Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

2017 ஹோண்டா சிபி ஷைன் விற்பனைக்கு வந்தது

by automobiletamilan
பிப்ரவரி 3, 2017
in பைக் செய்திகள்

மேம்படுத்தப்பட்ட 2017 ஹோண்டா சிபி ஷைன் மாடலில் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் வசதியுடன் பிஎஸ் 4 மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ற எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் ரூ. விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

2017 ஹோண்டா சிபி ஷைன்

பிஎஸ் 4 மாசு கட்டுப்பாடு விதிமுறைகள் கட்டாயமாகுவதனால் அனைத்து தயாரிப்பாளர்களுமே தங்களுடைய இரு சக்கர வாகனங்களை பிஎஸ் 4 தரத்துக்கு மாற்றி வருகின்றனர். குறிப்பாக பஜாஜ் ஆட்டோ தனது அனைத்து மாடல்களிலும் பிஎஸ் 4 எஞ்சினை பொருத்தியுள்ளது.  ஹோண்டா படிப்படியாக தனது மாடல்களில் பிஎஸ்4க்கு மாற்றி வருகின்றது.

பிஎஸ் 4 விதிகளுக்கு மாறுவதனால் அனைத்து இருசக்கர வாகனங்களும் ரூ.500 முதல் 1000 வரை விலை உயர்வினை சந்தித்து வருகின்றது. புதிய சிபி ஷைன் மாடலில் பிஎஸ் 4 எஞ்சின் , ஆட்டோ ஹெட்லேம்ப் ஆன் வசதியுடன் , க்ரோம் கவர் பெற்ற மஃப்லர் மற்றும் கார்புரேட்டர் போன்றவைபெற்றுள்ளது.

10.16 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 124.7சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 10.3 என்எம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. எச்இடி நுட்பத்துடன் உள்ள ஷைன் பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 65கிமீ ஆகும்.

முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் பின்புறத்தில் இரண்டு சாக் அப்சார்பர்களை பெற்றுள்ளது. மேலும் முன்பக்கத்தில் 240மிமீ டிஸ்க் பிரேக் /130மிமீ டிரம் பிரேக்  மற்றும் பின்புறத்தில் 130மிமீ டிரம் பிரேக்கினை கொண்டுள்ளது. மேலும் காம்பி பிரேக்கிங் அமைப்பினை டாப் வேரியண்டில் கொண்டுள்ளது.

சிபி ஷைன் பைக்கின் பிரிமியம் மாடலாக சிபி ஷைன் எஸ்பி மாடலும் விற்பனையில் உள்ளது.

Model Ex-Showroom On-Road
சென்னை CB SHINE (SELF-DRUM) ரூ. 58928 ரூ.65792
CB SHINE (SELF-DISC)-CBS ரூ.64270 ரூ.71621
CB SHINE (SELF-DISC) ரூ.61295 ரூ.68375

 

Tags: Honda Bikeசிபி ஷைன்
Previous Post

யூரோ என்சிஏபி : 20 ஆண்டுகால கிராஷ் டெஸ்ட் அனுபவம்

Next Post

டொயோட்டா C-HR எஸ்யூவி இந்தியா வருகை விபரம்

Next Post

டொயோட்டா C-HR எஸ்யூவி இந்தியா வருகை விபரம்

  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version