Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

முன்பாக பஜாஜ் ஆட்டோவின் சேட்டக் எலகட்ரிக் ஸ்கூட்டர் பிரிவில் 35 சீரிஸ் வரிசையில் வெளியிடப்பட்ட 3503 மாடலின் விலை ரூ.1,10,210 ஆக எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த 3503 மாடல் மூலமாக புதிய 3.5Kwh பேட்டரி பெற்ற சேத்தக் 35 சீரிஸ் வரிசையின் குறைந்த விலை மாடலாக அமைந்துள்ளது. குறிப்பாக 3501, 3502 போன்ற மாடல்களை விட வேகம் 10 கிமீ வரை குறைவாக அமைந்துள்ளதால், மணிக்கு 63 கிமீ வேகத்தை எட்டுவதுடன் முழுமையான சிங்கிள் சார்ஜில் 155 கிமீ வழங்கும் என இந்நிறுவனத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற இரு வேரியண்டுகளை விட பல்வேறு வசதிகள் நீக்கப்பட்ட இந்த வேரியண்டில் எளிமையான எல்சிடி கலர் கிளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது. கருப்பு, வெள்ளை, நீலம் மற்றும் கிரே என நான்கு நிறங்களை மட்டும் பெற்றுள்ள சேட்டக் 3503 மாடலில் 0-80 % சார்ஜிங் பெற 3 மணி நேரம் 25 நிமிடங்கள் தேவைப்படும்…

Read More

2025 ஆம் ஆண்டிற்கான புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஆரம்ப விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ரூபாய் 1.50 லட்சம் முதல் ரூபாய் 1.81 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2025 RE Hunter 350 ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350-ல் முந்தைய பின்புற சஸ்பென்ஷன் முறையானது மாற்றப்பட்டு தற்பொழுது பிராகிரஸ்யூ சஸ்பென்ஷன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. அடுத்தபடியாக, கிரவுண்ட் கிளியரன்ஸ் 10 மில்லி மீட்டர் வரை உயர்த்தப்பட்டுள்ளது கூடுதலாக இருக்கையில் வழங்கப்பட்டுள்ள ஃபோம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் இருக்கையின் சொகுசு தன்மை சிறப்பாக இருக்கும். மேலும் டாப் மற்றும் மிட் வேரியண்டில் தற்பொழுது எல்இடி ஹெட்லைட் மற்றும் யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி இந்த மாடலில் கூடுதலாக நான்கு புதிய நிறங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அசிஸ்ட் சிலிப்பர் கிளட்ச் உள்ளது. ஹண்டர் 350 பைக் மாடல்  J-Series எஞ்சின் பெற்று அதிகபட்சமாக 6,100 rpmல்…

Read More

ஹீரோ நிறுவனம் ஸ்கூட்டர் சந்தையில் டெஸ்டினி 125 மற்றும் ஜூம் 125 என இரண்டு புதிய 125சிசி மாடல்களை சமீபத்தில் கொண்டு வந்துள்ள நிலையில், முதலில் டெஸ்டினி 125 மாடல் லிட்டருக்கு 59 கிமீ மைலேஜ் தரும் என இந்நிறுவனம் சான்றிதழ் பெற்றுள்ள நிலையில் உண்மையாக எவ்வளவு மைலேஜ் கிடைக்கின்றது என்பதனை அறிந்து கொள்ளலாம். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 59 கிமீ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள டெஸ்டினி 125 உண்மையில் ஓட்டும் பொழுது சீரான வேகம் மற்றும் அதிகப்படியான பிரேக்கிங் இல்லாத நெடுஞ்சாலை பயணத்தின் பொழுது லிட்டருக்கு 52 கிமீ வரை கிடைக்கின்றது. மிகவும் போக்குவரத்து நெரிசல், சிட்டி பயன்பாட்டில் அதிகப்படியான பிரேக் உள்ளிட்ட காரணத்தால் லிட்டருக்கு 46 கிமீ வரை கிடைக்கின்றது. மைலேஜ் சோதனை அதிகப்படியான வேகம் இல்லாமல் சீரான வேகம், முறையான டயர் பிரெஷர், ஓட்டுநரின் அனுபவம் உள்ளிட்டவை கொண்டே கிடைக்கின்றது. சிறப்பான மைலேஜ் பெற முக்கியமாக கவனிக்க வேண்டியவை..!…

