125சிசி இருசக்கர வாகன சந்தையில் முக்கிய மாடலான ஹோண்டா சிபி ஷைன் 50 லட்சம் உற்பத்தியை கடந்துள்ளது. தற்பொழுது 2017 ஹோண்டா சிபி ஷைன் பைக் பிஎஸ் 4 எஞ்சினுடன் ரூ. 65,792 விலையில் விற்பனைக்கு வந்தது. சிபி ஷைன் பைக் ஷைன் பைக்கில் 10.16 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 124.7சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 10.3 என்எம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. எச்இடி நுட்பத்துடன் உள்ள ஷைன் பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 65கிமீ ஆகும். முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் பின்புறத்தில் இரண்டு சாக் அப்சார்பர்களை பெற்றுள்ளது. மேலும் முன் டயரில் 240மிமீ டிஸ்க் பிரேக் /130மிமீ டிரம் பிரேக் மற்றும் பின் டயரில் 130மிமீ டிரம் பிரேக்கினை கொண்டுள்ளது. மேலும் காம்பி பிரேக்கிங் அமைப்பினை டாப் வேரியண்டில் கொண்டுள்ளது. மேலும் முழுமையான விபரம் அறிய ; 2017 ஹோண்டா சிபி ஷைன் சிபி ஷைன் 50…
Author: MR.Durai
மாருதியின் செலிரியோ ஹேட்ச்பேக் மாடலின் டீசல் காரை சந்தையிலிருந்து நீக்கியுள்ளது. இந்தியாவின் முதல் பெட்ரோல் ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட மாடலாக செலிரியோ விளங்குகின்றது. மாருதியின் செலிரியோ குறைந்த 47 பிஎச்பி பவரை அளிக்கும் 800சிசி எஞ்சினை பெற்றிருந்த மாருதியின் செலிரியோ டீசல் காரின் மைலேஜ் லிட்டருக்கு 27.62 கிமீ ஆக இருந்தபொழுதும் கூடுதலான விலை மற்றும் பெரிதான வரவேற்பினை பெற தவறியதாலும் ஜனவரி 2017 முதல் டீலர்களுக்கு டீசல் செலிரியோ வருகை நிறுத்தப்பட்டு விட்டதாகவும் தற்பொழுது அலுவல் இணையத்திலும் டீசல் மாடலை மாருதி நீக்கியுள்ளது. பெரும்பாலான மாருதியின் கார்களில் டீசல் வேரியன்டில் ஆஸ்தான எஞ்சினாக ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் எஞ்சின் மாடலே பொருத்தப்பட்டுள்ளது. குறைந்த சிசியில் இடம்பெற்றிருந்த டீசல் எஞ்சினும் நீக்கப்பட்டிருந்தாலும் இதே எஞ்சின் தற்பொழுது மாருதியின் சூப்பர் கேரி மாடலில் மட்டுமே இடம்பெற்றுள்ளது. செலிரியோ பெட்ரோல் மாடல் மிக சிறப்பான ஆதரவுடன் சந்தையில் தொடர்கின்றது.
சர்வதேச அரங்கில் உயர்ந்து வரும் க்ராஸ்ஓவர்/எஸ்யூவி கார்களின் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ள டொயோட்டா C-HR எஸ்யூவி மிகவும் ஸ்டைலிசான தோற்ற அமைப்புடன் 15 லட்சம் ரூபாய் விலையில் விற்பனைக்கு வரும் வாய்ப்புகள் உள்ளது. டொயோட்டா C-HR டொயோட்டா நிறுவனத்தின் பிரியஸ் காரின் டிஎன்ஜிஏ (Toyota’s New Global Architecture – TNGA) தளத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள டொயோட்டா சி ஹெச்ஆர் எஸ்யூவி இந்தியாவிலே உற்பத்தி செய்யப்பட்டு 2018 ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள க்ரெட்டா , டூஸான் , எக்ஸ்யூவி 500 போன்ற மாடல்களுக்கு கடுமையான சவாலினை ஏற்படுத்தும். [clickToTweet tweet=”டொயோட்டா சி-ஹெச்ஆர் என்றால் கூபே ஹைரைடர் , C-HR Stands for Coupe High Rider ” quote=”டொயோட்டா சி-ஹெச்ஆர் என்றால் கூபே ஹைரைடர் , C-HR Stands for Coupe High Rider” theme=”style3″] ஜப்பான் நாட்டில்…
