பிரபலமான ஸ்போர்ட்டிவ் பைக் தயாரிப்பாளரான கேடிஎம் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் E-Duke கான்செப்ட் மாடலை ஆஸ்திரியாவின் மேட்டிகோஃபெனில் உள்ள நிறுவனத்தின் தலைமையகத்தில் அமைந்துள்ள கேடிஎம் மோட்டோஹாலில் காட்சிப்படுத்தியுள்ளது. எவ்விதமான நுட்ப விபரங்களும் கிடைக்காத நிலையில் இந்த மாடலை பொருத்தவரை பேட்டரி உட்பட பல்வேறு தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை, இருந்தாலும் பார்த்தால் உற்பத்தி நிலை மாடலுக்கு இணையாகவே இந்த கான்செப்ட் நிலை மாடல் ஆனது அமைந்திருக்கின்றது. ஆனால் ஒரு சில ஊகங்களின் அடிப்படையில் 5.5kWh பேட்டரி பேக்கினை பெற்று அதிகபட்சமாக 10Kw பவரை வெளிப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் முழுமையான 100 % சார்ஜில் 120 கிமீ வரை வெளிப்படுத்தலாம். தற்பொழுது சந்தையில் கிடைக்கின்ற ICE கேடிஎம் 390 duke அடிப்படையிலான டிசைன் வடிவமைப்பினை பகிர்ந்து கொள்கின்ற இந்த மாடலானது பெரும்பாலான உற்பத்தி நிலை பாகங்கள் அனைத்தும் 390 டியூக்கில் பெறப்பட்டதாக தெரிகின்றது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சேஸிஸ் மற்றும் சஸ்பென்ஷன்…
Author: MR.Durai
சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய எக்ஸ்பல்ஸ் 160 அல்லது இம்பல்ஸ் பைக்கினை அடுத்த சில மாதங்களில் சந்தைக்கு ரூ.1.40 லட்சத்துக்கு குறைவான விலையில் எதிர்பார்க்கலாம். எக்ஸ்பல்ஸ் 200 மாடல் OBD-2B மேம்பாடு தற்பொழுது வரை பெறாத நிலையில், புதிய வந்துள்ள எக்ஸ்பல்ஸ் 210 ஆரம்ப விலை ரூ.1.75 லட்சத்தை எட்டியுள்ள நிலையில், பட்ஜெட் விலையில் அட்வென்ச்சர் பைக் விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற மாடலை ஹீரோ தயாரித்து வருகின்றது. சோதனை ஓட்டத்தில் உள்ள மாடல் முழுமையாக முக்காடு மூலம் மறைக்கப்பட்டுள்ள நிலையில், டிசைன் அம்சங்களை பொறுத்தவரை தற்பொழுதுள்ள 200சிசி எக்ஸ்பல்ஸ் போலவே அமைந்திருக்கின்றது. எஞ்சின் பகுதியில் உள்ள கேஸ் அமைப்பு எக்ஸ்ட்ரீம் 160 4வி மாடலில் உள்ள எஞ்சினை போலவே தெரிகின்றது. மற்றபடி, பெரும்பாலான ஸ்டைலிங் அம்சங்கள் எக்ஸ்பல்ஸ் 200 போலவே அமைந்துள்ளதால், அனேகமாக எக்ஸ்பல்ஸ் 160 மாடலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே, ஹீரோவின்…
டிவிஎஸ் மோட்டாரின் அதிகம் விற்பனையாகின்ற பிரசத்தி பெற்ற ஜூபிடர் ஸ்கூட்டர் வரிசையில் உள்ள 125சிசி எஞ்சின் பெற்ற மாடலை விரைவில் பல்வேறு புதுப்பிக்கப்பட்ட வசதிகளை பெற்றதாக விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. சில மாதங்களுக்கு முன்பாக வெளியான ஜூபிடர் 110 பல்வேறு ஸ்டைலிங் மாற்றங்களுடன் அதிகப்படியான பூட்ஸ்பேஸ் கொண்ட மாடலாக ஜூபிடர் 125 போல அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து அமோக ஆதரவினை பெற்று தற்பொழுது இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படுகின்ற இரண்டாவது ஸ்கூட்டர் பிராண்ட் மாடலாக உள்ளது. தனது சமூக ஊடகபக்கங்களில் டிவிஎஸ் வெளியிட்டுள்ள டீசர் மூலம் “Style, Power, Performance” போன்ற வாசகங்களை குறிப்பிட்டுள்ளது. வரவுள்ள 2025 டிவிஎஸ் ஜூபிடர் 125 மாடலில் தொடர்ந்து சிறப்பான பூட்ஸ்பேஸ் கொண்டு OBD-2B மேம்பாட்டை பெற்ற 124.8cc ஒற்றை சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 8.1hp பவர் மற்றும் 10.5 Nm டார்க் வெளிப்படுத்தும். டிசைன் மாற்றங்களை பொறுத்தவரை சமீபத்தில் வந்த ஜூபிடர் 110…
