ஃபியட் நிறுவனத்தின் உலக பிரசித்தமான 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் 50,00,000 இலட்சம் எஞ்சின்களை கடந்தது. சிறப்பான மைலேஜ் தரக்கூடிய இந்த என்ஜின் பல முன்னணி இந்திய நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.

 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் பயன்படுத்தும் நிறுவனங்கள் மாருதி சுஸூகி, ஜென்ரல் மோட்டார்ஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ். சுசுகி இந்த எஞ்சினை DDiS என்றும், ஜிஎம் ஸ்மெர்ட்டெக் மோனிக்கர் என்றும், டாடா இதனை குவாட்ராஜெட் என்றும் அழைக்கின்றன. மேலும் பல பன்னாட்டு நிறுவனங்களும்  1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சினை பயன்படுத்துகின்றன.

போலாந்து நாட்டில் உள்ள ஃபியட் பவர் டெக்னாலஜிஸ் 50 இலட்சம் எஞ்சின்களை உற்பத்தி செய்துள்ளது. 1248சிசி 4 சிலிண்டர் 16 வால்வ்கள் பொருத்தப்பட்ட எஞ்சின் ஆகும். ஃபிக்ஸ்ட் டர்போசார்ஜ் வெர்சன்  70 முதல் 75எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். ஹை பெர்பார்மன்ஸ் டர்போசார்ஜ் வெர்சன்  85 முதல் 90எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.

1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் 2003 ஆம் ஆண்டு முதல் தயாரிக்கப்படுகின்றது.