Read More

இந்தியாவின் குறைந்த விலை 125சிசி ஸ்கூட்டர் மாடலாக விளங்குகின்ற டெஸ்டினி பிரைம் மாடலில் புதிய மாசு விதிகளுக்கு உட்பட்ட OBD-2B மேம்பாட்டினை பெற்று ரூ.2,700 வரை விலை உயர்த்தப்பட்டு ரூ.81,448 எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியாகியுள்ளது. புதிய டெஸ்டினி பிரைமில் தொடர்ந்து OBD-2B ஆதரவுடன்  9 hp பவரினை 7000 rpm-ல் மற்றும் 10.4 Nm டார்க்கினை 5500 rpm-ல் வழங்குகின்றது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. தொடர்ந்து இருபக்க டயரிலும் டிரம் பிரேக் இடம்பெற்று 90/90-10 ட்யூப்லெஸ் டயர் இரு பக்கத்திலும் வழங்கப்பட்டு டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ஒற்றை ஸ்பிரிங் காயில் சஸ்பென்ஷனுடன் விளங்குகின்றது. மற்றபடி, நிறங்களில் எந்த மாற்றமும் இல்லாமல் வெள்ளை, சிவப்பு, நீலம், மற்றும் கருப்பு என 4 நிறங்களுடன் அனலாக் கிளஸ்ட்டரை பெற்றதாக விளங்குகின்றது. DESTINI PRIME ₹ 78,448 DESTINI PRIME OBD2B ₹ 81,148 (எக்ஸ்-ஷோரூம்)

Read More

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் 160cc சந்தையில் கிடைக்கின்ற எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி மற்றும் எக்ஸ்ட்ரீம் 160ஆர் என இரண்டு பைக்கிலும் OBD-2B மேம்பாட்டை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மற்றபடி, எவ்விதமான வசதிகள், நிறங்களல் எந்த மாற்றமும் இல்லை. 4 வால்வுகளை பெற்ற பெர்ஃபாமென்ஸ் ரக எக்ஸ்ட்ரீம் 160R 4V பைக்கில் 163.2cc ஏர்-ஆயில் கூல்டூ என்ஜின் அதிகபட்சமாக 8500rpm-ல் 16.9 hp பவர் மற்றும் 6500rpm-ல் 14.5 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. இரண்டு வால்வுகளை பெற்ற எக்ஸ்ட்ரீம் 160R 2V மாடலில்  163.2cc ஏர்-ஆயில் கூல்டூ என்ஜின் அதிகபட்சமாக 8500rpm-ல் 15hp பவர் மற்றும் 6500rpm-ல் 14 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. இரு மாடல்களிலும் பொதுவாக பல்வேறு டிசைன் அம்சங்களை பகிர்ந்து கொண்டாலும் எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி மாடல் ஸ்பிளிட் சீட், சிங்கிள் சீட் ஆப்ஷனுடன் பல்வேறு நிறங்களை…

Read More

ஐஷரின் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் அடுத்த 650சிசி மாடலாக புல்லட் 650 ட்வீன் விற்பனைக்கு எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக ஏற்கனவே கிளாசிக் 650 ட்வீன் உட்பட 6 வகைகளில் 650சிசி மாடல்கள் கிடைக்கின்றன. உலகில் மிக நீண்ட நாட்களாக உற்பத்தி செய்யப்படுகின்ற மோட்டார்சைக்கிள் என்ற பெருமையை பெற்றுள்ள புல்லட் மாடலில், கூடுதலாக வரவுள்ள புதிய 650சிசி பேரலல் ட்வீன் சிலிண்டர் எஞ்சின் பெற்ற சக்திவாய்ந்த மாடலாக உருவெடுக்க உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே சோதனை ஓட்டத்தில் ஈடுபட்ட படங்கள் வெளியாகிருந்தது. விற்பனையில் உள்ள புல்லட் 350 பைக்கிலிருந்து பெறப்பட்ட டியர்டிராப் பெட்ரோல் டேங்க் உட்பட வட்ட வடிவ ஹெட்லைட் வழக்கமான ரெட்ரோ ஹாலஜென் பல்ப் பெறக்கூடுமா அல்லது எல்இடி ஹெட்லைட் பெறுமா என உறுதியாக தெரியவில்லை. செமி டிஜிட்டல் அனலாக் கிளஸ்ட்டருடன் டிரிப்பர் நேவிகேஷன் வசதி, புல்லட் பைக்குகளுக்கு உரித்தான ஸ்டைலிங் நிறங்களுடன் 648cc பேரல் ட்வின் எஞ்சின்…

Read More