சுசூகி நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் e-access உற்பத்தி குருகிராம் ஆலையில் துவங்கப்பட்டுள்ள நிலையில் இந்த மாடல் அனேகமாக அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக இ-அக்சஸ் மாடலின் அனைத்து முக்கிய விபரங்களையும் ஏற்கனவே சுசூகி ஆனது இந்நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ 2025 மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த மாடல் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு உள்ளுர் சந்தை மட்டுமல்லாமல் பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இந்த மாடலில் 3.072 kWH LFP பொருத்தப்பட்டு பவர் 4.1 Kw மற்றும் 15 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில் முழுமையான சிங்கிள் சார்ஜில் 91 கிமீ ரேஞ்ச் (WMTC 87KM) வழங்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதிகபட்ச வேகம் மணிக்கு 71 கிமீ ஆக வரையறுக்கப்பட்டு 0-80 % சார்ஜிங் ஏறுவதற்கு 4.30 மணி நேரமும், 0-100 % எட்டுவதற்கு 6.7 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மணிக்கு 230 கிமீ வேகத்தை எட்டுகின்ற ஹோண்டா CB1000 Hornet SP மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் ரூபாய் 12.36 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலுக்கான முன்பதிவு பிங்விங் டீலர்கள் மூலம் துவங்கப்பட உள்ளது. CB1000 ஹார்னெட் SP பைக்கில் 999cc, இன்லைன் முறையில் 4 சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 11,000rpm-ல் 155bhp பவர் 9,000rpm-ல் 107Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இந்த எஞ்சின் ஆறு வேக கியர்பாக்ஸுடன் பை டைரக்ஷனல் க்விக் ஷிஃப்டர் இணைக்கப்பட்டுள்ளது. CB1000 ஹார்னெட் பைக்கில் ஸ்போர்ட், ஸ்டாண்டர்ட் மற்றும் ரெயின் மற்றும் இரண்டு கஸ்டமைஸ் மோட் என 5 விதமான ரைடிங் மோடுகளுடன் வருகிறது. ஹோண்டா செலக்டபிள் டார்க் கட்டுப்பாடு உடன் புளூடூத் இணைப்புடன் 5-இன்ச் TFT டேஷ்போர்டு ஆகியவை சலுகையில் உள்ள பிற அம்சங்களுடன் மேட் பாலிஸ்டிக் பிளாக் மெட்டாலிக் நிறத்தை பெற்றுள்ளது. அட்ஜெஸ்டபிள் 41 மிமீ ஷோவா USD ஃபோர்க்குகள்…
இந்தியாவில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் பிரீமியம் சந்தையில் CB750 ஹார்னெட் மாடலை ரூ.8.59 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் 755cc பேரலல் ட்வீன் சிலிண்டர் எஞ்சின் பெற்றுள்ளது. மிக சிறப்பான பவரை வெளிப்படுத்துகின்ற 755cc, பேரலல்-ட்வின், லிக்விட்-கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 9,500rpm-ல் 90.52 bhp மற்றும் 7,250rpm-ல் 75Nm டார்க் வழங்குவதுடன் ஆறு வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டு அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் பெற்றிருக்கின்றது. ஹார்னெட்டில் ஷோவா SFF-BP முன்புற அப்சைட் டவுன் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் இ மோனோஷாக் சஸ்பென்ஷனை பெற்று மேட் பேர்ல் கிளேர் ஒயிட் மற்றும் மேட் பாலிஸ்டிக் பிளாக் மெட்டாலிக் என இருநிறங்களுடன் 5 அங்குல டிஎஃப்டி கிளஸ்ட்டரை பெற்றுள்ளது. பிரேக்கிங் அமைப்பில் 296மிமீ இரட்டை டிஸ்க்குகள் மற்றும் 240மிமீ டிஸ்க் பெற்று டூயல் சேனல் ABS பெற்றுள்ளது. 5 அங்குல கிளஸ்ட்டரில் ஹோண்டா ரோட்சின்க் ஆப் இணைப்புடன் புளூடூத் வாயிலாக இணைத்தால் நேவிகேஷன், அழைப்பு எச்சரிக்கைகள்…