உலகின் மிக பழமையான மோட்டார் சைக்கிள் நிறுவனங்களின் ஒன்றான ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 2017 மார்ச் மாத முடிவில் 60,113 அலகுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏற்றுமதி கடந்த நிதி ஆண்டை விட 16-17ல் 60 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. ராயல் என்ஃபீல்டு விற்பனை சென்னையைச் சேர்ந்த ராயல் என்ஃபீலடு மோட்டார் சைக்கிள் விற்பனை அபரிதமான வளர்ச்சியை கடந்த சில மாதங்களாகவே பதிவு செய்து வருகின்றது. கடந்த மாதம் ஏற்றுமதி உள்பட 60,113 அலகுகளை விற்பனை செய்துள்ள என்ஃபீல்டு கடந்த ஆண்டின் இதே மாத்ததில் 51,320 அலகுகள் விற்பனை செய்திருந்ததுடன் ஒப்பீடுகையில் கூடுதலாக 17 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. உள்நாடு மற்றும் ஏற்றுமதி உள்பட கடந்த 16-17 நிதி ஆண்டில் சுமார் 31 சதவீத கூடுதல் வளர்ச்சியை பதிவு செய்து 666,490 அலகுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்திய மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக என்ஃபீல்டு…
Author: MR.Durai
முதன்முறையாக இந்தியாவின் ஆட்டோமொபைல் வராலற்றில் பயணிகள் வாகன விற்பனை 30 லட்சம் எண்ணிக்கையை கடந்து 2017ம் நிதி ஆண்டில் புதிய விற்பனை சாதனையை படைத்துள்ளது. பயணிகள் வாகன விற்பனை முதன்முறையாக இந்திய சந்தையின் பயணிகள் வாகன விற்பனை 30,43,201 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. கடந்த 2016ம் நிதி வருடத்தை விட 2017ல் 9.09 சதவீத கூடுதல் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. சியாம் அறிக்கையின்படி 16 ஆட்டோமொபைல் நிறுவனங்களில் 8 ஆட்டோமொபைல் நிறுவனங்கள் விற்பனை விபரத்தை வெளியிட்டுள்ளது. இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சம்மேளனத்தில் பதிவு செய்துள்ள 16 பயணிகள் வாகன தயாரிப்பு நிறுவனங்களில் 8 வாகன நிறுவனங்கள் வெளியிட்டுள்ள 2016-2017 ஆம் நிதி ஆண்டின் அறிக்கையின் படி இந்தியாவின் பயணிகள் வாகன விற்பனை எண்ணிக்கை 3 மில்லியனை கடந்துள்ளது. நிதி வருடம் எண்ணிக்கை வளர்ச்சி % 2016-17 3043201 9.09 2015-16 2789678 7.24 1. மாருதி சுசுகி இந்திய பயணிகள் வாகன சந்தையில்…
பி.எஸ் 3 க்கு எதிராக உச்சநீதிமன்றம் விதித்த அதிரடி தடையை தொடர்ந்து மார்ச் மாதத்தின் இறுதி நாட்களில் நாடு முழுவதும் சுமார் 8 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. பிஎஸ் 3 தடை எதிரொலி பாரத் ஸ்டேஜ் 4 நடைமுறை ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. ஏப்ரல் 1 முதல் பி.எஸ் 3 வாகனங்கள் விற்பனை செய்யக்கூடாது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இரு சக்கர வாகனங்களுக்கு அதிகபட்சமாக ரூபாய் 30,000 வரை சலுகைகள் வழங்கப்பட்டது உச்சநீதிமன்றத்தில் அளித்திருந்த இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சம்மேளனம் (சியாம்) அறிக்கையின்படி 6.71 லட்சம் இருசக்கர வாகனங்கள், 16,000 கார்கள், 40,000 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 96,000 வர்த்தக வாகனங்கள் என சுமார் 8.24 லட்சம் வாகனங்கள் பிஎஸ் 3 மாசு கட்டுப்பாடு என்ஜின் பொருத்தப்பட்டுள்ள நிலையில் விற்பனை செய்யப்படாமல் உள்ளதாக தெரிவித்திருந்தது. பெரும்பாலான இருசக்கர வாகன தயாரிப்பாளர்கள் ரூபாய் 5,000 தொடங்கிஅதிகபட்சமாக…
