ஹோண்டா அமேஸ் காரினை ஹோண்டா கடந்த வாரம் அறிமுகம் செய்தது. ஹோண்டா அமேஸ் காருக்கு மிக சிறப்பான வரவேற்பினை பெற்று வருவதனை முன்பதிவு மூலம் உறுதி செய்துள்ளது.ஹோண்டா நிறுவனத்தின் முதல் டீசல் காராக வெளிவந்துள்ள அமேஸ் காருக்கு முன்பதிவு 8000 த்தை நெருங்கிவிட்டதாம் இதனால் முன்பதிவு செய்தவர்களுக்கும் அமேஸ் செடான் கார் காலதாமதாமாக தான் கிடைக்கும்.மாதம் 4000-5000 அமேஸ் கார்களை விற்பனை செய்ய ஹோண்டா திட்டமிட்டுள்ளது. தற்பொழுதைய ஹோண்டா ஆலையின் உற்பத்தி செய்யக்கூடிய அமேஸ் கார் திறனும் மாதம் 5000 மட்டுமே. எனவே 2013-2014 ஆம் நிதி ஆண்டில் 50000 கார்களை விற்பனை செய்வதற்க்காக திட்டமிட்டுள்ளது.தற்பொழுது ஹோண்டா இந்தியாவின் உற்பத்தி திறன் அனைத்து கார்களையும் சேர்த்து 1.2 லட்சமாகும். இதனை இரட்டிப்பாக்க ஹோண்டா திட்டமிட்டுள்ளது. அதாவது ஆண்டுக்கு 2.4 லட்சம் கார்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதற்க்காக ரூ 2400 கோடியை மூதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.இந்தியாவில் தற்காலிகமாக உற்பத்தி நிறுத்தப்பட்ட ஹோண்டா…
Author: MR.Durai
செவர்லே கார்களுக்கு நாடு முழுவதும் உள்ள 250 சர்வீஸ் மையங்களிலும் இலவச பரிசோதனை முகாம் நடைபெற்று வருகின்றது. யூ ஃபர்ஸ்ட் கேம்ப ஏப்ரல் 19 முதல் 21 வரை மட்டுமே. அதாவது நாளை வரை மட்டுமே.இந்த இலவச பரிசோதனை முகாமில் உதிரிபாகங்கள் மற்றும் லேபர் சார்ஜ் போன்றவற்றின் மீது தள்ளுபடிகள் பெற முடியும். மேலும் இந்த இலவச முகாமில் பரிசுகளும் வழங்குவதாக செவர்லேட் தெரிவித்துள்ளது.உங்கள் காரினை இலவச முகாமில் பரிசோதிக்க நாளையே கடைசி நாள். உங்கள் அருகாமையில் உள்ள சர்வீஸ் மையத்தை அனுகவும்.
20 ஆண்டுகளாக விற்பனையில் உள்ள ஹீரோ ஸ்பிளென்டர் பைக் ஸ்பெஷல் எடிசனாக ஸ்பிளென்டர் புரோ கோல்டு என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.கடந்த 20 ஆண்டுகளாக விற்பனையில் தொடர்ந்து முன்னணிலை வகிக்கும் ஸ்பிளென்டர் பைக்கின் சிறப்பு எடிசனில் தங்க நிறத்தில் கிடைக்கும். மேலும் ஸ்பெஷல் எடிசன் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும்.இன்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. ஸ்பிளென்டர் பைக்கில் 97.2 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் அதிகபட்ச ஆற்றல் 7.6 பிஎச்பி ஆகும். மற்றும் டார்க் 8.04 என்எம் ஆகும்.ஸ்பிளென்டர் புரோ கோல்டு மைலேஜ் லிட்டருக்கு 79 கிமீ ஆகும். ஸ்பிளென்டர் புரோ கோல்டு பைக் ஆலாய் வீல் பயன்படுத்தப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் ஸ்டார்ட் ஆகும்.ஸ்பிளென்டர் புரோ பைக்கினை விட ஸ்பிளென்டர் புரோ கோல்டு ரூ 1000 அதிகமாகும். ஸ்பிளென்டர் புரோ கோல்டு விலை ரூ 48,500 (தில்லி எக்ஸ்ஷோரூம் விலை)
