டுகாட்டி மான்ஸ்ட்டர் 795 பைக்கினை அடிப்படையாக கொண்ட டுகாட்டி மான்ஸ்ட்டர் 696 பைக் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர டுகாட்டி திட்டமிட்டுள்ளது.டுகாட்டி மான்ஸ்ட்டர் 795 பைக்கின் வசதிகள் மற்றும் வடிவமைப்பு, சிறப்பம்சங்கள் என பலவும் டுகாட்டி மான்ஸ்ட்டர் 696 பைக்கிலும் இருக்கும். ஆனால் எஞ்சின் 696சிசி காற்றுமூலம் குளிர்விக்கப்படும் எஞ்சின் பயன்படுத்த உள்ளனர். இந்த எஞ்சின் 80 எச்பி ஆற்றலை 9000 ஆர்பிஎம் வேகத்தில் வெளிப்படுத்தும்.795 பைக்கினை 696 ஆக குறைக்க காரணம் பொது பட்ஜெட்டில் 800சிசி அதற்க்கு மேல் உள்ள பைக்களை இறக்குமதி செய்தால் வரி உயர்வு அறிவிக்கப்பட்டதாலே இந்த முடிவு. டுகாட்டி மான்ஸ்ட்டர் 795 பைக்கினை விட இரண்டு கிலோ மட்டும் குறைவாக இருக்கும். 795 பைக்கினை அனைத்து அம்சங்களும் இருக்கும் என்பதனை டுகாட்டி உறுதிசெய்துள்ளது. டுகாட்டி மான்ஸ்ட்டர் 696 எதிர்பார்க்கப்படும் விலை ரூ 7 இலடசத்திற்க்கு மேல் இருக்கும்.
Author: MR.Durai
ஹோண்டா அமேஸ் செடான் கார் மிகுந்த எதிர்பார்ப்பினை பெற்று வருகின்றது. வருகிற ஏப்ரல் 11 வெவிவரவுள்ள அமேஸ் காருக்கு முன்பதிவு தொடங்கியுள்ளது. ரூ 21,000 கட்டி முன்பதிவு செய்துகொள்ளலாம். 30 நாட்களில் கார் டெலிவரி செய்துவிடுவதாக ஹோண்டா உறுதியளித்துள்ளது.விலை ரூ 6 இலட்சத்தில் தொடங்கலாம்மிக வசிகரமான தோற்றத்துடன் விளங்கும் ஹோண்டா அமேஸ் கார் படங்கள் உதவி ஜிக்வீல்ஸ். ஹோண்டா அமேஸ் கார் பல முன்னணி செடான் கார்களின் சந்தையை வலுவிலக்க செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்க்கு காரணம் ஹோண்டா அமேஸ் மைலேஜ் 25.8 மேலும் பல விவரங்கள் அறிய கிளிக் பன்னுங்க: ஹோண்டா அமேஸ்
ஹூண்டாய் நிறுவனம் தன்னுடைய அனைத்து மாடல் கார்களை ரூ 575 முதல் ரூ 2830 வரை உயர்த்தியுள்ளது. உயர்த்தப்பட்ட விலை விபரங்கள் 2013 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. உயர்த்தப்பட்ட விலை விபரம்இயான் மாடல் ரூ 2500 உயர்கின்றது.ஐ10 மாடல் ரூ 900 உயர்கின்றது.ஐ20 பெட்ரோல் மற்றும் டீசல் ரூ 575 உயர்கின்றது.சான்ட்ரோ மாடல் ரூ 2830 உயர்கின்றது.சொனாட்டா மாடல் ரூ 900 உயர்கின்றது.எலன்ட்ரா மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் ரூ 1740 உயர்கின்றது.வெர்னா மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் ரூ 1340 உயர்கின்றது.சான்டா ஃபீ மாடல் ரூ 2813 உயர்கின்றது.
