Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய ஹேட்ச்பேக் காரினை உருவாக்கி வருகின்றதாம். இந்த காரானது ஹோன்டா ப்ரியோ,ஹூன்டாய் i10,மாருதி சுசுகி வேகன்ஆர் போன்ற பி-பிரிவு ஹேட்ச்பேக் காராக இருக்கலாம்.இந்த காம்பெக்ட் காருக்கு X0 மற்றும் X1 என்ற பெயரில் உருவாக்கி வருகின்றதாம். இந்த ஹேட்ச்பேக் காரானது பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் வரலாம்.எதிர்பார்க்கப்படும் பெட்ரோல் என்ஜின் 3 சிலிண்டர் 1.2 லிட்டர் ட்ர்போசார்ஜட் என்ஜினாக இருக்கலாம் மற்றும் டீசல் என்ஜின் 1.05 லிட்டர் என்ஜினாக இருக்கும்.டாடா X0 ஹேட்ச்பேக் காரானது 2014 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கலாம்.thanks to economic times

Read More

ஹோன்டா சிஆர்-வி எஸ்யூவி கார் இந்த மாதம் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நவம்பர் 2012யில் இங்கிலாந்தில் அறிமுகம் செய்தனர்.ஹோன்டா சிஆர்-வி கார் 28 இலட்சம் விலை இருக்கலாம் என கூறப்படுகிறது. பெட்ரோல் வகையில் மட்டும் வெளிவரும். மேலும் 2 வீல் மற்றும் 4 வீல் டிரைவ் என இரண்டிலும் கிடைக்கும். பல சிறப்பம்சங்களை கொண்டதாக ஹோன்டா சிஆர்-வி கார் விளங்கும். வருகிற ஃப்பரவரி 12 வெளிவரலாம்.

Read More

நிசான் சன்னி ஸ்பெஷல் எடிட்சனை காரை நிசான் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிசான் சன்னி கார் தற்பொழுது சில புதிய வசதிகளுடன் வந்துள்ளது.நிசான் சன்னி Special Edition வெளியிட்டில் உள்ள புதிய வசதிகள் ரியர் பார்க்கிங் கேமரா இவற்றுடன் சென்ஸார், 2 டின் மல்டுமீடியாவுடன் தொடுதிரை, குரோம் ப்ளேட் ட்ரங் க்ரேனிஸ்,ரியர் ஸ்பாய்லர்.மற்றப்படி வேறெந்த மாற்றங்களும் இல்லை.நிசான் சன்னி என்ஜின்பெட்ரோல் என்ஜின்1.5 லிட்டர் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் சக்தி 100PS @ 6000rpm மற்றும் டார்க் 134NM@4000rpm.டீசல் என்ஜின்1.5 லிட்டர் k9k என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் சக்தி 86PS @ 3750rpm மற்றும் டார்க் 200NM@2000rpm.விலை 5.93 இலட்சம் முதல் 8.93 இலட்சம் வரை(ex-showroom delhi)இன்னும் சில மாதங்களில் நிசான் சன்னி X-tronic CVT ஆட்டோமொட்டிக் ட்ரான்ஸ்மிஷனில் வெளிவரவுள்ளது.

Read More

அசோக் லைலேன்ட் நிறுவனம் கனரக வாகனங்கள் தயாரிப்பில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.கடந்த ஜனவரி மாதத்தில் 2.5 % விற்பனை உயர்ந்துள்ளது.கடந்த ஆண்டு ஜனவரி(2012) மாதம் 10,300 வாகனங்களை விற்றது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் 10,561 வாகனங்களை விற்றுள்ளது.ஆனால் சிறிய ரக வாகனங்களில்(DOST) 25.4 % சரிவினை கண்டுள்ளது.கடந்த ஆண்டு ஜனவரி(2012) மாதம் தோஸ்ட் விற்பனை 9200 வாகனங்களை விற்றது.இந்த ஆண்டு ஜனவரி மாதம் 6,863 வாகனங்களை மட்டுமே விற்றுள்ளது. இது மிகப்பெரிய சரிவினை விரைவில் அசோக் லேலேன்ட் சரிசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

பென்ட்லி கன்டென்டல் GT ஸ்பீடு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 4 இருக்கைகள் கொண்ட கன்டென்டல் GT ஸ்பீடு மிக சிறப்பான சொகுசு காராகும்.பென்ட்லி கன்டென்டல்(Continental) GT ஸ்பீடு கார் W12 என்ஜின் பயன்படுத்தியுள்ளனர். இதன் சக்தி 625PS மற்றும் டார்க் 800NM ஆகும். 8 ஸ்பீட் ZF ஆட்டோமொட்டிக் க்யர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.0-100km வேகத்தை 4.4 நொடிகளில் தொடும்.பென்ட்லி கன்டென்டல் GT ஸ்பீடு அதிகப்பட்ச வேகம் 325km/h இந்த காரில் மிக சிறப்பான அதி நவீன சொகுசு வசதிகளை கொண்டுள்ளது. விலை விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லைupdate 4.09pmவிலை 1.99 கோடியாகும்(exshowroom delhi)

Read More

புத் இன்டர்நேஷனல் ரேஸ் டிராக் ஓபன் டிராக் தினத்தை அறிவித்துள்ளது. இந்த ஓபன் டிராக் தினத்தில் நீங்களும் ரேஸ் டிராக்கில் வாகனம் ஓட்டலாம்.வருகிற ஃபிப்ரவரி 17 அன்று open track day ஆகும்.இந்த தினத்தில் ரேஸ் டிராக்கில் வாகனங்களை ஓட்டிப் பார்க்க 1 சேஸ்சனுக்கு காருக்கு ரூ4000 பைக்கிற்க்கு ரூ3000 ஆகும். ஒரு செஸ்சன் என்றால் 60 நிமிடங்கள்(1 மணி நேரம்) ஆகும். இதற்க்கு உங்களிடம் ஓட்டுனர் உரிமம் இருந்தால் போதுமானதாகும். மேல்ம் உங்களுடைய பைக் அல்லது காரை கொண்டு வரவேண்டும்3 சேஸ்சனுக்கு காருக்கு ரூ12000 பைக்கிற்க்கு ரூ9000 ஆகும். 3 செஸ்சன் பதிவு செய்தால் கூடுதலாக ஒரு செஸ்சன் கிடைக்கும்.பதிவு செய்ய https://www.buddhinternationalcircuit.in/BICTimeTrial/மேலும் விவரங்கள் அறிய [email protected] or call: +91 120 4428034/36

Read More