வரும் ஜூலை 2025-ல் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா பிராண்டின் கீழ் ஜீ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதை சமீபத்தில் நடைபெற்ற Q4 FY ’25 வருவாய் தொடர்பான கூட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முதன்முறையாக EICMA 2024ல் காட்சிப்படுத்தபட்ட ஜீ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2.2kwh முதல் 4.4kwh வரையிலான திறன் பெற்ற மாறுபட்ட பேட்டரி ஆப்ஷனை பெற்றதாக கிடைக்க உள்ளது. Z இந்தியாவில் மட்டுமல்லாமல் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் விற்பனை செய்யும் முதல் ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டராக விளங்க உள்ளது. ஜீ மட்டுமல்லாமல் மற்றொரு குறைந்த விலை ஸ்கூட்டரை அடுத்த மூன்று முதல் 6 மாதங்களுக்கு ஹீரோ வெளியிட உள்ள நிலையில் கூடுதலாக டீலர் எண்ணிக்கையை உயர்த்தவும் திட்டமிட்டு வருகின்றது. தற்பொழுது வரை விடா ஸ்கூட்டர்கள் குறிப்பிட்ட சில டீலர்கள் மற்றும் பிரீமியா என மொத்தமாக 400க்கு குறைவான எண்ணிக்கையிலான டீலர்களில் மட்டும் கிடைத்து மாதம் 6000-7000 வரையிலான விநியோகம்…
Author: MR.Durai
பிரசத்தி பெற்ற ஹோண்டா ரீபெல் 500 க்ரூஸர் ரக மோட்டர்சைக்கிளை இந்திய சந்தையில் ரூ.5.12 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனைக்கு முதற்கட்டமாக குருகிராம், மும்பை மற்றும் பெங்களூரு நகரங்களில் மட்டுமே விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளது. Honda Rebel 500 மிகவும் சிறப்பான ரெட்ரோ தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் அதே நேரத்தில் பெர்ஃபாமென்ஸ் கொண்ட ரீபெல் 500 மோட்டார்சைக்கிளில் 471cc லிக்யூடு கூல்டு, பேரலல்-ட்வீன் சிலிண்டர் எஞ்சின், பொருத்தப்பட்டு 8,500 RPM-ல் 46hp (34 kW) மற்றும் 6,000 RPM-ல் 43.3 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில், 6-வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலின் சஸ்பென்ஷன் அமைப்பில் முன்புறத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் ஷோவா ட்வீன் ஷாக் அப்சார்பர், பிரேக்கிங் அமைப்பினை பொறுத்தவரை முன்புறத்தில் 296 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240 மிமீ டிஸ்க் பெற்று இரட்டை சேனல் ABS சேர்க்கப்பட்டுள்ளது. டீயூப்லெர் ஸ்டீல் சேஸிஸ் கொண்ட…
சமீபத்தில் வெளியான 2025 ஆம் ஆண்டிற்கான சுசூகி நிறுவன ஆக்சஸ் 125 ஸ்கூட்டரில் கூடுதல் மேம்பாடாக 4.2 அங்கல டி.எஃப்.டி கிளஸ்டர் கொண்ட ரைட் கனெக்ட் ஸ்பெஷல் எடிசன் மாடல் ஆனது விற்பனைக்கு ரூ.1,01,600 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வழக்கமான மாடலை ஓல அமைந்திருந்தாலும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பேர்ல் மேட் அக்வா சில்வர் நிறத்துடன் மெட்டாலிக் மேட் பிளாக் எண். 2, மெட்டாலிக் மேட் ஸ்டெல்லர் ப்ளூ, பேர்ல் கிரேஸ் ஒயிட் மற்றும் சாலிட் ஐஸ் கிரீன் ஆகிய ஐந்து வண்ணங்களிலும் கிடைக்கும். முந்தைய எல்சிடி கிளஸ்ட்டரை விட மிக தெளிவான பார்வைக்கு கிடைக்கும் வகையில் ரெட் கனெக்ட் எனப்படுகின்ற ப்ளூடுத் வாயிலாக ஸ்மார்ட்போனை இணைத்து பல்வேறு அறிவிப்புகள், வாட்ஸ்ஆப் அலர்ட், வானிலை அறிக்கை என பல தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.
