ரோல்ஸ் ராய்ஸ் பேன்டம் கார் வரிசையில் 2003 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட 7வது தலைமுறை ரோல்ஸ் ராய்ஸ் பேன்டம் கார் உற்பத்தி நிறைவடைந்துள்ளது. புதிய தலைமுறை பேன்டம் 2018 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் பேன்டம் உலகின் மிக சிறந்த சொகுசு கார்களில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்துக்கே உரித்தான தனி மறியாதை கொண்ட கார்களில் ஒன்றான பேன்டம் மாடலின் சிறப்பு மாடலாக ரோல்ஸ் ராய்ஸ் பேன்டம் VII வடிவமைக்கப்பட்டுள்ளது. 1930 ஆம் ஆண்டு முதன்முறையாக பேன்டம் கார் தயாரிப்பு தொடங்கப்பட்டது. connoisseur collector என்ற தீமை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள 7வது தலைமுறையின் இறுதி மாடல் எஞ்சினில் எந்த மாற்றங்களும் இல்லாமல் விற்பனையில் உள்ள அதே 6.75 லிட்டர் V-12 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு 454 பிஹெச்பி பவர் , 720 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. பேண்டம் காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 238 கிமீ…
Author: MR.Durai
இந்தியாவின் முதன்மையான கார் தயாரிப்பாளரான மாருதி சுசூகி கார்கள் கடந்த ஜனவரி 2016யில் 106,383 கார்களை விற்பனையில் செய்திருந்த நிலையில் ஜனவரி 2017ல் 133,768 கார்களை விற்பனை செய்து 25.9 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. மாருதி சுசூகி கார்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்கு பிறகு ஆட்டோமொபைல் சந்தை வளர்ச்சியை தொடங்கியுள்ள நிலையில் மாருதியின் யூட்டிலிட்டி ரக சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் விட்டாரா பிரெஸ்ஸா அமோக வரவேற்பினை பெற்று விளங்குவதனால் 101 சதவீத வளர்ச்சியை யூட்டிலிட்டி சந்தையில் பெற்றுள்ளது. புதிய தலைமுறை டிசையர் கார் விற்பனைக்கு வரவுள்ள நிலையில் டிசையர் காரின் டாக்சி மாடலான டிசையர் டூர் விற்பனை ஜனவரி 2017யில் 15.3 சதவீத சரிவினை எதிர்கொண்டுள்ளது. அதாவது ஜனவரி 2016ல் 3545 டிசையர் டூர் மாடல்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில் ஜனவரி 2017யில் 3001 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் மாருதியின் இலகுரக வர்த்தக வாகனமான மாருதி சூப்பர் கேரி 166 அலகுகள் விற்பனை…
உலகளாவிய கூகுள் இணைய தேடலில் நாடுகளின் அடிப்படையில் முன்னிலை வகிக்கும் ஆட்டோ பிராண்டுகள் விபரங்கள் வெளியாகியுள்ளது. உலகின் தேடலில் டொயோட்டா முதலிடத்தை பிடித்துள்ளது. டாப் ஆட்டோ பிராண்டுகள் உலகின் முதன்மையான கார் தயாரிப்பாளராக இருந்த வந்த டொயோட்டா கடந்த 2016 ஆம் ஆண்டின் முடிவில் குறைந்த எண்ணிக்கை வித்தியாசத்தில் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் முதன்மையான கார் தயாரிப்பாளர் என்கின்ற பட்டத்தை இழந்திருந்தாலும் கூகுள் தேடலில் டொயோட்டா 71 நாடுகளின் தேடல் பட்டியலில்முன்னிலை வகிக்கின்றது. 193 நாடுகளிலும் அதிகம் கூகுள் தேடு தளத்தில் தேடப்பட்ட பிராண்டுகளை குயிக்கோ வரிசைப்படுத்தியுள்ளது. இந்த பட்டியலில் 74 நாடுகளின் தேடலிடல் முதலிடத்தை டொயோட்டா பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் சொகுசு கார் தயாரிப்பாளரான பிஎம்டபிள்யூ 51 நாடுகளில் முன்னிலை பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள ஹோண்டா 17 நாடுகளில் முன்னிலையில் உள்ளது. இந்தியர்களின் தேடலில் கார் தயாரிப்பில் முதன்மையான மாருதி சுசூகி இடம்பெறாமல் இரண்டாம் இடத்தில் உள்ள ஹூண்டாய் முதலிடத்தை…
