பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் அங்கமாக செயல்படுகின்ற மினி பிராண்டு கார்களுக்கு என பிரத்யேகமாக தொடங்கப்பட்டுள்ள சேவை மையத்தில் அனைத்து விதமான மினி கார்களுக்கான தீர்வுகளும் வழங்கப்பட உள்ளது. மினி கார் ஷோரூம் ஐரோப்பியா ஒன்றியத்தை தவிர மினி கார்கள் உற்பத்தி செய்யப்படுவது சென்னையில் மட்டும்தான். கேயூஎன் எக்ஸ்குளூசிவ் சார்பாக விமான நிலையத்தின் அருகில் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் விற்பனை, விற்பனைக்கு பிந்தைய சேவையும் வழங்கப்பட உள்ளது. டெல்லி ,மும்பை , பெங்களூரு மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களை தொடர்ந்து ஐந்தாவது டீலராக சென்னை மீனம்பாக்கம் அருகில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த டீலர் வாயிலாக மினி பிராண்டு கார் மாடல்கள் விற்பனை , விற்பனைக்கு பிந்தைய சேவை , துனை கருவிகள் மற்றும் மினி நிதி உதவி மூலம் கார் கடன் மற்றும் வாகன காப்பீடு போன்றவை வழங்கப்பட உள்ளது. பிஎம்டபிள்யூ ஷோரூம் அருகாமையிலே அமைக்கப்பட்டுள்ள மினி ஷோரூம் முகவரி இதோ.. 20, ஜிஎஸ்டி ரோடு ,மீனம்பாக்கம்…
Author: MR.Durai
சீனாவின் எஸ்ஏஐசி (SAIC) குழுமத்தின் அங்கமாக செயல்படுகின்ற இங்கிலாந்து நாட்டின் எம்ஜி மோட்டார் (MG Motor India) நிறுவனம் இந்திய சந்தையில் கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. எம்ஜி மோட்டார் இந்தியா சீனாவின் எஸ்ஏஐசி குழுமத்தின் அங்காமாக எம்ஜி மோட்டார் செயல்படுகின்றது. குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள ஹலோல் தொழிற்சாலையை வாங்க உள்ளது. இந்தியாவின் சிசிஐ (CCI) அமைப்பு ஆலையை வாங்க ஒப்புதல் அளித்துள்ளது. MG Motor என்றால் Morris Garages மோர்ரீஸ் காரேஜ்ஸ் ஆகும். இந்தியாவில் களமிறங்கும் சீனாவின் முதல் வாகன தயாரிப்பு நிறுவனமாக எஸ்ஏஐசி விளங்கும், சாங்காய் ஆட்டோமோட்டிவ் இன்ட்ஸ்டிரி கார்ப்ரேஷன் நிறுவனத்தின் அங்கமாக செயல்படுகின்ற இங்கிலாந்தைச் சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் வாயிலாக இந்திய சந்தையில் கார்களை உற்பத்தி செய்ய எஸ்ஏஐசி திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கூட்டணி நிறுவனமாக சீன சந்தையில் செயல்பட்டு வரும் எஸ்ஏஐசி நிறுவனத்தின் சார்பாக சமீபத்தில் சீன சாங்காய் ஸ்டாக் சந்தையில் தாக்கல்…
அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் செவர்லே இந்தியா பிரிவு தனது செயல்பாட்டை இந்திய சந்தையில் நிறுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. செவர்லே இந்தியா கடந்த சில வருடங்களாகவே இந்திய சந்தையில் செவர்லே நஷ்டத்தை சந்தித்து வருகின்றது. இந்திய சந்தைக்கு அறிவிக்கப்பட்டிருந்த அனைத்து முதலீடு திட்டங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பீட் மற்றும் எசென்சியா கார்கள் காட்சிப்படுத்தப்பட்டது. செவர்லே நிறுவனத்தின் குஜராத் ஆலை தொழிலாளர்கள் பிரச்சனையை தொடர்ந்து ஹலால் ஆலையை மூடிவிட்டு புனே அருகில் அமைந்திருந்த தாலேகன் ஆலையில் கார்களை உற்பத்தி செய்து வந்த நிலையில் சில மாதங்களாகவே விற்பனையில் மிகவும் பின் தங்கியுள்ள ஜிஎம் இந்திய சந்தையிலிருந்து வெளியேற திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கடந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட புதிய பீட் மற்றும் எசென்சியா செடான் போன் கார்களை இந்திய சாலைகளில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தி வருகின்ற நிலையில் இந்த தகவல்…
