ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்(HMCL) விற்பனையில் தொடர்ந்து சாதனை நிகழ்த்தி வருகின்றது. கடந்த ஜனவரி மாதத்தின் விற்பனை விவரங்களை கானலாம்.கடந்த மாதம் 5,57,797 வாகனங்களை விற்றுள்ளது. இது ஓரு மாதத்திலே ஹீரோ நிறுவனத்தின் அதிகப்பட்ச விற்பனையாகும். கடந்த ஆண்டு 2012 மே மாதத்தில் 5,56,644 வாகனங்களை விற்றள்ளது.அதனை ஜனவரி மாதத்தில் முறியடித்துள்ளது.கடந்த ஜனவரி 2012 மாதத்தை விட இந்த வருடம் 7.21% அதிகமாகும். கடந்த 2012 ஜனவரியில் விற்பனை செய்த வாகனங்களின் எண்ணிக்கை 5,20,272 ஆகும்.`ஹீரோ ஸ்ப்ளன்டர் மற்றும் பேஷன் பைக்களே அதிகம் விற்பனை ஆகியுள்ளது. மேலும் புதிய இக்னைட்ர் நல்ல வரவேற்ப்பினை பெற்றுள்ளது.ஸ்கூட்டர்களில் ப்ளஸ்ர் மற்றும் மேஸ்டீரோ அதிகம் விற்றுள்ளன.ஹீரோ மோட்டோகார்ப் உலகத்தரமான பாகங்களை தயாரிக்க 4வது உற்பத்தி ஆலையை சுமார் 550 கோடி செலவில் ராஜஸ்தான் மாநிலத்தில் உருவாக்கி வருகின்றது.
Author: MR.Durai
ஹோன்டா CBR150R (ஸ்டீரிட்ஃபயர்) பைக் விரைவில் அறிமுகம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. யமாஹா R15 போன்ற பைக்களுக்கு சவாலாக விளங்கும். CBR150R பைக்கில் 150சிசி என்ஜின் பயனபடுத்தப்பட்டுள்ளது.இதன் சக்தி 12.55bhp@10,500rpm மற்றும் டார்க் 12.5nm@ 8500rpm.இதன் விலை 1 இலட்சத்திற்க்குள் இருக்கலாம்.இந்த மாதமே வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கவாஸ்கி Z250 பைக்கை இந்தோனோசியாவில் சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக் இந்தியா வருமா என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.கவாஸ்கி Z250 பைக் ப்ரேலல் டிவின் லிக்கிவ்ட் கூல்டு DOHC-250சிசி என்ஜின் ஆகும். 8 வால்வ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.6 ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது.கவாஸ்கி Z250 பைக் சக்தி 33.5ps மற்றும் டார்க் 22nm ஆகும்.கவாஸ்கி Z250 பைக் இந்தியாவில் வருவதற்க்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் உறுதியான தகவல்கள் இல்லை வெளிவந்தால் 2.5 முதல் 3 இலட்சத்திற்க்குள் இருக்கலாம்.
யமாஹா நிறுவனம் YZF-R250 பைக்கினை எப்பொழுது அறிமுகம் செய்யும் என பரவலாக எதிர்பார்ப்புகள் கூடி வருகின்றது.250சிசி பைக் மிக சிறப்பான ஸ்போர்ட்ஸ் பைக்காக வலம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.எப்பொழுது வெளிவரும் என்பதில் உறுதியான தகவல் இதுவரை வெளிவரவில்லை என்றாலும் வருகிற 2014 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்திய சாலைகளை ஆக்ரமிக்கும் என எதிர்பார்க்கலாம்.250சிசி மார்க்கெட்டில் யமாஹா அறிமுகம் செய்தால் நல்ல வரவேற்பினை பெறும். மேலும் கேடிஎம் 390 மற்றும் பஜாஜ் 375 போன்ற பைக்களும் இந்த வருடத்தில் வெளிவரவுள்ளது. எனவே விரைவில் யமாஹா YZF-R250 பைக் வரும். விலை 2 இலட்சத்திற்க்குள் இருக்கலாம்.
வாகனவியல் நுட்பங்களில் தொடர் 4யில் உங்களை சந்திப்பதில் பெரிதும் மகிழ்கின்றேன் நண்பர்களே….என்ஜின் இயக்கம் மற்றும் என்ஜின் அடிப்படையான அமைப்புகள் போன்றவற்றை கற்றோம்.இனி என்ஜினுக்கு துனை நிற்க்கும் முக்கிய அமைப்புகள் பற்றி கற்போம் வாருங்கள்..என்ஜின் இயங்க ஆற்றல் அவசிமானது அந்த ஆற்றலை உற்பத்தி செய்ய எரிபொருள் மிக அவசியமானது. எரிபொருள் கலனில் இருக்கும் எரிபொருள் எவ்வாறு என்ஜினுக்கு செல்கிறது என்பதை அறியலாம். எரிபொருள் மிகுந்த அழுத்தத்துடன் என்ஜின் சிலிண்டருக்கு கொண்டு செல்லப்படுகிறது. கலனில் இருந்து எவ்வாறு எரிபொருள் மிகுந்த அழுத்துடன் சிலிண்டரை எரிபொருள் அடைகிறது.மிகுந்த அழுத்தத்துடன் சிலிண்டரில் தெளிக்க ஃபயூல் இன்ஜெக்சன் மிக உதவிகரமாக உள்ளது.எரிபொருள் எடுத்து செல்லும் அமைப்புஎரிபொருள் எடுத்து செல்லும் அமைப்பில் உள்ள முக்கிய பாகங்கள்…Fuel Injection PumpFuel InjectorFuel FiltersFuel Lineபடத்தில் உள்ளது போலதான் எரிபொருள் கலன்யில் இருந்து எரிபொருள் இன்ஜெக்சன் பம்ப் வழியாக உறிஞ்சப்பட்டு ஃபில்டர்யில் சுத்தம் செய்யப்படுகிறது. சுத்தம் செய்யப்பட்ட எரிபொருள் குழாய் வழியாக இன்ஜெக்டர்க்கு கொண்டு செல்லப்பட்டு…
ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா(HMSI) நிறுவனத்தின் ஜனவரி மாத விற்பனை விவரங்களை வெளியிட்டுள்ளது. 2012-2013 ஆம் நிதி ஆண்டில் இதுவரை 2,273,720 வாகனங்ளை HMSI விற்றுள்ளது.இவற்றில் மோட்டார்சைக்கிள் விற்பனை எண்ணிகை 1,062,713 மற்றும் ஸ்கூட்டர் 1,211,007 ஆகும். மொத்த சராசரி வளர்ச்சி 35% ஆகும்.ஹோன்டா டிரிம் யுகா வரவேற்ப்பு சிறப்பாக உள்ளதால் விற்பனை அதிகரித்துள்ளது. மேலும் ஸ்கூட்டர்களின் விற்பனையும் அதிகரித்துள்ளன. கீழுள்ள அறிக்கையில் தெளிவாக கானலாம்..ஹோன்டா ஸ்கூட்டர்களை எச்இடி என்ற பெயரில் தற்பொழுது மைலேஜை அதிகரித்துள்ளது இதன் மூலம் விற்பனை அதிகரிக்கும்.