Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனம் முதன்முறையாக இந்திய சந்தையில் 50, 08,103 அலகுகளை விற்பனை செய்து புதிய சாதனையை 16-17 நிதி ஆண்டில் படைத்துள்ளது. ஹோண்டா விற்பனை நமது நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பாளாரான ஹோண்டா தனது 2016-2017 ஆம் நிதி வருடத்தின் முடிவில்  50, 08,103 ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளை விற்பனை செய்துள்ளது. இதனை கடந்த 15-16 நிதி ஆண்டில் ஒப்பீடுகையில் கூடுதலாக 12 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 15-16 வருடத்தில் 44, 83,462 ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளை விற்பனை செய்திருந்தது. 2016-2017 நிதி ஆண்டில் விற்பனை செய்யபட்டுள்ள 50.08 லட்சம் வாகனங்களில் 33,51,604 ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 15-16 ஆண்டைவிட 16 சதவீத கூடுதல் வளர்ச்சியாகும். 15-16ல் விற்பனை செய்யப்பட்ட ஸ்கூட்டரின் எண்ணிக்கை 28,92,480 ஆகும். FY 2016-17 FY 2015-16 வளர்ச்சி 50, 08,103 44, 83,462…

Read More

இந்தியாவின் முதன்மையான பைக் தயாரிப்பாளாரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மார்ச் மாத முடிவில் 6, 09,951 அலகுகளை விற்பனை செய்து 2016 மார்ச் மாதத்தை விட 0.53 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஹீரோ விற்பனை விபரம் இந்தியாவின் முதன்மையான இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ நிறுவனம் கடந்த 16-17 நிதி வருடத்தில் 66,63,903 பைக் மற்றும் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 15-16 நிதி ஆண்டில் 66,32,322 விற்பனை செய்திருந்த நிலையில் இதனுடன் ஒப்பீடுகையில் 0.48 சதவீத வருடாந்திர வளர்ச்சியை பெற்றுள்ளது. FY 2016-17 FY 2015-16 வளர்ச்சி 66,63,903 அலகுகள் 66,32,322 அலகுகள் 0.48% மார்ச் மாத விற்பனை ஹீரோ நிறுவனம் 6 லட்சம் விற்பனை இலக்கை 6வது முறையாக 16-17 நிதி ஆண்டில் கடந்து மாரச் மாதமும் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.  கடந்த 2016 மார்ச் மாத முடிவில்  6, 06,542 பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்திருந்த…

Read More

இந்தியாவின் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் விற்பனை 2017 மார்ச் மாத முடிவில் 8 சதவீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த மாதம் 2,44,235 பைக்குகளை பஜாஜ் விற்பனை செய்துள்ளது. பஜாஜ் ஆட்டோ விற்பனை பஜாஜ் நிறுவனம் இந்தியா மற்றும் ஏற்றுமதி சந்தை உள்பட சுமார் 2,44,235 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பீடுகையில் 8 சதவீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அதாவது கடந்த மாரச் 2016ல் 2,64,249 பைக்குகள் விற்பனை செய்யபட்டுள்ளன. உள்நாட்டு சந்தையில் மட்டுமே வீழ்ச்சி கண்டுள்ள விற்பனை ஏற்றுமதி சந்தையில் சிறப்பான பங்களிப்பினை பெற்று 8 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. பல்சர் , டிஸ்கவர் , வி வரிசை பைக்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சமீபத்தில் பஜாஜ் பிரிமியம் ரக மோட்டார்சைக்கிள் டோமினார் 400 பைக் ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் மாடலுக்கு எதிராக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. விபரம் மார்ச் 2017 மார்ச் 2016 வளர்ச்சி…

