ரெனால்ட் ஸ்கேலா ஆட்டோமேட்டிக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்கேலா ஆட்டோமெட்டிக் இந்த மாதத்தின் இறுதியில் இருந்து கிடைக்கும். மென்வல் காரை விட ஆட்டோமேட்டிக் மைலேஜ் அதிகம்..ரெனால்ட் ஸ்கேலா ஆட்டோமேட்டிக் CVT பெட்ரோல் வகையின் RXL மற்றும் RXZ வகையில் மட்டும் கிடைக்கும்.மேன்வல் காரைவிட மைலேஜ் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனில் குறைவாகத்தான் இருக்கும். ஆனால் ஸ்கேலா ஆட்டோமேட்டிக் காரில் மைலேஜ் அதிகம்.ஸ்கேலா XTRONIC CVT ஆட்டோமெட்டிக் மைலேஜ் அதிகமாக இருப்பதனால் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேன்வல் மைலேஜை விட 1kmpl அதிகம் .ஸ்கேலா ஆட்டோமேட்டிக் மைலேஜ் 17.97kmplகடந்த செப்டம்பர் 2012 அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கேலா 3000 கார்கள் வரை விற்பனை ஆகியுள்ளது. ஸ்கேலா ஆட்டோமேட்டிக் விலை விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. எதிர்பார்க்கப்படும் விலை 8 முதல் 9.50 இலட்சம் இருக்கலாம்.
Author: MR.Durai
மஹிந்திரா நிறுவனத்தின் மோஜோ பைக்கள் எப்பொழுது வரும் என பரவலாக பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இறுதிக்கட்ட சோதனை ஓட்டத்தில் உள்ளதாக தெரிய வருகின்றது.வருகிற 2013-2014 நிதி ஆண்டில் வெளிவரலாம். தற்பொழுது என்ஜின் மற்றும் பாகங்கள் சோதனை ஓட்டத்தில் உள்ளது.மோஜோ பைக்மோஜா பைக் 300சிசி 4 ஸ்டோர்க் liquid க்கூலிங் என்ஜின் DOHC பொருத்தப்பட்டிருக்கும். எலெக்ட்ரானிக் ப்யூல் இன்செக்சன். 6 ஸ்பீடு க்யர் பாக்ஸ். வருகிற நிதி ஆண்டில் வெளிவரும் என மஹிந்திரா நிறுவனத்தின் அனுப் மாத்தூர் PTI செய்திளுக்கு கூறியுள்ளார்.
வர்த்தக வாகனங்கள் தயாரிப்பதில் முன்னிலையில் விளங்கும் டாடா மோட்டார்ஸ் டிரக்களுக்கு 4 வருட வாரண்டியை அறிவித்துள்ளது. இதன் மூலம் டாடா லாரிகளின் விற்பனை அதிகரிக்கும்.டாடா நிறுவனம் வர்த்தக வாகன உற்பத்தியில் 60 ஆண்டுகளை நெருங்கிவருகிறது. இந்திய முழுவதும் 15 இலட்சத்திற்க்கு மேற்பட்ட டாடா லாரிகள் பயணித்து வருகின்றது. வர்த்தக வாகனங்களின் சாலைகளில் ஏற்படும் ப்ரேக் டவுன் பொழுது உதவி செய்ய “டாடா அலர்ட்” என்ற சேவையை வழங்கி வருகிறது. வாகனங்ளின் பிரச்சனையை பொறுத்து விரைவாக சரி செய்து தரப்படுகிறது. மேலும் சற்று அதிகப்படியான பிரச்சனைகள் என்றால் சரக்கினை டாடா அலர்ட் மூலம் கொன்டு செல்லவும் வழி வகுக்கின்றது.டாடா அலர்ட் சேவைக்கான இலவச நம்பர் 1800-209-7979அனைத்து வர்த்தக வாகனங்களுக்கும்(Commercial Vehicles) 4 வருட வாரண்டினை அறிவித்துள்ளது. 4 வருட வாரண்டியானது டிரைவ்லைன்க்கு(என்ஜின், க்யர பாக்ஸ் மற்றும் ரியர் அக்ஸ்ல்(rear axle)) மட்டும். மற்றவைகளுக்கு 18 முதல் 24 மாதம் வாரண்டினை தருகிறது. இந்த சலுகை…
