Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற பேஷன் பிளஸ் 100சிசி மாடலில் OBD-2B பெற்றதாகவும், கூடுதலாக ஸ்டைலிங் நிறங்களில் சிறிய மாற்றத்துடன் பாடி கிராபிக்ஸ் புதுப்பிக்கப்பட்டு ரூ.1,750 வரை விலை அதிகரிக்கப்பட்டு ரூ.81,041 எக்ஸ்ஷோரூம் ஆக நிர்ணயம் செய்துள்ளது. பேஷன் பிளஸ் 100cc பைக்கில் தொடர்ந்து OBD-2B ஆதரவுடன் கூடிய 97.2cc ஏர் கூல்டு, 4 ஸ்ட்ரோக் பெற்று அதிகபட்சமாக 8.02 bhp பவர், 6000 rpm-ல் 8.05 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற மாடலில் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. புதிய 2025 மாடலில் புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் பெற்றதை தவிர மற்றபடி எந்த வசதிகளிலும் மாற்றமும் இல்லை, I3S, சைடு ஸ்டாண்ட் இண்டிகேட்டர், டிஜி அனலாக் கிளஸ்ட்டருடன் வீலில் சில்வர் நிற ஸ்டிரிப் பெற்றதாகவும், கருப்பு நிறத்துடன் பிரவுன் ஸ்டிரிப்ஸ், கருப்புடன் நீளம், கருப்பு நிறத்துடன் கிரே மற்றும் ஸ்போர்ட்ஸ் ரெட் பிளாக் என ஒட்டுமொத்தமாக 4 நிறங்களை கொண்டுள்ளது.…

Read More

டிவிஎஸ் மோட்டார் நவீன நுட்பங்களை அப்பாச்சி பைக்குகளில் அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக உள்ள நிலையில் ஃபேரிங் ஸ்டைல் அப்பாச்சி RR310 2025 மாடலில் லான்ச் கண்ட்ரோல், கார்னரிங் டிராக் கண்ட்ரோல் போன்றவற்றுடன் ரூ.2,77,999 முதல் ரூ.2,99,999 வரை விலை நிர்ணயம் செய்துள்ளது. கூடுதலாக BTO எனப்படுகின்ற முறையிலான ஆப்ஷன் கட்டணம் ரூ.10,000 முதல் ரூ.18,000 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. TVS Apache RR310 சமீபத்தில் நடைபெற்ற ஆசிய சாலை பந்தய சாம்பியன்ஷிப் (ARRC) போட்டியில் சிறந்த லேப் நேரம் 1:49.742 வினாடிகள் மற்றும் அதிகபட்ச வேகம் மணிக்கு 215.9 கிமீ ஆக பதிவு செய்துள்ள ஆர்ஆர் 310 பைக்கில் தொடர்ந்து புதிய OBD-2B விதிமுறைகளுக்கு உட்பட்டு ரிவர்ஸ் இன்கிளைன்டு DOHC 313சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் 9,800 rpm-ல் 38 PS பவர் மற்றும் 7,900 rpm-ல் 29 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் ஸ்லிப்பர் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது.…

Read More

ஹோண்டா நிறுவனத்தின் பிரபலமான 2025 டியோ 125 ஸ்கூட்டரில் தற்போது ஓபிடி-2பி மேம்பாடு ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது கூடுதலாக 4.2 அங்குல TFT கிளஸ்ட்டருடன் அதே நேரத்தில் புதிய மாறுபட்ட கிராபிக்ஸ் ஆனது சேர்க்கப்பட்டுள்ளது. DLX, H-Smart என இரு விதமான வேரியண்டினை பெற்றுள்ள டியோவில் மேட் மார்வெல் ப்ளூ மெட்டாலிக், பேர்ல் டீப் கிரவுண்ட் கிரே, பேர்ல் ஸ்போர்ட்ஸ் மஞ்சள், பேர்ல் இக்னியஸ் பிளாக் மற்றும் இம்பீரியல் ரெட் என 5 விதமான நிறங்களை கொண்டுள்ளது. ஆக்டிவா 125 மற்றும் டியோ 125 என இரு மாடல்களும் ஒரே எஞ்சினை பகிர்ந்து கொள்வதுடன் 4.2 அங்குல TFT கிளஸ்ட்டரை பெற்று பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை ஹோண்டா ரோடுசிங் ஆப் மூலம் பெற முடிகின்றது. கூடுதலாக, இந்த ஸ்கூட்டரில் மற்ற வசதிகளான டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன் பின்புறத்தில் ஒற்றை சாக் அப்சார்பருடன் இருபக்கத்திலும் 12 அங்குல அலாய் வீல் பெற்றுள்ளது. 124சிசி…

