ஜாகுவார் நிறுவனம் இந்தியாவில் ஜாகுவார் எஃப்-டைப் காரினை வருகிற ஜூலை மாதம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. ஜாகுவார் எஃப்-டைப் கார் இரண்டு விதமான மாறுபட்டவையில் விற்பனைக்கு வரும். இந்தியாவில் ஜாகுவார் எஃப்-டைப் காரின் விலை ரூ 1.2 கோடி முதல் ரூ 1.4 கோடிக்குள் இருக்கலாம்.2013 ஆம் ஆண்டிற்க்கான சிறந்த வடிவமைப்புக்கான விருதினை ஜாகுவார் எஃப்-டைப் கார் வென்றுள்ளதை முன்பே பதிவிட்டிருந்தேன். முழுமையான கட்டமைக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படுவதனால் 100 சதவீத வரியினால் விலை அதிகமாகத்தான் இருக்கும்.இரண்டு விதமான வேரியண்டில் வெளிவரும் . அவை வி6 எஸ் மற்றும் வி8 எஸ் ஆகும்.ஜாகுவார் எஃப்-டைப் வி6 எஸ்வி6 எஸ் மாறுபட்டவையில் 3.0 லிட்டர் சூப்பர்சாரஜ்டு இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் அதிகபட்ச ஆற்றல் 380பிஎஸ் ஆகும். 8 ஸ்பீடு தானியிங்கி கியர் பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வேகம் எலெக்ட்ரானிக் முறை மூலம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இதன் உச்சகட்ட வேகம் மணிக்கு 275கிமீ ஆகும். 0-100 கிமீ வேகத்தை 4.9 விநாடிகளில்…
Author: MR.Durai
செவர்லே என்ஜாய் வருகிற மே 9யில் விற்பனைக்கு வரவுள்ளது. செவர்லே என்ஜாய் எம்பிவி கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் விற்பனைக்கு வரும்.செவர்லே என்ஜாய் பெட்ரோல் கார்செவர்லே என்ஜாய் காரில் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 104 பிஎஸ் ஆகும் மற்றும் டார்க் 131 என்எம் ஆகும்.செவர்லே என்ஜாய் டீசல் கார் செவர்லே என்ஜாய் காரில் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.இதன் ஆற்றல் 77.5 பிஎஸ் ஆகும் மற்றும் டார்க் 188 என்எம் ஆகும்.7 மற்றும் 8 நபர்கள் என இரண்டு விதமான இருக்கை வசதிகள் இருக்கும்.இன்னோவோ, சைலோ, மாருதி எர்டிகா, எவாலியா போன்ற கார்களுக்கு கடும் சவாலினை ஏற்ப்படுத்தும்.செவர்லே என்ஜாய் எதிர்பார்க்கப்படும் விலை ரூ 6 முதல் 9 லட்சம் வரை இருக்கலாம்.
லேண்ட்ரோவர் நிறுவனம் இங்கிலாந்தினை தலைமையிடமாக கொண்டு 1948 ஆம் ஆண்டு தொடங்கபட்டது. நேற்றுடன் (ஏப்ரல் 30) லேண்ட்ரோவர் 65 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.லேண்டரோவர் கடந்த 2008 முதல் டாடா குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றது. ஹியூ 166 (HUE 166)என்ற பெயரில் கேக் வைத்து கொண்டாடியுள்ளது. லேண்ட் ரோவர் 1 சீரிஸ் காரினை நினைவுப்படுத்தும் வகையில் இந்த பெயரினை வைத்துள்ளது.இந்த கேக் ராயல் நேவியின் லினஸ் ஹெலிக்பட்டரில் கொண்டு வரப்பட்டது. இந்த கொண்டாட்டத்தில் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் அனைத்து மாடல்களும் காட்சி வைக்கப்பட்டிருந்தது.65வது கொண்டாட்டத்தை இந்தியாவிலும் கொண்டாட உள்ளது. இதற்க்காக வருகிற மே 3யில் ஆம்பி வேலியில் லேண்ட்ரோவர் எக்ஸ்பிரியன்ஸ் நிகழ்வினை நடத்த உள்ளது. இந்த நிகழ்வில் ஆல்-டெரரின் அனுபவத்தினை பெற முடியும்.மேலும் டிஃபென்டரில் ஸ்பெஷல் எடிசனை வெளியிட்டுள்ளது. டிஃபென்டர் எல்எக்ஸ்வி என்ற பெயரில் கொண்டாட்ட எடிசனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் 24 லட்சம் ஆகும்.