மேம்படுத்தப்பட்ட 2017 ஹோண்டா சிபி ஷைன் மாடலில் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் வசதியுடன் பிஎஸ் 4 மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ற எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் ரூ. விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. 2017 ஹோண்டா சிபி ஷைன் பிஎஸ் 4 மாசு கட்டுப்பாடு விதிமுறைகள் கட்டாயமாகுவதனால் அனைத்து தயாரிப்பாளர்களுமே தங்களுடைய இரு சக்கர வாகனங்களை பிஎஸ் 4 தரத்துக்கு மாற்றி வருகின்றனர். குறிப்பாக பஜாஜ் ஆட்டோ தனது அனைத்து மாடல்களிலும் பிஎஸ் 4 எஞ்சினை பொருத்தியுள்ளது. ஹோண்டா படிப்படியாக தனது மாடல்களில் பிஎஸ்4க்கு மாற்றி வருகின்றது. பிஎஸ் 4 விதிகளுக்கு மாறுவதனால் அனைத்து இருசக்கர வாகனங்களும் ரூ.500 முதல் 1000 வரை விலை உயர்வினை சந்தித்து வருகின்றது. புதிய சிபி ஷைன் மாடலில் பிஎஸ் 4 எஞ்சின் , ஆட்டோ ஹெட்லேம்ப் ஆன் வசதியுடன் , க்ரோம் கவர் பெற்ற மஃப்லர் மற்றும் கார்புரேட்டர் போன்றவைபெற்றுள்ளது. 10.16 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 124.7சிசி…
கடந்த 1997 ஆம் ஆண்டு தொடங்கிய யூரோ என்சிஏபி 20 ஆண்களில் 1200க்கு மேற்பட்ட கார்களை சோதனை செய்து 630க்கு மேற்பட்ட கார்களுக்கு நட்சத்திர மதிப்பீட்டை வழங்கியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் 160 மில்லியன் யூரோ பணத்தை செலவிட்டுள்ளது. யூரோ என்சிஏபி 1997 ஆம் ஆண்டு முதன்முறையாக சோதிக்கப்பட்ட ரோவர் நிறுவனத்தின் ரோவர் 100 மற்றும் 2017 ஆம் ஆண்டில் சோதிக்கப்பட்ட புதிய ஹோண்டா ஜாஸ் என இரண்டு காரினையும் ஒப்பீட்டு வீடியோ பகிர்வு ஒன்றினையும் வெளியிட்டுள்ளது. பாதுகாப்பான கார்கள் என்ற நோக்கத்தை மையமாக கொண்டு செயல்படுகின்ற ஐரோப்பா கிராஷ் டெஸ்ட் மையம் கார்களின் பாதுகாப்பு தன்மை குறித்தான விழிப்புணர்வினை சர்வதேச அரங்கில் வெளிப்படுத்தி வருகின்றது. இதுகுறித்து கிராஷ் டெஸ்ட் மையம் வெளியிட்டுள்ள குறிப்பில் கடந்த 20 ஆண்டுகளில் எவ்வாறு விபத்தின் உயிரிழப்பு குறைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது. 1997 ஆம் ஆண்டு இங்கிலாந்து சாலைகளில் 3977 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. ஆனால் 2015…
டாடா மோட்டர்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள எதிர்கால பயணிகள் வாகன சந்தைக்கு புதிய டாமோ பிராண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல் டாமோ கார் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்படும். மேலும் டாமோ பிராண்டில் ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களும் தயாரிக்கப்பட உள்ளது. டாமோ கார் எதிர்கால மொபிலிட்டி தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் வரவுள்ள டாமொ பிராண்டுகள் மிக சிறப்பான வடிவ தாத்பரியங்களை கொண்டிருப்பதுடன் மிகவும் பவர்ஃபுல்லான கார்களாகவும் விளங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டாமோ என்பதன் விளக்கம் டாடா மொபிலிட்டி ஆகும். (TAMO Stands for Tata Mobility or Tata Motors) வருகின்ற மார்ச் 7 ,2017 ல் நடைபெற உள்ள 87வது ஜெனிவா மோட்டார் ஷோ ஆட்டோமொபைல் கண்காட்சியில் முதல் டாமோ பிராண்ட் கார் மாடல் சர்வதேச அரங்கில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதிய டாமோ ஃப்யூச்ரோ (TAMO Futuro) காரில் இரு இருக்கைகள் கொண்ட ஸ்போர்ட்டிவ் மாடலாக விளங்கும்.…