Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

மைல்டு ஹைபிரிட் கார்களுக்கு FAME மானியம் ரத்து

by automobiletamilan
April 3, 2017
in Wired, செய்திகள்

மத்திய அரசு வழங்கி வந்த மைல்டு ஹைபிரிட் ஆப்ஷனை பெற்ற கார்களுக்கு  FAME திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற மானியத்தை ரத்து செய்துள்ளது. எனவே மாருதி சுசுகி SHVS கார்கள் விலை உயர்வினை பெறவில்லை.

FAME மானியம் ரத்து

  • மத்திய அரசு மைல்டு ஹைபிரிட் ஆப்ஷன்களை பெற்ற கார்களுக்கு வழங்கிவந்த மானியத்தை ரத்து செய்துள்ளது.
  • ரூபாய் 29,000 இருசக்கர வாகனங்களுக்கும் , அதிகபட்சமாக ரூபாய் 1.38 லட்சம் நான்கு சக்கரங்களுக்கு மானியம் வழங்கப்படுகின்றது.
  • இதன் காரணமாக மாருதியின் SHVS கார்கள் விலை உயரும்.

ஏப்ரல் 2015ல் அறிமுகம் செய்யப்பட்ட ஹைபிரிட் சார்ந்த அம்சங்களை கொண்ட கார்கள் மற்றும் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத எலக்ட்ரிக் பைக்குகளுக்கு மத்திய அரசின் FAME (Faster Adoption and Manufacturing of Hybrid and Electric Vehicles) என்ப்படும் திட்டத்தின் கீழ் ரூபாய் 29,000 இருசக்கர வாகனங்களுக்கும் , அதிகபட்சமாக ரூபாய் 1.38 லட்சம் வரை நான்கு சக்கரங்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகின்றது.

தற்பொழுது மத்திய அரசின் புதிய அறிவிப்பின்படி மைல்டு ஹைபிரிட் எனப்படும் சிறிய அளவிலான ஹைபிரிட் ஆப்ஷனாக கருத்தப்படுகின்ற எஸ்எச்விஎஸ் – Smart Hybrid Vehicle by Suzuki (SHVS)  பெற்ற சியாஸ் மற்றும் எர்டிகா கார்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் ரத்தாகின்றது.

 

ஏப்ரல் 1ந் தேதி முதல் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வருவதனால் மார்ச் 31க்கு முன்பாக வாங்கி வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதனால், சியாஸ் மற்றும் எர்டிகா எம்பிவி காருக்கு  ரூபாய் 13,000 வரை வழங்கப்பட்டு வந்த மானியம் ரத்தாகின்றது.

எனவே இரு கார்களின் விலையும் எக்ஸ்ஷோரூமில் உயரத்தப்படவில்லை, ஆனால் ஆன்ரோடு விலையில் ரூ.13,000 வரை அதிகரிக்கும் , சமீபத்தில் மாருதியின் பிரிமியம் ஷோரூமாக கருதப்படுகின்ற நெக்ஸா வழியாக மட்டுமே இனி புதிய சியாஸ் கார் விற்பனை செய்யப்பட உள்ளதாக மாருதி அறிவித்திருந்தது.

Tags: சியாஸ்
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version