ராயல் என்பீல்டு நிறுவனம் சென்னை ஒரகடத்தில் புதிய ஆலையை கட்டமைத்துள்ளது. இதனால் ராயல் என்பீல்டு பைக்களுக்கான காத்திருக்கும் காலம் குறையும். ராயல் என்பீல்டு புதிய ஆலையில் முதற்கட்டமாக ஆண்டுக்கு 1.50 லட்சம் பைக்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். 2014 ஆம் ஆண்டிற்க்குள் 2.50 லட்சம் பைக்கள் தயாரிக்கப்படும்.ரூ.150 கோடியில் சென்னை அருகே உள்ள ஒரகடத்தில் ஐசர் நிறுவனத்தை தலைமை நிறுவனமாக கொண்டு செயல்படும் ராயல் என்பீல்டு அமைத்துள்ளது. இந்த ஆலையின் உற்பத்தி திறன் ஆண்டிற்க்கு 2.50 லட்சம் பைக் ஆகும்.இந்த ஆலையில் பெயின்டிங் முறை ஆட்டோமேட்டிக்காக அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 600 மோட்டார் சைக்கிள்களை உருவாக்க முடியும். 50 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆலை அமைந்துள்ளது. தற்பொழுது டெஸர்ட் ஸ்டோர்ம் பைக் உற்பத்தி தொடங்கியுள்ளது. விரைவில் தன்டர்பேர்டு 350 மற்றும் 500 உற்பத்தி தொடங்கும்.சித்தார்த் லால் MD & CEO (Eicher Motors Ltd) கூறுகையில்..ராயல் என்ஃபீல்டு வரலாற்றில் இந்த ஆலையின் தொடக்கம் புதிய மைல்கல்லாக…
சொகுசு கார் பிரிவில் ஆடி நிறுவனம் பிஎம்டபிள்யூ நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை கைப்பற்றியுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் இரண்டாம் இடத்தை கைப்பற்றியுள்ளது. ஆனால் பிஎம்டபிள்யூ மூன்றாம் இடத்திற்க்கு தள்ளப்பட்டுள்ளது.ஆரம்ப காலகட்டங்களில் சொகுசு கார் விற்பனையில் பென்ஸ்தான் முதன்மையாக விளங்கிவந்தது. 2010 ஆம் ஆண்டு முதல் பிஎம்டபிள்யூ முதலிடத்தினை கைப்பற்றியது.நடப்பு வருடத்தில் முதல் 3 மாதங்களில் விற்பனையான கார்களின் எண்ணிக்கையை வைத்து ஆடி முதலிடத்தினை கைப்பறியதாக சியாம் வெளியிட்டுள்ளது.ஆடிஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தை தலைமையாக கொண்டு செயல்படும் ஆடி நிறுவனம் 2616 கார்களை விற்பனை செய்துள்ளது.மெர்சிடிஸ் பென்ஸ்மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 2009 கார்களை விற்பனை செய்துள்ளது. பிஎம்டபிள்யூ பிஎம்டபிள்யூ நிறுவனம் 1465 கார்களை விற்பனை செய்துள்ளது. இவற்றில் மினி பிராண்டின் கார்களும் அடங்கும். மினி பிராண்டில் 55 கார்களை விற்றுள்ளது. இது கடந்த ஆண்டின் முதல் மூன்று மாத விற்பனையை விட 40.5 % சரிவாகும். இது பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்க்கு மிகப் பெரிய சரிவாகும்.மூன்று மாதங்களை வைத்து மட்டும்…
மாருதி சுசுகி டிசையர் காரினை மேலும் பிரபலப்படுத்த டிசையர் மைலேஜ் ராலி போட்டி நடைபெற்றது. இந்த போட்டி நாடு முழுதும் உள்ள 31 முன்னணி நகரங்களில் நடைபெற்றது.இந்த போட்டியின் நோக்கம் மைலேஜ் யார் அதிகம் தருகிறார்கள் என்பதே ஆகும். மும்பையில் நடைபெற்ற ராலியில் குருதீப் சிங் என்பவர் ஒரு லிட்டர் டீசலுக்கு 45.8 கிமீ என பதிவு செய்துள்ளார். சிரிரான்ங் என்பவர் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 42.1 கிமீ என பதிவு செய்துள்ளார்.டிசையர் மைலேஜ் ராலியின் சராசரி டீசல் மைலேஜ் லிட்டருக்கு 32.4கிமீ மற்றும் பெட்ரோல் லிட்டருக்கு 30.6கிமீ ஆகும்.5 வருடங்களில் 5 லட்சத்திற்க்கு அதிகமான வாகனங்களை மாருதி விற்பனை செய்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாகவே செடான் பிரிவில் டிசையர் முதலிடத்தில் உள்ளது.