Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

மாருதி நிறுவனத்தின் பல பயன் வாகனமான எர்டிகாவில் சிஎன்ஜி மாறுபட்டவை இன்னும் சில மாதங்களில் விற்பனைக்கு வரும். இந்தியாவிலே மிக அதிகமாக விற்பனையாகும் எம்பிவி எர்டிகா ஆகும்.தற்பொழுது எர்டிகா காருக்கு போட்டிகள் அதிகரித்துள்ளது குறிப்பாக மஹிந்திரா குவான்ட்டோ மற்றும் ரெனால்ட் டஸ்ட்டர் எஸ்யூவி ஆகியவை சாவலினை ஏற்படுத்தியுள்ளது. எனவே விற்பனையை அதிகரிக்க சிஎன்ஜியில் மாருதி எர்டிகா விற்பனைக்கு வரும்.மாருதி எர்டிகா சிஎன்ஜியில் வெளிவந்தால் இந்தியாவில் முதல் சிஎன்ஜி எம்பிவி காராக எர்டிகா விளங்கும். தற்பொழுது மாதத்திற்க்கு 5000 கார்களுக்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. மாருதி எர்டிகா சிஎன்ஜி மாதத்திற்க்கு 1000 முதல் 1500 கார்கள் விற்க திட்டமிட்டுள்ளது.

Read More

ஃபோர்டு இந்தியா ஃபிகோ காரின் மூன்றாவது ஆண்டு கொண்டாடத்திற்க்காக விளம்பரப்படுத்துவதற்க்கு பதிலாக பிரச்சனையில் சிக்கியுள்ளது. இந்த விளம்பரத்தால் இந்தியா மட்டும்ல்ல வெளிநாடுகளிலும் சர்ச்சையை கிளம்பியதால் வருத்தம் தெரிவித்து கொண்டுள்ளது.விளம்பரத்திற்க்கான நோக்கம் பின்புற இடவசதி அதிகம் உள்ளதை சித்தரிப்பதற்க்காக எடுக்கப்பட்ட காட்சிகளில் இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோணி, பாரிஸ் ஹில்டன்,கிம் கர்தஷியான் சகோதரிகள், பார்முலா-1 நட்சத்திரங்கள் மைக்கேல் சூமேக்கர், செபாஸ்டியன் வெட்டல், ஃபெர்னான்டோ அலோன்சா மற்றும் லூயிஸ் ஹாமில்டன் என சகட்டுமேனிக்கு இவர்களை வைத்து இந்த விளம்பரத்தில் விளையாடியது வினையாகி விட்டது.படம் 1இத்தாலி பிரதமர் முன் இருக்கையில் அமர்ந்து இரண்டு கைகளை காட்டுகிறார். பின்புறத்தில் மூன்று பெண்கள் கை, கால் மற்றும் வாய் கட்டப்படுள்ளது.படம் 2பாரிஸ் ஹில்டன் முன் இருக்கையில் அமர்ந்து கண் அடிப்பது போலவும், பின்புறத்தில் கிம் கர்தஷியான் சகோதரிகள் கை, கால் மற்றும் வாய் கட்டப்படுள்ளது.படம் 3பார்முலா-1 நட்சத்திரம் மைக்கேல் சூமேக்கர் அமர்ந்து இருப்பது போலவும்,பின்புறத்தில் செபாஸ்டியன் வெட்டல், ஃபெர்னான்டோ அலோன்சா மற்றும் லூயிஸ் ஹாமில்டன் போன்றோர்…

Read More

வணக்கம் நண்பர்களே….ஆட்டோமொபைல் தமிழன் தளம் இன்றுடன் ஒரு வருடத்தினை நிறைவு செய்கின்றது. தொடர்ந்து ஆதரவளித்து வரும் வாசகர்கள், திரட்டிகள், கருத்துரை வழங்கி உற்சாகப்படுத்துபவர்கள் மற்றும் சமூக தளங்களுக்கும் என் நன்றிகள்…ஆரம்ப கட்டத்தில் மாதத்திற்க்கு 5 முதல் 10 பதிவுகளே எழுதி வந்தேன். மேலும் பலரின் கேள்வி பதில்கள் போன்றவற்றின் மூலம் விளக்கங்களை தொடர்ந்தேன். பின்பு பல்வேறு விதமான ஆட்டோமொபைல் நிகழ்வுகளை கடந்த மூன்று முதல் நான்கு மாதங்களாக பகிர்ந்து வருகின்றேன். மேலும் கேள்வி பதில் பக்கத்தில் பல தரப்பட்ட கேள்விகள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றது.தொடரும் உங்கள் ஆதரவு ஆட்டோமொபைல் தமிழனை இயங்க வைக்கும்.உங்கள் வாகனத்தின் செயல்பாடு மற்றும் சிறப்புகள் பற்றி நீங்களும் விமர்சனம் எழுதலாம் என்ற அறிவிப்பினை வெளியிட்டிருந்தேன் ஆனால் இதுவரை எவரும் ஆர்வம் காட்டவில்லை… இனி வரும் காலங்களில் ஆதரவு தருவீர்கள் என நினைக்கின்றேன். இது பற்றிய பதிவினை வாசிக்கஉங்கள் வாகனம் உங்கள் விமர்சனம்ஆட்டோமொபைல் தமிழன் தளத்திற்க்கு ஆதரவளித்து…

