2017 ஏப்ரல் 1ந் தேதி முட்டாள்கள் தினத்தை கொண்டாடும் வகையில் மோட்டார் உலகில் வெளியான சுவாரஸ்ய படங்கள் மற்றும் தகவல்களை இங்கே காணலாம். மோட்டார் உலகம் ஏப்ரல் 1ந் தேதி மோட்டார் உலகில் வெளியான சில சவாரஸ்யமான முட்டாள்கள் தின கொண்டாட படங்கள் மற்றும் தகவல்களில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த சிலவற்றை பார்க்கலாம்… ட்ரையம்ப் ஸ்டீயரிங் வீல் பைக் ட்ரையம்ப் வெளியிட்ட ட்ரையம்ப் ஹைன்டில்வீல் கொண்ட மோட்டார்சைக்கிள் கான்செப்ட் மாடலின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. 260மிமீ விட்டம் கொண்டுள்ள இந்த ஸ்டீயரிங் வீலை கொண்டு இரு சக்கர வாகனங்களை இயக்க முடியாது. ஹூண்டாய் கிளிக் டூ ஃபிளை கார்களின் டெலிவரியை ட்ரோன்கள் வாயிலாக செய்வதாக செய்தி வெளியிட்டு ஒரு வீடியோவினை ஹூண்டாய் பிரிட்டன் வெளியிட்ட வீடியோ வைரலானது . அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. https://youtu.be/inLiQk9oYP0 மெக்லாரன் இறகு கார் மெக்லாரன் வெளிப்படுத்திய முட்டாள்கள் தின சிறப்பு கார் படமாக புறா இறகுகளை…
Author: MR.Durai
கடந்த 2016-2017 நிதி ஆண்டில் இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகி கார் நிறுவனம் 1,568,603 வாகனங்களை விற்பனை செய்து முந்தைய நிதி ஆண்டை விட 9.8 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மாருதி சுசுகி கார் விற்பனை 16-17 இந்தியாவின் முன்னணி தயாரிப்பாளர் மாருதி முதன்முறையாக 1.50 கோடி வாகன விற்பனையை கடந்துள்ளது. கடந்த மார்ச் 2017ல் 139,763 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. மார்ச் 2017 மாதந்திர ஏற்றுமதியில் 11, 764 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த மார்ச் 2016ல் 129,345 வாகனங்கள் உள்நாட்டிலும் மற்றும் வெளிநாட்டிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் மார்ச் 2017ல் ஏற்றுமதி உள்பட 139,763 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. மார்ச் 2017 ல் ஏற்றுமதி செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 11, 764 ஆகும். ஸ்விஃப்ட் , பலேனோ, இக்னிஸ் , விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் ஆல்ட்டோ போன்ற மாடல்கள் மிக சிறப்பான பங்களிப்பினை வழங்கி வருகின்றது. மாருதி சியாஸ் செடான் கார்…
இன்று முதல் அதாவது ஏப்ரல் 1ந் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய பி.எஸ் 4 எஞ்சின் பொருத்தப்பட்ட வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் என்ற நடைமுறையை தொடர்ந்து வர்த்தக வாகனங்களின் விலை 6 முதல் 10 சதவிதம் வரை உயருகின்றது. வர்த்தக வாகனங்கள் ஏப்ரல் 1ந் தேதி முதல் பி.எஸ் 4 நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. உச்சநீத மன்றம் விதித்த தடை தொடர்ந்து பி.எஸ் 3 வாகனங்கள் விற்பனை நிறுத்தம் அரை டன் முதல் 49 டன் வரையிலான வனிக ரீதியான வாகனங்கள் விலை உயர்வை சந்திக்கும். பி.எஸ் 4 எஞ்சின்களை பெற்ற இரு சக்கர வாகனங்கள் விலை ரூ.500 முதல் ரூ.1000 வரை தொடக்கநிலை சந்தை மாடல்கள் உயர்த்தப்பட்டுள்ளன. அரை டன் முதல் 49 டன் வரையிலான வர்த்தக ரீதியான பயன்பாட்டில் உள்ள வாகனங்கள் அனைத்தும் விலை 6 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை விலை…
இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் மற்றும் கோவை ஜெயம் ஆட்டோமோட்டிவ்ஸ் கூட்டணியில் சிறப்பு பெர்ஃபாமென்ஸ் ரக ஸ்போர்ட்டிவ் வாகனங்கள் தயாரிக்கப்பட உள்ளது. ஜெடி ஸ்பெஷல் வெய்கிள் நிறுவனம் என்ற பெயரில் தயாரிக்கப்பட உள்ளது. சிறப்பு பெர்ஃபாமென்ஸ் கார்கள் ஜெடி ஸ்பெஷல் வெய்கிள் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட உள்ளது. 50:50 க்கு என்ற கூட்டணியில் இருநிறுவனங்களும் இணைந்து செயல்பட உள்ளது. மெர்சிடிஸ் நிறுவத்தின் ஏஎம்ஜி , பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எம் பிரிவு மற்றும் ஜெஎல்ஆர் நிறுவனத்தின் ஸ்பெஷல் வெய்கிள் பிரிவு போன்ற நிறுவனங்களை அடிப்படையாக கொண்டதாகவே அமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு கூட்டணியில் பட்ஜெட் விலையில் சிறப்பான பெர்ஃபாமென்ஸ் ரக மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சமீபத்தில் டாடாவின் புதிய ஸ்போர்ட்டிவ் பிராண்டான டாமோ-வின் முதல் கார் மாடலான ரேஸ்மோ காரினை தொடர்ந்து பல கார்களை அறிமுகம் செய்ய ஜெடி கூட்டணி திட்டமிட்டுள்ளது. கோவை ஜெயம் ஆட்டோமோட்டிவ்ஸ் நிறுவனம் சிறப்பு பெர்ஃபாமென்ஸ்…
இந்தியாவின் போக்குவரத்து வரலாற்றை நினைவூட்டும் வகையில் இந்திய அஞ்சல் துறை சிறப்பு தபால் தலைகளை வெளியிட்டுள்ளது. பல்லாக்கு முதல் மெட்ரோ ரெயில்கள் வரை தபால் தலையில் இடம்பெற்றுள்ளது. போக்குவரத்து தபால் தலை வெளியீடு டெல்லியில் அமைந்துள்ள இந்தியாவின் ஒரே பாரம்பரிய போக்குவரத்து அருங்காட்சியகத்தின் உதவியுடன் வெளியிடப்பட்டுள்ள 20 சிறப்பு தபால் தலைகளில் 15 தபால்தலைகளில் இடம்பெற்றுள்ள வாகனங்கள் இந்த அருங்காட்சியத்தில் இடம்பெற்றுள்ளது. வெளியிடப்பட்டுள்ள தபால் தலைகளில் தலா நான்கு பல்லாக்குகள் , மிருகங்களை கொண்டு இழுக்கும் வண்டிகள் , ரிக்ஷா, வின்டேஜ் கார்கள் மற்றும் பொது போக்குவரத்து துறையில் உள்ள வாகனங்களும் இடம்பெற்றுள்ளது. வெளியிடப்பட்டுள்ள தபால் தலைகளின் விலை ரூ.5 முதல் 25 வரை வழங்கப்பட்டுள்ளது.
அதிரடியான உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து நாட்டில் உள்ள 90 சதவீத பி.எஸ் 3 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹோண்டாவின் CBR 250R மற்றும் CBR 150R பைக் வாங்கினால் ரூ. 25,000 வரை சலுகை வழங்கப்பட்டுள்ளது. பி.எஸ் 3 விற்பனை நிலவரம் ரூ. 25,000 ஆன்ரோடு விலையில் ஹோண்டா நவி விற்பனை செய்யப்பட்டுள்ளது. 6.71 லட்சம் இரு சக்கர வாகனங்களில் 90 சதவீத வாகனங்களை விற்பனை செய்யப்பட்டிருக்கலாம். பெருவாரியான டீலர்கள் வசம் பி.எஸ் 3 வாகனங்கள் இல்லை. இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ நிறுவனம் தற்பொழுதைய நிலவரப்படி ஸ்கூட்டர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 20,000 வரை விலை குறைத்து அதிரடியை கிளப்பியுள்ளது. ஹோண்டாவின் CBR 250R அல்லது CBR 150R பைக் வாங்கினால் ஹோண்டா நவி மினி பைக் இலவசமாக வழங்கப்படுகின்றதாம்.. டிவிஎஸ் அப்பாச்சி மாடலுக்கு அதிகபட்சமாக ரூ. 20,000 வரை விலை சலுகை மற்றும் இலவச வாகன…