2012 ஆம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட ஹோண்டாவின் சிட்டி , ஜாஸ் , அக்கார்டு மற்றும் சிவிக் கார்களில் பொருத்தப்பட்டுள்ள டகடா ஏர்பேக் இன்பிளேடர்களில் உள்ள பிரச்சனைக்கு உண்டான தீர்வினை இலவசமாக வழங்கும் நோக்கில் திரும்ப அழைக்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு தயாரித்து விற்பனை செய்யப்பட்ட கார்களில் திரும்ப அழைக்கப்படுகின்ற எண்ணிக்கை விபரம் ஹோண்டா ஜாஸ் – 7,265 ஹோண்டா சிட்டி – 32,456 ஹோண்டா சிவிக் -1,200 ஹோண்டா அக்கார்டு – 659 என மொத்தம் 41,580 கார்களை திரும்ப அழைத்து இதற்கு உண்டான தீர்வினை இலவசமாக தங்களது அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் வாயிலாக தொடங்கியுள்ளது. தங்களுடைய காரும் இந்த அழைப்பு பட்டியலில் உள்ளதா என்பதனை அறிய ஹோண்டா நிறுவனத்தின் அதிகார்வப்பூர்வ இணையதளத்தில் இதற்கு உண்டான வசதியை ஏற்படுத்தியுள்ளது. வாகனத்தின் 17 இலக்க வின் நம்பரை அதாவது வாகனத்தின் அடையாள எண் கொண்டு அறியலாம். டகடா காற்றுப்பை பிரச்சனையால் சர்வதேச அளவில் 13க்கு…
பஜாஜின் பல்ஸர் வரிசையில் இடம்பெற்றுள்ள பஜாஜ் பல்ஸர் 200 என்எஸ் பைக்கில் கூடுதலாக ஏபிஎஸ் பிரேக் ஆப்ஷனலாக வரவுள்ளதை உறுதி செய்யும் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. மீண்டும் பல்ஸர் 200 NS பைக் இந்திய சந்தையில் விற்பனைக்கு அடுத்த சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வரவுள்ளது. ஷோரூம்களுக்கு வந்து சேர்ந்து விட்ட புதிய 200 என்எஸ் முன்பதிவு நடந்து வருகின்றது. பஜாஜ் பல்ஸர் 200 என்எஸ் ஏபிஎஸ் ஆப்ஷனலாக சேர்க்கப்பட்ட பல்ஸர் 200 என்எஸ் மாடல் டீலர்களிடம் உள்ளதை ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஏபிஎஸ் ஆப்ஷனை உறுதிப்படுத்தும் வகையில் ஏபிஎஸ் இல்லாத மாடலும் உள்ள பல்சர் 200 NS பைக்கின் உட்புற குறியீடு தகவலும் வெளியாகியுள்ளது. படத்தில் JLA/K4 N ABS என்பதில் N ABS என்றால் Non-ABS ஆகும். முந்தைய மாடலின் தோற்ற அமைப்பிலே கூடுதலாக என்ஜின் கார்டு மட்டுமே பெற்றுள்ள மாடலாக காட்சிக்கு வந்துள்ளது. பல்சர்…
ஃபோர்டு எண்டேவர் டைட்டானியம் வேரியன்டில் SNYC3 மேம்பாடு வழங்கப்பட்டுள்ளது. முந்தைய வாடிக்கையாளர்களுக்கும் SNYC3 மேம்பாட்டினை பெற்றுக் கொள்ளலாம். எண்டேவர் டைட்டானியம் எண்டேவர் டாப் வேரியன்டில் இடம்பெற்றுள்ள ஃபோர்டு SNYC2 மென்பொருள் மேம்படுத்தப்பட்டு SNYC3 கொடுக்கப்பட்டுள்ளது. புதிய மேம்பாடுகளில் சிறப்பான வகையில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே போன்வற்றின் அம்சங்களை சிறப்பாக பயன்படுத்த இயலும். டைட்டானியம் வேரியன்டில் இடம்பெற்றுள்ள 8 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வாயிலாக பாடல்கள் , அழைப்புகள் , குறுஞ்செய்தி போன்றவற்றை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் ஃபோர்டு எமர்ஜென்சி சேவை , ரிவர்ஸ்கேமரா , கிளைமேட் கன்ட்ரோல் போன்ற வசதிகள் உள்ளன. பயன்பாட்டில் உள்ள கார்களுக்கு வைபை வாயிலாக தொடர்பு கொள்ளும் பொழுது சிங்க்3 மேம்பாட்டினை பெறலாம். எண்டேவர் எஸ்யூவி எஞ்சின் என்டெவர் எஸ்யூவி காரில் 2.2 லிட்டர் மற்றும் 3.2 லிட்டர் என் இரண்டு விதமான என்ஜின் ஆப்ஷன் உள்ளது. 160 பிஎஸ் ஆற்றலை வழங்கும் 2198 சிசி TDCI டீசல் என்ஜின்…