Read More

உலகின் மிக பழமையான மோட்டார் சைக்கிள் நிறுவனங்களின் ஒன்றான ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 2017 மார்ச் மாத முடிவில் 60,113 அலகுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏற்றுமதி கடந்த நிதி ஆண்டை விட 16-17ல் 60 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. ராயல் என்ஃபீல்டு விற்பனை சென்னையைச் சேர்ந்த ராயல் என்ஃபீலடு மோட்டார் சைக்கிள் விற்பனை அபரிதமான வளர்ச்சியை கடந்த சில மாதங்களாகவே பதிவு செய்து வருகின்றது. கடந்த மாதம் ஏற்றுமதி உள்பட 60,113 அலகுகளை விற்பனை செய்துள்ள என்ஃபீல்டு கடந்த ஆண்டின் இதே மாத்ததில் 51,320 அலகுகள் விற்பனை செய்திருந்ததுடன் ஒப்பீடுகையில் கூடுதலாக 17 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. உள்நாடு மற்றும் ஏற்றுமதி உள்பட கடந்த 16-17 நிதி ஆண்டில் சுமார் 31 சதவீத கூடுதல் வளர்ச்சியை பதிவு செய்து 666,490 அலகுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்திய மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக என்ஃபீல்டு…

Read More

முதன்முறையாக இந்தியாவின் ஆட்டோமொபைல் வராலற்றில் பயணிகள் வாகன விற்பனை 30 லட்சம் எண்ணிக்கையை கடந்து 2017ம் நிதி ஆண்டில் புதிய விற்பனை சாதனையை படைத்துள்ளது. பயணிகள் வாகன விற்பனை முதன்முறையாக இந்திய சந்தையின் பயணிகள் வாகன விற்பனை 30,43,201 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. கடந்த 2016ம் நிதி வருடத்தை விட 2017ல் 9.09 சதவீத கூடுதல் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. சியாம் அறிக்கையின்படி 16 ஆட்டோமொபைல் நிறுவனங்களில் 8 ஆட்டோமொபைல் நிறுவனங்கள் விற்பனை விபரத்தை வெளியிட்டுள்ளது. இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சம்மேளனத்தில் பதிவு செய்துள்ள 16 பயணிகள் வாகன தயாரிப்பு நிறுவனங்களில் 8 வாகன நிறுவனங்கள் வெளியிட்டுள்ள 2016-2017 ஆம் நிதி ஆண்டின் அறிக்கையின் படி இந்தியாவின் பயணிகள் வாகன விற்பனை எண்ணிக்கை 3 மில்லியனை கடந்துள்ளது. நிதி வருடம் எண்ணிக்கை வளர்ச்சி % 2016-17 3043201 9.09 2015-16 2789678 7.24 1. மாருதி சுசுகி இந்திய பயணிகள் வாகன சந்தையில்…

Read More

பி.எஸ் 3 க்கு எதிராக உச்சநீதிமன்றம் விதித்த அதிரடி தடையை தொடர்ந்து மார்ச் மாதத்தின் இறுதி நாட்களில் நாடு முழுவதும் சுமார் 8 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. பிஎஸ் 3 தடை எதிரொலி பாரத் ஸ்டேஜ் 4 நடைமுறை ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. ஏப்ரல் 1 முதல் பி.எஸ் 3 வாகனங்கள் விற்பனை செய்யக்கூடாது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இரு சக்கர வாகனங்களுக்கு அதிகபட்சமாக ரூபாய் 30,000 வரை சலுகைகள் வழங்கப்பட்டது உச்சநீதிமன்றத்தில் அளித்திருந்த இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சம்மேளனம் (சியாம்)  அறிக்கையின்படி 6.71 லட்சம் இருசக்கர வாகனங்கள், 16,000 கார்கள், 40,000 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 96,000 வர்த்தக வாகனங்கள் என சுமார் 8.24 லட்சம் வாகனங்கள் பிஎஸ் 3 மாசு கட்டுப்பாடு என்ஜின் பொருத்தப்பட்டுள்ள நிலையில் விற்பனை செய்யப்படாமல் உள்ளதாக தெரிவித்திருந்தது. பெரும்பாலான இருசக்கர வாகன தயாரிப்பாளர்கள் ரூபாய் 5,000 தொடங்கிஅதிகபட்சமாக…

Read More