Read More

ஹீரோவின் பிளெஷர் பிளஸ் 110 ஸ்கூட்டரில் தற்பொழுது OBD-2B மேம்பாட்டை பெற்றதாக விற்பனைக்கு ரூ.71,168 முதல் துவங்குகின்றது. இம்முறை கனெக்டேட், ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட ஒரு சில வேரியண்டுகள் நீக்கப்பட்டுள்ளது. மற்றபடி, தொடர்ந்து பிளெஷர்+ 110cc ஸ்கூட்டரில் உள்ள எஞ்சின் obd-2b ஆதரவுடன் 8hp பவர் மற்றும் 8.7Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில் சிவிடி கியர்பாக்ஸ் உள்ளது. தொடர்ந்து இந்த ஸ்கூட்டரில் டிஜி அனலாக் முறையிலான கிளஸ்ட்டர் கொண்டுள்ளது. யூஎஸ்பி சார்ஜர் மற்றும் க்ளோவ்பாக்ஸ் போன்றவற்றை பிளஷர் ப்ளஸ் பெற்றதாகவும், இரு பக்க டயர்களிலும் 130 மிமீ டிரம் பிரேக் பெற்றுள்ளது. இந்த மாடலின் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் பெற்று பின்புறத்தில் சிங்கி்ள் சைட் ஷாக் அப்சார்பர் பெற்றுள்ளது. PLEASURE+ VX OBD2B ₹ 71,168 PLEASURE+ XTEC ZX OBD2B ₹ 79,048 PLEASURE+ XTEC ZX+ OBD2B ₹ 80,498 (எக்ஸ்-ஷோரூம்) இந்த மாடலுக்கு போட்டியாக பிரசத்தி பெற்ற ஆக்டிவா…

Read More

புதிதாக வந்துள்ள 2025 ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டரில் கூடுதலாக OBD-2B மேம்பாட்டை தவிர வேறு எவ்விதமான மாற்றங்களும் இல்லாமல் விலை ரூ.1,400 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மற்றபடி, VX, ZX மற்றும் ZX+ போன்றவற்றில் எந்த மாற்றமும் இல்லை. தொடர்ந்து டெஸ்டினி 125ல்  OBD-2B  மேம்பாட்டை பெற்ற 124.6cc ஏர்-கூல்டூ 4 ஸ்ட்ரோக் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 9bhp பவர் மற்றும் 10.4Nm டார்க் வழங்கும் நிலையில் சிவிடி கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கின்றது. டிஜிட்டல் எல்சிடி கிளஸ்ட்டருடன் ப்ளூடூத் வாயிலாக இணைப்பதனால் டர்ன் பை டர்ன் நேவிகேஷன், அழைப்பு, எஸ்எம்ஸ் சார்ந்த அறிவிப்புகளுடன் கூடுதலாக யூஎஸ்பி Type-C சார்ஜிங் போர்டு வழங்கப்பட்டுள்ளது. இருபக்கத்திலும் 12 அங்குல அலாய் வீலுடன் 130 மிமீ டிரம் அல்லது 190 மிமீ டிஸ்க் பிரேக்குடன் மற்றும் பின்புறத்தில் 130 மிமீ டிரம் பெற்றுள்ளது. DESTINI 125 VX OBD2B – ₹ 85,535 DESTINI 125…

Read More

110சிசி ஸ்கூட்டர் சந்தையில் ஹீரோ விற்பனை செய்து வருகின்ற ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் பெற்ற ஜூம் 110 மாடலில் OBD-2B எஞ்சின் பெற்றதாக விற்பனைக்கு ரூ.83,578 முதல் ரூ.89,578 வரை நிர்ணயம் செயப்பட்டுள்ளது. முன்பாக விற்பனை செய்யப்பட்டு வந்த LX வேரியண்டில் OBD-2B அப்டேட் பெறாத நிலையில், மற்ற VX, ZX, மற்றும் காம்பேட் எடிசன் என மூன்றில் மட்டும் பெற்றுள்ளது. ஜூம் 110 ஸ்கூட்டரில் OBD-2B உடன் 7250rpm-ல் 8 bhp பவர், 5750rpm-ல் 8.7Nm டார்க் வெளிப்படுத்துகின்ற இந்த மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் பெற்றதாக உள்ளது. XOOM VX OBD2B ₹ 83,578 XOOM ZX OBD2B ₹ 88,978 XOOM COMBAT OBD2B ₹ 89,578 (எக்ஸ்-ஷோரூம்) 12-இன்ச் அலாய் வீல் கொண்டுள்ள இந்த ஸ்கூட்டரின் ஸ்டைலிஷான தோற்ற அமைப்பினை கொண்டு ஆரஞ்சு, வெள்ளை, கருப்பு, சிவப்பு,நீலம் போன்றவற்றுடன் காம்பட் கிரே நிறத்தை கொண்டதாகவும் உள்ளது. விற்பனைக்கு வந்துள்ள…

Read More