நிறுவனங்கள் தரும் மைலேஜ் ஏன் வரவில்லை ? அவை போலியான மைலேஜ் ? அல்லது ஏமாற்று வேலையா ? – மைலேஜ் தகவல் உண்மை என்ன தெரிந்து கொள்ளலாம். வாகனங்களின் மைலேஜ் என்பது வாடிக்கையாளர்கள் வாகனத்தை தேர்வு செய்வதற்க்கு மிக முக்கிய காரணியாக உள்ளது. அதிக மைலேஜ் தருவதாக சொல்லப்படும் பைக்குகளும் கார்களும் உண்மையில் மைலேஜ் என்ன தருகின்றது. வாசகரின் கேள்வி இதோ ARAI மைலேஜ் எந்தவொரு வாகனம் புதிதாக விற்பனைக்கு வந்தாலும் ஆராய் (Automotive Research Association of India -ARAI )அமைப்பினால் அங்கிகரிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே இந்திய சந்தையில் விற்பனை செய்ய இயலும். ஆராய் அமைப்புதான் வாகனங்களுக்கான மைலேஜ் விபரங்களை சோதனை செய்து அறிவிக்கின்றது. நிறுவனங்களின் மைலேஜ் ஐடில் நிலையில் அதாவது வாகனங்கள் எந்தவிதமான இயக்கமும் இல்லாமல் உண்மையான சாலையில் சோதனைகள் செய்யப்படாமல் சுற்றும் சாலைகளால் அதாவது டைனோமோமீட்டர் உதவியுடன் கார் மற்றும் பைக்குகள் இயங்குவதனை போல சாலைகளை சுற்றவிட்டு…
Author: MR.Durai
ரூபாய் 57,755 விலையில் 2017 ஹீரோ கிளாமர் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் 125சிசி சந்தையில் முதன்மையான மாடலாக கிளாமர் பைக் விளங்குகின்றது. புதிய ஹீரோ கிளாமர் பைக் ஹீரோ கிளாமர் பைக் 125சிசி சந்தையில் முதன்மையான மாடலாக விளங்கு வருகின்றது. கிளாமர் பைக்கில் ஐ3எஸ் நுட்பத்தை பெற்றுள்ளது. கார்புரேட்டர் மற்றும் எஃப்ஐ என இரு விதமான வகைகளில் கிடைக்கும். புதிய பைக்கிற்கு டீலர்கள் வாயிலாக , முன்பதிவு செய்ய ரூபாய் 1000 செலுத்தி பதிவு செய்து கொள்ளும் பட்சத்தில் அதிகபட்சமாக 25 நாட்களுக்குள் டெலிவரி கொடுப்பட்டு விடும் என டீலர்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து 125சிசி சந்தையில் அதிக வரவேற்பினை தக்க வைத்துக் கொண்டுள்ள கிளாமர் பைக் முடிவடைந்த 16-17 ஆம் நிதி ஆண்டில் இந்தியாவின் 125சிசி சந்தையில் அதிகம் விற்பனை ஆகின்ற பைக் மாடலாக சியாம் (இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சம்மேளனம்) அறிக்கை தெரிவிக்கின்றது. டிரம் பிரேக் ,…
இந்தியாவில் வால்வோ நிறுவனத்தின் புதிய வால்வோ S60 போல்ஸ்டார் சொகுசு பெர்ஃபாமென்ஸ் கார் ரூபாய் 52 லட்சத்து 50 ஆயிரம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. வால்வோ s60 போல்ஸ்டார் வால்வோ நிறுவனத்தின் பெர்ஃபாமென்ஸ் பிராண்டாக போல்ஸ்டார் செயல்படுகின்றது. எஸ்60 காரில் 367hp பவரை வெளிப்படுத்தும் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. சாதாரன எஸ்60 செடான் ரக காரை அடிப்படையாக கொண்ட செயல்திறன் மிக்க மாடலாகும். எஸ்60 போல்ஸ்டார் செடான் காரில் 4 சிலிண்டர்கள் கொண்ட 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 367 ஹச்பி ஆற்றலையும், 470 என்எம் டார்க்கையும் வழங்கவல்லதாகும். இதில் பேடில் ஷிப்டர்கள் உடன் கூடிய 8 வேக ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் உள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகத்தில் பயணிக்க கூடிய எஸ்60 போல்ஸ்டார், 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 4.7 வினாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும். வழக்கமான எஸ்60 செடான் காரிலிருந்து வித்தியாசப்படும்…
