ரொம்ப போர் அடிக்குது எப்ப பார்த்தாலும் சின்சியரா எழுதறது அதான் கொஞ்சம் நக்கலான கார் படங்கள் ரசிங்க.. பிடிச்சா சொல்லுங்க……பின்னாடி நிக்கற வண்டிய விட உயரமா இருக்கனா2014 தேர்தலுக்கு அரசியல் தலைகள் பயன்படுத்தப்போற கார்நம்மள ஆட்டிவிட ஒரு பயபுள்ளையும் இல்லஇதுதான் பசுமை கார்இதுதான் 6வீல் டிரைவ்thanks to funnypictures24.com
Author: MR.Durai
மாருதி நிறுவனத்தின் மிக பிரபலமான ஜிப்ஸி ஆஃப்ரோடு வாகனம் இராணுவத்தில் பெரிய பங்கு வகித்து வருகின்றது. தற்பொழுது ராணுவத்தில் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு சில அடிப்படை வசதிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதனால் ராணுவத்தில் இருந்து ஜிப்ஸி விடைபெறும்இராணுவ வாகனங்களுக்கான புதிய நிபந்தனைகள1. பாதுகாப்பு வசதிகள் இருத்தல் அவசியம். குறிப்பாக டூவல் காற்றுப்பைகள் மற்றும் ஏபிஎஸ் இருக்க வேண்டும்.2. குறைந்தபட்ச ஆற்றல் 120 பிஎச்பி வெளிப்படுத்த வேண்டும்.3. ஏசி போன்ற வசதிகளும் அவசியமாகின்றன.4. 800 கிலோ எடையினை சுமக்கும் திறன் கொண்டதாக இருத்தல் அவசியம்.5. சென்டர் லாக், 5 கதவுகள்,மற்றும் பவர் வின்டோஇவற்றை அவசியம் வாகனங்கள் கொண்டிருக்க வேண்டும். ஆனால் ஜிப்ஸி இது போன்ற தகுதிகளை நிறைவேற்ற தவறுவதால் இராணுவத்தில் இருந்து ஜிப்ஸின் பயன்பாட்டினை குறைத்து மாற்று வாகனங்களை தேர்வு செய்வது அவசியமாகிறது.பல்வேறு இராணுவ பயன்பாடுகளுக்காக 30,000 வாகனங்கள் வாங்க ரூ 3000 கோடியினை ஒதுக்கியுள்ளனர். இதனை கைப்பற்ற டாடா…
செவர்லே செயில் செடான் கார் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளதை 2 மாதங்களின் நடந்துள்ள முன்பதிவு மூலம் உறுதியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட செவர்லே செயில் 7000 முன்பதிவுகளை கடந்துள்ளது.செவர்லே செயில் ஆனது செடான் கார் பிரிவில் உள்ள ஸ்விப்ட் டிசையருக்கு மிக பெரிய சவாலை கொடுத்துள்ளது. மேலும் வருகிற 11யில் வெளிவரவுள்ள இந்தியாவின் அதிக மைலேஜ் தரக்கூடிய காராக ஹோண்டா அமேஸ் விளங்கும். எனவே செடான் கார் பிரிவில் வலுவான போட்டி தொடங்கிவிட்டது.செவர்லே செயில் செடான் கார் ஸ்விப்ட் டிசையர் காரை விட நல்ல இடவசதி உள்ளது. 8 விதமான மாறுபட்டவையில் செயில் கிடைக்கும். விலை டிசையருடன் போட்டியிடும் வகையில் உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டிலும் கிடைக்கும்.1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தியுள்ளனர். டீசல் மைலேஜ் லிட்டருக்கு 22.1 கிமீ மற்றும் பெட்ரோல் மைலேஜ் லிட்டருக்கு 18.2 கிமீ ஆகும்.செவர்லே செயில்…
ஸ்கோடா நிறுவனம் சூப்பர்ப் காரின் மேம்படுத்தப்பட்ட படங்கள் மற்றும் தகவல்களை வெளியிட்டுள்ளது. சூப்பர்ப் காரின் மேம்படுத்தப்பட்ட வகையில் எவ்வித இன்ஜின் மாற்றங்களும் இல்லை ஆனால் தோற்றங்களில் பல மாறுதல்களை கொடுத்துள்ளது.முன்புற கிரில், லோகோ, முகப்பு மற்றும் ஃபோக் விளக்குகள், முன் ஃபென்டர்ஸ், பேனட், பகல் நேர விளக்குகள், பின்புற விளக்குகள் போன்ற வெளிப்புற மாற்றங்களை தந்துள்ளது.உட்ப்புறத்தில் புதிய 4 ஸ்போக் ஸ்டீரியங் வீல், புதிய கியர் லிவர், தானியிங்கியாக பின்புற செல்ல உதவும் கேமரா பயன்படுத்தியுள்ளனர். எஞ்சினில் மாற்றங்கள் இல்லை. சூப்பர்ப் மேம்படுத்தப்பட்ட கார் எப்பொழுது வெளிவரும் என உறுதியான தகவல் இல்லை.இந்த ஆண்டின் இறுதியில் வரலாம் என எதிர்பார்க்கலாம்.
மஹிந்திரா & மஹிந்திரா மிக பிரபலமான எஸ்யூவி கார்கள் தயாரிக்கும் நிறுவனம் என்று அனைவருக்கும் தெரியும். மேலும் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் ரேவா எலக்ட்ரிக் நிறுவனத்தை கைப்பற்றிய பின்னர் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான இந்தியாவினை உருவாக்கி வருவதில் மிகுந்த முயற்சி மேற்கொண்டு வருகின்றது.முதல் கட்டமாக சில வாரங்களுக்கு முன் மஹிந்திரா ரேவா e2o விற்பனைக்கு வந்தது.அடுத்த வருடத்திற்க்குள்(13-14) மஹிந்திரா வெரிட்டோ செடான் காரினை எலக்ட்ரிக் செடானாக வெளிவருவதனை மஹிந்திரா உறுதிபடுத்தியுள்ளது. எலக்ட்ரிக் வெரிட்டோ 38.9 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.மேலும் இலகுரக டிரக் மேக்சிமோவினை எலக்ட்ரிக் டிரக்யாகவும் கொண்டு வரவுள்ளதாம். தற்பொழுது 50 டிரக்கள் தயார்நிலையில் உள்ளதாம். மேலும் ஜீயோவினை எலக்ட்ரிக் ஆக மாற்ற உள்ளதுஇவற்றிக்கு ரூ 150 கோடி முதலீடு செய்துள்ளது.
ஆடி ஆர் 8 கார் சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. தற்பொழுது ஆடி ஆர் 8 வி 10 ப்ளஸ் காரினை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. முன்பு பயன்படுத்தப்பட்டிருந்த லம்போர்கினியின் 5.2 லிட்டர் வி 10 எஞ்சினை மேம்படுத்தியுள்ளது.542 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய சக்திவாய்ந்த எஞ்சினாகும். இதன் டார்க் 540 என்எம் ஆகும். 0-100கிமீ வேகத்தினை 3.5 விநாடிகளில் நெருங்கிவிடும். எஸ் டரானிக் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.ஆடி ஆர் 8 வி 10 ப்ளஸ் காரின் விலை 2.05 கோடியாகும்.(மும்பை விலை)