ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்டின் Z கான்செப்ட் அடிப்படையிலான விடா VX2 வரிசை ஸ்கூட்டரின் ரேஞ்சு 95 கிமீ முதல் 200 கிமீ வரையில் வெளிப்படுத்தும் வகையில் 2.2kwh முதல் 4.4kwh வரை பேட்டரி ஆப்ஷனை பெற்றிருக்கலாம். தற்பொழுது சந்தையில் உள்ள விடா வி2 ஸ்கூட்டரில் 2.2kwh, 3.44kwh, மற்றும் 3.97 kwh என மூன்று பேட்டரி ஆப்ஷன் உள்ள நிலையில் வரவுள்ள விஎக்ஸ்2 ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட் 4.4kwh பேட்டரி பெறக்கூடும். இந்த மாடல் இந்தியா மட்டுமல்லாமல் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. நமக்கு கிடைத்துள்ள படத்தில் ஏற்கனவே சந்தையில் உள்ள வி2 மாடலின் சில முக்கிய அம்சங்களை பகிர்ந்து கொண்டாலும் குடும்பங்களுக்கு ஏற்ற வகையிலான டிசைனை வெளிப்படுத்துகின்ற விஎக்ஸ்2 பிளஸ், விஎக்ஸ்2 புரோ மற்றும் விஎக்ஸ்2 கோ ஆகியவற்றில் பொதவாக முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் சிங்கிள் ஷாக்…
Author: MR.Durai
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா (Vida) எலக்ட்ரிக் பிராண்டின் கீழ் புதிய விடா VX2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வரிசையில் VX2 Pro VX2, Plus, VX2 Go என மொத்தமாக 3 மாடல்களை ஜூலை 1 , 2025ல் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள நிலையில், இந்த மாடல் ஏற்கனவே காட்சிப்படுத்திய விடா ஜீ அல்லது புதிய குறைந்த விலை ஸ்கூட்டர் மாடலாக இருக்குமா என்பது வரும் நாட்களில் தெரியவரும். அனேகமாக வரவுள்ள VX2 வரிசை ஸ்கூட்டரின் பேட்டரி ஆப்ஷனை பொறுத்தவரை 2.2kwh முதல் 4.4kwh வரையிலான திறன் பெற்ற மாறுபட்ட பேட்டரி ஆப்ஷனை பெற்றதாக கிடைக்க உள்ளது. இந்த ஸ்கூட்டர் மாடலில் 7 அங்குல டிஎஃப்டி கன்சோல், வாகனத்தின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கும் திறன், திருட்டு எச்சரிக்கைகள், ஜியோஃபென்சிங் மற்றும் வாகன அசையாமை போன்ற அம்சங்கள் இருக்கும். ஸ்கூட்டருக்கு OTA (ஒவர்-தி-ஏர்) மூலம் புதுப்பிப்புகளும் கிடைக்கும், இது உரிமையாளர்கள் ஷோரூமிற்குச் செல்லாமல் தங்கள்…
125சிசி சந்தையில் பிரசத்தி பெற்று விளங்குகின்ற சுசூகி நிறுவனத்தின் அக்சஸ் ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் சிட்டி மற்றும் நெடுஞ்சாலை பயணங்களில் சராசரியாக 51 கிமீ வரை கிடைக்கின்றது. மிகவும் தரமான எஞ்சின் அதிகப்படியான சத்தமில்லாமல் சிறப்பான முறையில் ரிஃபைன்மன்ட் செய்துள்ள சுசூகி அக்சஸ் உண்மையில் ஓட்டும் பொழுது சீரான வேகம் மற்றும் அதிகப்படியான பிரேக்கிங் இல்லாத நெடுஞ்சாலை பயணத்தின் பொழுது லிட்டருக்கு 54 கிமீ வரை கிடைக்கின்றது. மிகுந்த போக்குவரத்து நெரிசல், சிட்டி பயன்பாட்டில் அதிகப்படியான பிரேக் உள்ளிட்ட காரணத்தால் லிட்டருக்கு 47 முதல் 48 கிமீ வரை கிடைக்கின்றது. மைலேஜ் சோதனை அதிகப்படியான வேகம் இல்லாமல் சீரான வேகம், முறையான டயர் பிரெஷர், ஓட்டுநரின் அனுபவம் உள்ளிட்டவை கொண்டே கிடைக்கின்றது. சிறப்பான மைலேஜ் பெற முக்கியமாக கவனிக்க வேண்டியவை..! டயர் பிரெஷர் சரியாக OEM பரிந்துரைத்தபடி உள்ளதா என வாரம் இருமுறை சோதனை செய்து கொள்ள வேண்டும். அதிகப்படியான வேகத்தை…