Read More

இந்தியாவின் முன்னணி நிறுவனமான மாருதி சுஸூகி ஸ்விப்ட் டிசையர், ஆல்ட்டோ கார்களுக்கு 0 சதவீத வட்டியில் கடன் தருவதாக அறிவித்துள்ளது. இந்த கடன் திட்டத்தால் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆல்ட்டோ, டிசையர் போன்ற மாருதியின் முன்னணி மாடல்களுக்கு அறிமுகம் செய்ததில் இருந்து சலுகைகள் வழங்கியது இல்லை. மேலும் பல்வேறு விதமான சலுகைகளை வழங்குவதனை முன்பே பதிவிட்டிருந்தேன்.0 சதவீத கடன் திட்டம் மற்றும் சலுகைகள் போன்றவற்றை அறிவித்துள்ளது. எனவே இதன் மூலம் விற்பனை அதிகரிக்கும் என கருதுகின்றது.மேலும் மாருதி பைபேக் ஆஃபரினை அறிவித்துள்ளது. 3 முதல் 4 வருடம் கழித்து வாகனத்தை விற்க்கும் பொழுது மாருதியே திரும்ப வாங்கி கொள்ளும்.மாருதி மட்டுமல்ல இந்தியாவின் பல தானுந்து நிறுவனங்கள் அனைத்தும் சலுகைகள் வழங்கி வருகின்றன. கடந்த 12 ஆண்டுகளாக இல்லாத அளவில் கார் விற்பனை சரிந்துள்ளது.

Read More

7 இருக்கைகள் கொண்ட எஸ்யூவிகளில் சிறப்பான விற்பனையில் 10க்கு மேற்பட்ட கார்கள் உள்ளன. குறிப்பாக மஹிந்திரா எக்ஸ்யூவி500, போலிரோ டாடா சபாரி ஸ்டோரம், டாடா சுமோ, டாடா சபாரி, சாங்யாங் ரெக்ஸ்டான், இசுசூ எம்யூ7 மஹிந்திரா குவான்டோ மேலும் பல சொகுசு கார்களும் இந்தியாவில் உள்ளன.இவற்றில் ஆட்டோமொபைல் தமிழன் தளத்தின் சார்பாக பரிந்துரைக்கப்படும் 7 சீட்டர் எஸ்யூவி என்றால் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவி கார்தான். இந்த கேள்வினை கேட்டவர் சங்கப்பலகை அறிவன் ஆவார்.மஹிந்திரா எக்ஸ்யூவி 500மஹிந்திரா எக்ஸ்யூவி 500 கார் இந்தியாவின் மிக வேகமாக விற்க்கும் எஸ்யூவி காராகும். மேலும் இரண்டு விதமான புதிய வேரியண்ட்கள் விரைவில் வெளிவரவுள்ளன. நல்ல சிறப்பான தோற்றத்தால் பலரின் உள்ளத்தை கவர்ந்துள்ள எக்ஸ்யூவி தற்பொழுது 3 விதமான மாறுபட்டவை கிடைக்கின்றது. மஹிந்திரா எக்ஸ்யூவி 500 விலை ரூ 12.25 இலட்சம் முதல் 14.98 வரை கிடைக்கின்றது. இரண்டு விதமான மாறுபட்டவையில் 2 வீல் டிரைவ் மற்றும்…

Read More

ஃபியட் நிறுவனத்தின் உலக பிரசித்தமான 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் 50,00,000 இலட்சம் எஞ்சின்களை கடந்தது. சிறப்பான மைலேஜ் தரக்கூடிய இந்த என்ஜின் பல முன்னணி இந்திய நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் பயன்படுத்தும் நிறுவனங்கள் மாருதி சுஸூகி, ஜென்ரல் மோட்டார்ஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ். சுசுகி இந்த எஞ்சினை DDiS என்றும், ஜிஎம் ஸ்மெர்ட்டெக் மோனிக்கர் என்றும், டாடா இதனை குவாட்ராஜெட் என்றும் அழைக்கின்றன. மேலும் பல பன்னாட்டு நிறுவனங்களும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சினை பயன்படுத்துகின்றன.போலாந்து நாட்டில் உள்ள ஃபியட் பவர் டெக்னாலஜிஸ் 50 இலட்சம் எஞ்சின்களை உற்பத்தி செய்துள்ளது. 1248சிசி 4 சிலிண்டர் 16 வால்வ்கள் பொருத்தப்பட்ட எஞ்சின் ஆகும். ஃபிக்ஸ்ட் டர்போசார்ஜ் வெர்சன் 70 முதல் 75எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். ஹை பெர்பார்மன்ஸ் டர்போசார்ஜ் வெர்சன் 85 முதல் 90எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் 2003 ஆம்…

Read More