மத்திய அரசு வழங்கி வந்த மைல்டு ஹைபிரிட் ஆப்ஷனை பெற்ற கார்களுக்கு FAME திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற மானியத்தை ரத்து செய்துள்ளது. எனவே மாருதி சுசுகி SHVS கார்கள் விலை உயர்வினை பெறவில்லை. FAME மானியம் ரத்து மத்திய அரசு மைல்டு ஹைபிரிட் ஆப்ஷன்களை பெற்ற கார்களுக்கு வழங்கிவந்த மானியத்தை ரத்து செய்துள்ளது. ரூபாய் 29,000 இருசக்கர வாகனங்களுக்கும் , அதிகபட்சமாக ரூபாய் 1.38 லட்சம் நான்கு சக்கரங்களுக்கு மானியம் வழங்கப்படுகின்றது. இதன் காரணமாக மாருதியின் SHVS கார்கள் விலை உயரும். ஏப்ரல் 2015ல் அறிமுகம் செய்யப்பட்ட ஹைபிரிட் சார்ந்த அம்சங்களை கொண்ட கார்கள் மற்றும் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத எலக்ட்ரிக் பைக்குகளுக்கு மத்திய அரசின் FAME (Faster Adoption and Manufacturing of Hybrid and Electric Vehicles) என்ப்படும் திட்டத்தின் கீழ் ரூபாய் 29,000 இருசக்கர வாகனங்களுக்கும் , அதிகபட்சமாக ரூபாய் 1.38 லட்சம் வரை நான்கு சக்கரங்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகின்றது. தற்பொழுது…
அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வரவுள்ள புதிய தலைமுறை மாருதி டிஸையர் காரின் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. மேம்படுத்தப்பட்ட டிசையர் கார் புதிய ஸ்விஃப்ட் காரை அடிப்படையாக கொண்டதாகும். புதிய மாருதி டிஸையர் மானசேர் ஆலையில் புதிய மாருதி சுசூகி கார் உற்பத்தி செய்யப்பட உள்ளது. என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றங்களும் இல்லாமல் SHVS மைல்டு ஹைபிரிட் ஆப்ஷனை பெற்றிருக்கும். வருகின்ற ஏப்ரல் இறுதியிலோ அல்லது மே மாத மத்தியிலோ புதிய டிஸையர் கார் விற்பனைக்கு வரலாம். 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் என்ஜினை இடம் பெற்றிருக்கும். நடைமுறையில் உள்ள ஆற்றல் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் டீசல் என்ஜின் மாடலில் சியாஸ் காரில் இடம்பெற்றுள்ள எஸ்ஹெச்விஎஸ் மைல்டு ஹைபிரிட் என்ஜின் ஆப்ஷனுடன் வரவுள்ளது சோதனை ஓட்ட படங்கள் வாயிலாக உறுதியாகியுள்ளது. பின்புற அமைப்பில் பூட் ஸ்பேஸ்…
உலகின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளான டொயோட்டா மோட்டார் கார்பரேஷன் சர்வதேச அளவில் 2.9 மல்லியன் டொயோட்டா கரோலா கார்களில் ஏர்பேக் இன்ஃபிளேடர் பிரச்சனை காரணமாக திரும்ப அழைக்கின்றது. டொயோட்டா கரோலா ஆல்டிஸ் இந்தியாவில் 23,000 கரோலா ஆல்டிஸ் கார்கள் திரும்பப்பெறப்படுகின்றன. உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலான அம்மோனியா நைட்ரேட் இடம்பெற்றுள்ளது. காற்றுப்பை டகாடா நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும். 2010 முதல் 2012 வரை தயாரிக்கப்பட்ட கார்களில் இடம்பெற்றுள்ள இந்த பிரச்சனையால் ஜப்பான், சீனா, மத்திய கிழக்கு நாடுகள், இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஓசியானா மேலும் சில பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டுள்ள 2.9 மில்லியன் கரோல்லா கார்கள் திரும்பப்பெறப்படுகின்றன. விற்பனை செய்யப்பட்டுள்ள கார்களில் அதிகபட்சமாக ஜப்பானில் 7.5 லட்சம், ஓசியானாவில் 1.16 லட்சம், இந்தியாவில் 23,000 ஆல்டிஸ் கார்கள் திரும்பப்பெறப்பட உள்ளது. டகாடா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த ஏர்பேக்குகளில் இடம்பெற்றுள்ள உலர்த்தும் கலவை திறன் இல்லாத அம்மோனியா நைட்ரேட் உயிருக்க ஆபத்து விளைவிப்பதாக கண்டறியப்பட்டுள்ளதின் காரணமாக பாதுகாப்பு சார்ந்த…