ஆடி ஏ6 சிறப்பு எடிசனை ஆடி நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் 6000 ஆடி ஏ6 கார்களை விற்பனை செய்ததை கொண்டாடும் வகையில் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம் செய்துள்ளது.ஸ்பெஷல் எடிசனில் உள்ள அம்சங்கள்1. பின்புற காற்றுப்பைகள்2. எம்எம்ஐ டச் கீ3. எல்இடி முகப்பு விளக்கு4. கோ-டிரைவர் சீட் அட்ஜஸ்மென்ட்5. 4 ஜூன் ஏர்கன்டிசன்6. எம்எம்ஐ ரீமோட் கன்ட்ரோல்7. ஆடாப்ட்டிவ் ஏர் சஸ்பென்ஷன் வித் ஆடி டிரைவ்.ஆடி ஏ6 காரின் விலை ரூ 46.33 லட்சம் (தில்லி எக்ஸ்ஷோரூம் விலை)
டாடா நிறுவனத்தின் இன்டிகா இவி2 காருக்கு சிறப்பு கடன் திட்டம் மற்றும் விலை குறைப்பு செய்துள்ளது. இண்டிகா eV2 காரினை மாருதி வேகன் ஆர் காருடன் ஒப்பீடு செய்து இன்டிகா காரின் சிறப்புகளை தனித்து காட்டியுள்ளது.ரூ 6542 மாத தவனையில் இன்டிகா இவி2 காரை வாங்கும் வகையில் புதிய கடன் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.ரூ 45,000 வரை இண்டிகா இவி2 காரின் விலையை குறைத்துள்ளது. ரூ 4.58 லட்சத்திலிருந்து ரூ 4.15 லட்சமாக குறைத்துள்ளது.பிஎஸ் 4 மாடல் ஆரம்ப விலை ரூ 4.15 லட்சம் மற்றும் பிஎஸ் 3 மாடல் ஆரம்ப விலை ரூ 3.87 லட்சம் ஆகும்.மிக அதிகப்படியாக விற்பனையாகும் வேகன்ஆர் காருடன் இண்டிகா காரினை ஒப்பீட்டு இதன் மைலேஜ், என்ஜின் ஆற்றல் , ஆலாய் வீல் மற்றும் வாரண்டியினை குறிப்பிட்டுள்ளது. இந்த விவரங்களை மேலே உள்ள படத்தின் மீது சொடுக்கி கானுங்கள்,
லம்போர்கினி நிறுவனத்தின் பிரபலமான ஸ்போர்ட்ஸ் கார்களை பார்த்திருப்போம். இனி லம்போர்கினி நிறுவனத்தின் நைட்ரோ டிராக்டர் இந்தியா வருகின்றது. லம்போர்கினி டிராக்டர்கள் இந்தியாவின் விலை அதிகமான டிராக்டர்களாக விளங்கும்.சேம் டச்-ஃபார்(SAME Deutz-Fahr-SDF) நிறுவனம் லம்போர்கினி டிராக்டர்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. மிக நேர்த்தியான வடிவமைப்பினை கொண்ட டிராக்டராக விளங்கும் நைட்ரோ டிராக்டர் பல அதிநவீன வசதிகளுடன் விளங்கும்.லம்போர்கினி நைட்ரோ டிராக்டர் மிக அசத்தலான வடிவமைப்பினை கொண்டது. இதன் விளக்குகள் அனைத்தும் எல்இடி பொருத்தப்பட்டவையாக விளங்கும். மேலும் சொகுசு காரில் பயணிப்பதை போல சொகுசு தன்மையை வழங்கும்.சேம் டச்-ஃபார் ஆலை ரானிப்பேட்டையில் உள்ளது. கடந்த ஆண்டு இந்த ஆலையில் 6000 டிராக்டர்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 600 டிராக்ட்ர்கள் லம்போர்கினி தொழில்நுட்பத்தினை கொண்டதாகும்.இவை ஐரோப்பா மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.இந்த டிராக்டர்கள் பெரிய விவசாயிகளை குறிவைத்து விற்பனை செய்யப்படும்.