கியா இந்தியாவின் பல்வேறு பிரீமியம் வசதிகளை பெற்ற புதிய காரன்ஸ் கிளாவிஸ் காரின் ஆரம்ப விலை ரூ.11.49 லட்சம் முதல் துவங்கி டாப் வேரியண்ட் ரூ.21.49லட்சம் வரை அமைந்துள்ளது. கிளாவிஸ் காரில் தொடர்ந்து 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் 160 bhp மற்றும் 253 Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த மாடலில் 6 வேக மேனுவல், 6 ஸ்பீடு ஐஎம்டி மற்றும் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், அதிகபட்சமாக 113 பிஹெச்பி மற்றும் 144 என்எம் டார்க்கை உருவாக்குகிறது. இந்த என்ஜின் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் பெற்றுள்ளது. இறுதியாக, காரன்ஸ் டீசல் காரில் 1.5-லிட்டர் VGT டீசல் என்ஜினைப் பொறுத்தவரை, 113 பிஹெச்பி மற்றும் 250 என்எம் டார்க்கை உருவாக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6-ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்…
1949 ஆம் ஆண்டு உற்பத்தியை துவங்கிய ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் கடந்த 76 ஆண்டுகளில் ஒட்டுமொத்த உற்பத்தி 50 கோடி அல்லது 500 மில்லியன் இரு சக்கர வாகனங்களை தயாரித்து சாதனை படைத்துள்ளது. 50 கோடி மாடலாக ஹோண்டா ஆக்டிவா இந்தியாவில் உள்ள விட்டலாபூர், அகமதாபாத் ஆலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. 1948 ஆம் ஆண்டு ஹோண்டா மோட்டார் நிறுவனம் என துவங்கப்பட்டு, 1949 ஆம் ஆண்டு முதன்முறையாக Dream D-Type என்ற பைக் மூலம் உற்பத்தி துவங்கிய கடந்த 76 ஆண்டுகளில் பல்வேறு கட்ட வளர்ச்சி அடைந்துள்ளது. 1963 ஆம் ஆண்டு பெல்ஜியத்தில் உள்ள முதல் வெளிநாட்டு உற்பத்தி நிலையத்தில் ஹோண்டா மோட்டார் சைக்கிள்களின் பெருமளவிலான உற்பத்தியைத் தொடங்கியது, அதன் பின்னர், “தேவை உள்ள இடங்களில் உள்ளூரில் உற்பத்தி செய்தல்” என்ற அதன் அடிப்படைக் கொள்கையின்படி உலகளவில் அதன் உற்பத்தியை விரிவுபடுத்தியுள்ளது. இதன் விளைவாக, ஹோண்டா 1997ல் 10 கோடி யூனிட் மைல்கல்லையும்,…
இந்தியாவில் ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் பிரீமியம் ரக X-ADV 750 ஸ்கூட்டரை ரூபாய் 11.90 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடலுக்கான முன்பதிவு அனைத்து ஹோண்டா பிக்விங் டீலர்கள் வாயிலாக நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு ஜூன் 2025 முதல் டெலிவரியும் வழங்கப்பட உள்ளது. சமீபத்தில் ரீபெல் 500 என்ற பிரீமியம் க்ரூஸர் ரக மாடலை அறிமுகம் செய்திருந்த நிலையில் தற்போது அடுத்த பிரிமியம் மாடலை கொண்டு வந்துள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு பல்வேறு பிரிமியம் மாடல்களை இந்திய சந்தைக்கு கொண்டுவரும் என்று எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது. Honda X-ADV 6 DCT எனப்படுகின்ற டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனை பெற்றுள்ள ஹோண்டாவின் X-ADV ஸ்கூட்டரில் 57.8bhp பவர் 6,750rpm-ல் மற்றும் 69Nm டார்க் ஆனது 4,750rpm-ல் வெளிப்படுத்தும் 745cc லிக்யூடு கூல்டு பேரலல் ட்வீன் சிலிண்டர் எஞ்சின் ஆனது பொருத்தப்பட்டுள்ளது. பேர்ல் கிளேர் ஒயிட் மற்றும் கிராஃபைட்…