ஹோண்டா நிறுவனத்தின் அமேஸ் செடான் வருகிற ஏப்ரல் 11 அறிமுகம் செய்யபட உள்ளது. பிரியோ காரினை அடிப்படையாக கொண்ட அமேஸ் செடான் டீசல் கார் லிட்டருக்கு 25.8 கிமீ தரும் மேலும் 100 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும். தற்பொழுது முன்பதிவு தொடங்கியுள்ளது.முன்பதிவு செய்த சில வாரங்களிலே டெலிவரி செய்து விடுவார்கள். தற்பொழுதே உற்.பத்தி தொடங்கிவிட்டதால் அதிக நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. செடான் பிரிவில் முன்னணியாக விளங்கும் ஸ்விப்ட் டிசையர் காரின் விற்பனையை சரிவடைய செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பல டீலர்களிடம் ஹோண்டா அமேஸ் வந்துவிட்டது.முன்பு வெளிவந்த பல தகவல்களை அடங்கிய ஹோண்டா அமேஸ் கார் மைலேஜ் பதிவுகளை வாசிங்க..
இந்தியாவின் முன்னணி இரு சக்கர தயாரிப்பாளர்களில் ஹோண்டா நிறுவனமும் ஒன்று. ஹோண்டா நிறுவனத்தின் பவரான பைக்கள் விலை சற்று கூடுதலாகத்தான் உள்ளது. எனவே இந்த பைக்களின் விலை குறைய இவற்றை இந்தியாவில் உருவாக்கப்பட வேண்டும் அல்லது அசெம்பிள் செய்தால் விலை குறைவாகும்.அதிக திறன் கொண்ட இறக்குமதி செய்யப்படும் பைக்களுக்கு மத்திய பட்ஜெட்டில் வரி உயர்த்தப்பட்டது. இதனால் விற்பனை சரி வாய்ப்புள்ளது. எனவே இவற்றை இந்தியாவிலே அசெம்பிள் செய்தால் பைக் விலை குறையும் எனவே அதிக திறன் கொண்ட மோட்டர் சைக்கிள்களை இந்தியாவிலே அசெம்பிள் செய்ய திட்டமிட்டுள்ளது.இந்தியாவில் தற்பொழுது விற்பனையில் உள்ள அதிக திறன் கொண்ட ஹோண்டா பைக்கள் சிபி1000ஆர், சிபி1000ஆர்ஆர் ஃபயர்பிளேட், விஎஃப்ஆர் 1300சிஎக்ஸ் போன்ற பைக்கள் முழுமையாக கட்டமைக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படுகின்றன. இவற்றை இந்தியாவிலே அசெம்பிள் செய்தால் விலை குறையும்.ஹோண்டா சிபிஆர் 500ஆர் பைக் முதல்கட்டமாக இந்தியாவிலே அசெம்பிள் செய்யப்படுகின்றது.
இந்தியளவில் மிகவும் எதிர்பார்க்கூடிய எஸ்யூவி காரான ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் விலை என்ன என்பதுதான் பலரின் கேள்வி இந்த கேள்விக்கு விடை தரும் வகையில் உத்தேசமான விலை பட்டியல் இவ்வாறு இருக்கலாம்.ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரின் விலை எஸ்யூவி கார்களுக்கு மட்டுமல்லாமல் பிரிமியம் ஹேட்ச்பேக் கார்களுக்கும், தொடக்க நிலை செடான் கார்களுக்கும் குறிப்பாக ரெனால்ட் டஸ்ட்டர் எஸ்யூவியை விட குறைவாகவும் இருக்கும்.ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பேஸ் மாடல் விலை ரூ 5.75 முதல் ரூ 6 இலட்சமாக இருக்கலாம். உச்சகட்ட மாடல் விலை ரூ 10 இலட்சத்திற்க்குள் இருக்கலாம்.ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி கார் டஸ்ட்டர்க்கு மிக பெரும் சவாலாக விளங்கும். ஜூன் மாதம் விற்பனைக்கு வரவுள்ளது. தற்பொழுது பல முன்னணி நகரங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இன்று(31-03-13) பெங்களூரு மற்றும் சண்டிகரில் பார்வைக்கு வைக்க உள்ளனர். விரைவில் சென்னைக்கும் பார்வைக்கு வரவுள்ளது