இந்தியாவின் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆல்டோ மாடல் கார் உலகயளவில் விற்பனையில் உயர்ந்த வருகிறது. நடுத்தர மக்களின் மிக விருப்பமான ஆல்டோ கார் கடந்த வருடம் விற்பனையில் சாதனை படைத்துள்ளது.2011 மற்றும் 2012 ஆம் ஆண்டில் ஆல்டோ கார்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. சிறிய ரக அதிக கார்களை விற்பனை செய்த மூன்று நிறுவனங்கள்…1.வோக்ஸ்வேகன் கோல்(gol)வோக்ஸ்வேகன் கோல் கார் உலகயளவில் சில வருடங்களாக தொடர்ந்து விற்பனையில் முதலிடத்தில் உள்ள காராகும். 2012யில் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை 2,93,293 ஆகும்.2. மாருதி ஆல்டோமாருதி ஆல்டோ கார் விற்பனை கடந்த 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டில் சிறப்பான உயர்வினை பெற்று வருகிறது. 2012யில் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை 2,86,833 ஆகும்.3. ஃப்யட் யுனோ(uno)ஃப்யட் யுனோ கார் 2012யில் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை 2,55,838 ஆகும்.
இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் நிறுவனமான ரேவா நிறுவனத்தை சில ஆண்டுகளுக்கு முன் மஹிந்திரா கைப்பற்றியது. மஹிந்திரா ரேவா நிறுவனம் புதிய e2o(ஈ2ஓ) காரினை விரைவில் வெளியிட உள்ளது.மஹிந்திரா நிறுவனத்தின் பெங்களூரு ஆலையில் e20 கார்கள் தயாரிக்கப்பட உள்ளது. இந்தியாவிலே இந்த தொழிற்சாலைதான் ப்ளாட்டினம் சான்றிதழ் பெற்ற முதல் ஆலையாகும். வருடத்திற்க்கு 30000 கார்களை தயாரிக்கும் திறன் கொண்டது.e2o என்றால் e—energy of the Sun2—-signifying the connected technologies in the caro— Oxygenமேலும் e2o கார்கள் 5C கான்செப்ட்டை அடிப்படையாக கொண்டது. 5C என்றால்Clean, Convenient,Connected, Clever மற்றும்Cost Effectivee2o எலெக்ட்ரிக் கார் லித்தியம் ஐயன் பேட்டாரி மூலம் இயங்கும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 100km வரை பயணிக்கலாம். இதனை சார்ஜ் ஏற்ற 15 ஆம்பியர் ப்ளக் பாயின்ட் தேவைப்படும்.e2o எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுசூழலை பாதிக்காது என்பதால் அரசின் சலுகைகளும் கிடைக்கும். இந்த மாதத்தில் வெளிவரும்.
வெஸ்பா ஸ்கூட்டர் மிக சிறப்பான வரவேற்பினை பெற்று வருவதனை முன்பே குறிப்பிட்டிருந்தோம். இத்தாலி நாட்டினை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வெஸ்பா தற்பொழுது வெஸ்பா LX 125 விலையை குறைத்துள்ளது.வெஸ்பா 125 LX ஆட்டோமெட்டிக் ஸ்கூட்டர் 59,990 ரூபாயாக குறைத்துள்ளது. கடந்த 8 மாதங்களில் 25000த்திற்க்கு அதிகமான ஸ்கூட்டர்களை விற்றுள்ளது.வெஸ்பா ஸ்கூட்டர்களுக்கு சிறப்பான வரவேற்ப்பு