வழக்கமான ஸ்கிராம்பளர் 400 X மாடலை விட ரூபாய் 27 ஆயிரம் விலை உயர்த்தப்பட்டு புதிய டிரையம்ப் ஸ்கிராம்பளர் 400 XC மாடல் ஆனது ரூ.2,94,147 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த புதிய மாடலில் என்னென்ன வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்பதுதான் இப்பொழுது நாம் பார்க்க போகின்றோம். குறிப்பாக இந்த மாடல் ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற வகையில் முந்தைய ஸ்கிராம்பளர் 400 X மாடலை விட கூடுதலான சில அம்சங்கள் பெற்றிருப்பதுடன் கவர்ச்சிகரமான நிறங்கள் முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது. டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 400 XC சிறப்புகள் TR சீரிஸ் என்ஜின் 398.15cc DOHC சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 8,000 rpm-ல் 40 hp பவரையும், 6,500 rpm-ல் 37.5 Nm டார்க்கையும் வழங்குகிறது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. சஸ்பென்ஷன், சேஸிஸ் மெக்கானிக்கல் சார்ந்த பல்வேறு அம்சங்கள் மற்றும் பிரேக்கிங் உட்பட எந்த இடங்களிலும்…
பிரிமீயம் ஹேட்ச்பேக் சந்தையில் கிடைக்கின்ற டாடாவின் 2025 அல்ட்ரோஸ் புதிதாக பல்வேறு மாற்றங்கள் மற்றும் சிறப்புகள் கொடுக்கப்பட்டு பலேனோ, கிளான்ஸா மற்றும் ஐ20 கார்களை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து சி.என்.ஜி, பெட்ரோல் மற்றும் டீசல் என மூன்று விதமான ஆப்ஷனிலும் கிடைக்கின்றது. இந்தியாவில் கிடைக்கின்ற ஒரே டீசல் குறைந்த விலை ஹேட்ச்பேக் மாடலாகும். 2025 அல்ட்ரோஸ் ரேசர் டர்போ பற்றி எந்த உறுதியான தகவலும் தற்பொழுது வெளியிடப்படவில்லை. Tata Altroz இன்டீரியர் மாற்றங்களை பொருத்தவரை தற்பொழுது உள்ள காரை விட கூடுதலாகவும் பிரிமியம் வசதிகளை பெற்றதாக அமைந்துள்ள அலட்ராஸ் ஆனது பெரும்பாலான வசதிகளை டாடாவின் நெக்ஸான் மற்றும் கர்வ் போன்ற மாடல்களில் இருந்து பெற்றுள்ளது. குறிப்பாக ஃபுளோட்டிங் முறையிலான 10.25 இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் கிளஸ்டர் போன்றவை எல்லாம் கொடுக்கப்பட்டு டிஜிட்டல் கிளஸ்டரில் இன்பில்ட் நேவிகேஷன் ஆக மேப்பும் வழங்கப்பட்டுள்ளது முக்கிய…
டிரையம்ப் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனத்தின் 400சிசி எஞ்சின் பிரிவில் அடுத்த மாடலாக ஸ்கிராம்பளர் 400XC வருவதனை உறுதி செய்து முதல் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. பஜாஜ் ஆட்டோ மற்றும் டிரையம்ப் கூட்டணியில் ஸ்பீடு டி4, ஸ்பீடு 400, ஸ்கிராம்பளர் 400X என மூன்று மாடல்கள் சந்தையில் உள்ள நிலையில் கூடுதலாக வரவுள்ள 400எக்ஸ்சி ஸ்கிராம்பளர் பைக்கில் ஆஃப் ரோடு சாகசம் சார்ந்த பயன்பாடுகளுக்கான கூடுதல் வசதிகள் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. Triumph Scrambler 400XC வெளியிடப்பட்டுள்ள டீசரில் மஞ்சள் நிறத்தை பெற்று மிக கவர்ச்சிகரமாக விளங்கும் வகையில் அமைந்துள்ள ஸ்கிராம்பளர் 400எக்ஸ்சி பைக்கில் தொடர்ந்து TR சீரிஸ் என்ஜின் 398.15cc DOHC சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 8,000 rpm-ல் 40 hp பவரையும், 6,500 rpm-ல் 37.5 Nm டார்க்கையும் வழங்குகிறது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பாடி நிறத்திலான ஃபென்டர், கிராஸ் ஸ்போக்…