அகமதாபாத் : விளம்பரப்படுத்திய மைலேஜ் வரவில்லை என்பதனால் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரை சரிசெய்து கொடுங்கள் அல்லது திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள் என அகமதாபாத் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டிவிஎஸ் ஜூபிடர் ராஜ்கோட் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் ராஜ்காட் பகுதியைச் சேர்ந்த மூத்த குடிமகன் ஒருவர் தொடர்ந்த வழக்கில் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜூபிடர் ஸ்கூட்டர் விளம்பரப்படுத்திய மைலேஜ் வரவில்லை என்ற காரணத்தால் ஸ்கூட்டர் விளம்பரப்படுத்தி மைலேஜ் கொடுங்கள் அல்லது திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள் என தீர்ப்பு வழங்கி உள்ளது. கடந்த செப்டம்பர் 2014ல் ஜூபிட்டர் ஸ்கூட்டரை ராஜ்காட் பகுதியில் அமைந்துள்ள டீலரிடம் ரூபாய் 52,150 விலையில் குன்வென்ட் மெகத்தா என்பவர் வாங்கியுள்ளார். வாங்கிய பொழுது லிட்டருக்கு 62 கிமீ மைலேஜ் தரும் என விளம்பரப்படுத்தப்பட்ட நிலையில் வாங்கிய பின்னர் ஒரு லிட்டருக்கு விளம்பரப்படுத்திய மைலேஜ் கிடைக்க பெறவில்லை. இது குறித்து பலமுறை சர்வீஸ் மையங்களில் சோதனை செய்த பொழுது அவர் எதிர்பார்த்த விளம்பரப்படுத்திய மைலேஜ் வராத காரணத்தால்…
இந்திய சந்தையிலிருந்து சுசுகி சிலிங்ஷாட் மற்றும் சுசுகி ஸ்விஷ் ஸ்கூட்டர் நீக்கப்பட்டுள்ளது. விற்பனையில் தொடர்ந்து சரிவினை பெற்றதால் இரு மாடல்களும் நீக்கப்பட்டுள்ளது. சுசுகி ஸ்விஷ் 2010 ஆம் ஆண்டு சுசுகி சிலிங்ஷாட் பைக் அறிமுகம் செய்யப்பட்டது. 2012 ஆம் ஆண்டு சுசுகி ஸ்விஷ் பைக் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த சில மாதங்களாகவே விற்பனை அறிக்கையில் குறிப்பிடபடாமல் உள்ளது. 125 சிசி சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்விஷ் ஸ்கூட்டர் கடந்த சில மாதங்களாகவே மாதாந்திர விற்பனை அறிக்கையில் பூஜ்யம் என்றே கணக்கில் காட்டப்பட்டு வருகின்றது. மேலும் மற்றொரு மாடலான 125cc சுசுகி சிலிங்ஷாட் பைக்கும் பூஜ்யம் என்ற அறிக்கையில் குறிப்படப்பட்டு வந்த நிலையில் அதிகார்வப்பூர்வ இந்திய சுசுகி மோட்டார்சைக்கிள் இணையதளத்தில் இருந்து ஸ்விஷ் , சிலிங்ஷாட் மற்றும் பழைய ஆக்செஸ் 125 ஸ்கூட்டரும் நீக்கப்பட்டுள்ளது. 8.50 BHP பவர் மற்றும் 10 Nm டார்க் வெளிப்படுத்தும் 125சிசி எஞ்சினை சிலிங்ஷாட் பைக் பெற்றிருந்தது. ஸ்விஷ் ஸ்கூட்டரில் 125cc எஞ்சின் பொருத்தப்பட்டு 8.50…
பிஎஸ் 4 மற்றும் தானாகவே எந்த நேரமும் ஒளிரும் முகப்பு விளக்குடன் கூடிய புதிய ஹோண்டா லிவா பைக் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. 8.25 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 110சிசி எஞ்சினை பெற்றுள்ளது. புதிய ஹோண்டா லிவா பைக் 2015 ஆம் ஆண்டு டிவிஸ்டர் பைக்கிற்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டது. 8.25 பிஎச்பி ஆற்றலை வழங்கும் 110சிசி எச்இடி என்ஜின் டிஸ்க் பிரேக் ஆப்ஷனலாக கிடைக்கின்றது. பாரத் ஸ்டேஜ் 4 வகை எஞ்சினை பெற்றுள்ள லிவோ பைக்கில் 8.25 பிஎச்பி ஆற்றலை வழங்கும் 110சிசி எச்இடி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 8.63 என்எம் ஆகும். இதில் 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. லிவோ பைக் மைலேஜ் லிட்டருக்கு 74 கிமீ ஆகும். இரண்டு வேரியண்ட்களில் லிவோ கிடைக்கின்ற நிலையில் 130மிமீ ட்ரம் பிரேக் இரு டயர்களிலும் இடம்பெற்றுள்ளது. மற்றொரு வேரியன்டில் முன்புறத்தில் ஆப்ஷனலாக 240மிமீ டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் டெலஸ்கோபிக்…