ரூபாய் 1.21 கோடி விலையில் மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-கிளாஸ் கோனெஸ்ஸர் சொகுசு கார் மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. S 350d மற்றும் S 400 என இரு விதமான வேரியண்ட்களில் வந்துள்ளது. பென்ஸ் எஸ்-கிளாஸ் கோனெஸ்ஸர் ரூ.1.21 கோடி ஆரம்ப விலையில் எஸ்-கிளாஸ் கோனெஸ்ஸர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் மிகச் சிறப்பான பாதுகாப்பு அம்சத்தை வெளிப்படுத்தும் நைட் வியூ அஸிஸ்ட் பிளஸ் வழங்கப்பட்டுள்ளது. நைட் வியூ அசிஸ்ட் பிளஸ் சாலையில் எதிர்ப்படும் அனைத்தையும் உணர்ந்து ஒட்டுநருக்கு தகவலை வழங்கும். S கிளாஸ் கோனெஸ்ஸர் ஆடம்பர காரின் எஞ்சின் விபரம்.. S 350d வேரியன்டில் 255 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும், 6 சிலிண்டர்களை பெற்ற 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. S400 வேரியன்டில் 329hp ஆற்றலை வெளிப்படுத்தும், 6 சிலிண்டர்களை பெற்ற 3.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இரவு நேர பயணங்களில் மிக சிறப்பாக வாகனத்தை இயக்கும் வகையில் உயர்ரக ஆடம்ப வசதிகளுடன் , அதிகபட்சமாக இரவில்…
இந்தியாவில் ரூபாய் 30.5 லட்சம் ஆரம்ப விலையில் மேம்படுத்தப்பட்ட புதிய 2017 ஆடி ஏ3 கார் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் ஏ3 கார் கிடைக்க உள்ளது. புதிய ஆடி ஏ3 கார் இருவிதமான வேரியன்டில் புதிய ஆடி ஏ3 செடான் மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. இன்டிரியர் மற்றும் எக்ஸ்டிரியர் போன்றவற்றில் சில மாற்றங்களை பெற்றுள்ளது. பெட்ரோரல் மற்றும் டீசல் என இரண்டிலும் கிடைக்கின்றது. ஏ3 காரின் எஞ்சின் விபரம்…இதோ.. 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், அதிகபட்சமாக 148 பிஹச்பி ஆற்றலுடன், 250 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. ஆற்றலை சக்கரங்களுக்கு எடுத்துச் செல்ல 7 வேக இரட்டை கிளட்ச் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் உள்ளது. 2.0 லிட்டர் டீசல் எஞ்சின், அதிகபட்சமாக 139 பிஹச்பி ஆற்றலுடன், 320 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. ஆற்றலை சக்கரங்களுக்கு எடுத்துச் செல்ல 7 வேக இரட்டை கிளட்ச் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் உள்ளது. ஏ3 பெட்ரோல்…
மேம்படுத்தப்பட்ட புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 கார் ரூபாய் 5.36 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. டாப் ஆஸ்டா வேரியன்டில் இருவிதமான இருவண்ண கலவை ஆப்ஷனுடன் வந்துள்ளது. புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கருப்பு வண்ண மேற்கூறையுடன் வந்துள்ளது. எஞ்சின் ஆற்றல் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லை இன்டிரியரில் கூடுதல் வசதிகளுடன் பெற்றதாக ஐ20 வந்துள்ளது. எலைட் ஐ20 காரின் எஞ்சின் விபரம்…, 100 hp பவரை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் VTVT பெட்ரோல் எஞ்சின் மாடலில் 4 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. இதன் டார்க் 130 Nm ஆகும். 5 மேனுவல் பெட்ரோல் மாடலில் 83 hp ஆற்றலுடன் , 115 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் கப்பா எஞ்சின் மாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. 89 bhp ஆற்றலுடன் , 220 Nm டார்கினை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் CRDi டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.…