என்ஜின்கள் பொருத்தப்பட்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி வெளிவரும். அவை 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.0 லிட்டர் ட்ர்போ ஈக்கோபூஸ்ட் எஞ்சின் ஆகும்.ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் 4 விதமான வேரியண்ட்கள்1. பேஸ் மாடல் பெயர் அம்பியண்ட் ஆகும்.2. டிரன்ட்3. டைட்டானியம்4. டாப் மாடல் டைட்டானியம் ஆப்ஷனல்1. அம்பியண்ட்இந்த வேரியண்டில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.இதன் சிறப்பம்சங்கள்ரேடியோ, ஆகஸ், யூஸ்பி, பூளுடூத் அமைப்புதட்டையாக பின் இருக்கைகளை மடக்க முடியும்எலெக்ட்ரிக் ஸ்டீயரிங் டில்ட் டெலஸ்கோப்பிக் அட்ஜஸ்ட்,எலகட்ரிக் விங் மிரர்15 இன்ச் வீல்ஃபிரன்ட் பவர் வின்டோஸ்2. டிரன்ட் டிரன்ட் மாறுபட்டவையில் அம்பியன்ட் மாறுபட்டவையில் உள்ள வசதிகளுடன் கூடுதலாக ஏபிஎஸ், இபிடி60:40 ஸ்பிளிட் ரியர் இருக்கைகள்ஸ்டீயரிங்கில் ஆடியோ கன்ட்ரோல்ஓட்டுனர் இருக்கை…
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் சொகுசு கார் பிரிவில் முன்னிலை நிறுவனமாகும். தனது போட்டியாளர்களான ஆடி, பிஎம்டபிள்யூ, ஜெஎல்ஆர்(ஜாகுவார் லேண்ட் ரோவர்) போன்ற நிறுவனங்களை சமாளிக்க இந்த வருடத்திற்க்குள் 5 மாடல்களை இந்தியாவில் களமிறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இளம் வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு 2013க்குள் வரப்போகும் 5 மாடல்கள் பி-கிளாஸ் டீசல், புதிய ஏ-கிளாஸ், ஜிஎல்-கிளாஸ் இந்த மூன்று இன்னும் சில மாதங்களில் விற்பனைக்கு வரும். மேலும் ஜிஎல்ஏ எஸ்யூவி மற்றும் சிஎல்ஏ கூப் கார்கள் இந்த வருடத்திற்க்குள் விற்பனைக்கு வரும்.இந்தியாவிலே கார்களை கட்டமைக்கவும் திட்டமிட்டுள்ளதாம். ஆனால் எந்த வகையான மாடல் என்பதற்க்கான உறுதியான தகவல் இல்லை.வருகிற மே 16ல் மேம்படுத்தப்பட்ட ஜிஎல்-கிளாஸ் விற்பனைக்கு வருகின்றது.
ஹோண்டா சிபி டிரிகர் 150சிசி பைக் மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. சிபி டிரிகர் அறிமுகத்தின் பொழுது விலை விபரங்கள் அறிவிக்கப்படவில்லை. தற்பொழுது சிபி டிரிக்கர் விலை அறிவிக்கப்பட்டுள்ளது.ஹோண்டா சிபி டிரிகர் 150சிசி 4 ஸ்டோர்க் ,149.1 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு எஞ்சின் பொருதப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 14.41 எச்பி @ 8500rpm வரை வெளிப்படுத்தும். மற்றும் டார்க் 12.5என்எம் @ 6500rpm ஆகும்.ஹோண்டா சிபி டிரிகர் 150சிசி பைக் மைலேஜ் லிட்டருக்கு 60 கிமீ ஆகும்.பல்சர் 150 , யமாஹா எஃப்-இசட் எஸ், அப்பாச்சி 160 பைக்களுக்கு சிபி டிரிகர் 150 சவாலினை ஏற்படுத்தும்.ஹோண்டா சிபி டிரிகர் பைக் விலை ரூ 67,384 ஆகும்.(தில்லி எகஸ்ஷோரூம்)சிபி டிரிகர் பைக் இந்த மாதம் முதல் டீலர்களிடம் கிடைக்கும்.ஹோண்டா சிபி டிரிகர் முழுமையான விவரம் அறிய கீழே சொடுக்கவும்.ஹோண்டா சிபி டிரிக்கர் பைக்