மீண்டும் 2017 பஜாஜ் பல்ஸர் 200 NS பைக் இந்திய சந்தையில் ரூ.98,374 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் ஆன் மற்றும் பிஎஸ் 4 மாசு கட்டுப்பாடு எஞ்சினை பெற்றுள்ளது. பஜாஜ் பல்ஸர் 200 NS மிகவும் நேர்த்தியான புதிய வண்ணங்களுடன் வந்துள்ள 2017 லேசர் எட்ஜ்டு டிசைன் ஸ்டிக்கரிங் கொண்ட பல்ஸர் 200 என்எஸ் மாடலில் தற்பொழுது வெள்ளை , சிவப்பு மற்றும் கருப்பு என மூன்று விதமான வண்ணங்களில் கிடைக்க உள்ளது. பல்ஸர் NS 200 பைக்கில் 23.1 hp பவரை வெளிப்படுத்தும் 199.5சிசி டிரிப்ள்-ஸ்பார்க் பிஎஸ்4 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 18.3 நியூட்டன் மீட்டர் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் மாடலாகும். முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்பக்கத்தில் மோனோ ஷாக் அப்சார்பருடன் அமைந்திருக்கின்ற பல்ஸர் 200 NS பைக்கின் முன்புற டயரில் 280மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்புற டயரில் 230மிமீ டிஸ்க்…
Author: MR.Durai
2017 பஜாஜ் பல்ஸர் ஆர்எஸ்200 பைக் ரூ.1.23 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் பிஎஸ்4 எஞ்சின் , ஏஹெச்ஓ மற்றும் இரண்டு புதிய வண்ணங்களில் ஆர்எஸ் 200 கிடைக்க உள்ளது. பல்ஸர் ஆர்எஸ்200 பைக் இரட்டை புராஜெக்டர் முகப்பு விளக்குகளுடன் மிக நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்ட பைக் மாடலாக விளங்கும் RS200 பைக்கில் 24.2பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 199.5சிசி பிஎஸ் 4 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது . 6 வேக கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர். மேலும் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் ஆன் வசதியுடன் வந்துள்ளது. முன்புறத்தில் 300மிமீ பட்டர்ஃபிளை டிஸ்க் பிரேக் பின்புறத்தில் 230மிமீ டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் சஸ்பென்ஷன் அமைப்பு, பின்புறத்தில் நைட்ராக்ஸ் மோனோ சஸ்பென்ஷனும் பொருத்தப்பட்டுள்ளது. புதிய நிறங்கள் RS200 பைக் சர்வதேச அளவில் மஞ்சள் , கருப்பு , நீலம் , வெள்ளை மற்றும் நீலம் என 5 நிறங்களில் விற்பனை செய்யப்பட்டாலும் இந்தியாவில் மஞ்சள் மற்றும்கருப்பு வண்ணங்களில் மட்டுமே…
இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்தின் 2017 ஹூண்டாய் கிராண்ட் i10 கார் ரூ. 4.58 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்துள்ள நிலையில் கிராண்ட் ஐ10 கார் பற்றி பல்வேறு முக்கிய விபரங்களை தெரிந்து கொள்ளலாம். 2013 ஆம் ஆண்டில் கிராண்ட் ஐ10 மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து சிறிய அளவிலான மாற்றங்களை பெற்றிருந்த நிலையில் 2017 ஹூண்டாய் கிராண்ட் i10 மாடல் கூடுதலாக பல மாற்றங்களை பெற்றுள்ளது. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் விபரம் 1. டிசைன் 2017 ஹூண்டாய் ஐ10 கார் முதன்முறையாக பாரீஸ் மோட்டார் ஷோ ஆட்டோமொபைல் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியாவில் விற்பனைக்கு வருகின்றது. ஐரோப்பியா வடிவ தாத்பரியங்களை கொண்ட இதே மாடலின் அடிப்படையிலே சில தோற்ற மாற்றங்களை பெற்றதாக இந்தியாவில் வரவுள்ளது. முந்தைய மாடலின் தோற்றத்தில் இருந்து வித்தியாசப்படும் வகையில் கிரில் அமைப்பு , ஹெட்லேம்ப் உடன் இணைந்த பகல் நேர ரன்னிங் விளக்கு…
புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி காரினை அடிப்படையாக கொண்ட கூடுதல் வசதிகளை பெற்றுள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஸ்போர்ட்ஸ் வரையறுக்கப்பட்ட பதிப்பு டாப் வேரியன்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஸ்போர்ட்ஸ் W10 டாப் வேரியன்டை அடிப்படையாக கொண்ட எக்ஸ்யூவி 500 ஸ்போர்ஸ் வேரியன்டில் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் என இரு கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் இடம் பெற்றுள்ளது. ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனுடன் கிடைக்க உள்ளது. ஸ்போர்ட்ஸ் வரையறுக்கப்பட்ட வேரியன்டில் பாடி , பானெட் , ஓஆர்விஎம் போன்றவற்றில் மிக நேர்த்தியாக ஸ்டிக்கரிங் செய்யப்பட்டுள்ளது. சிவப்பு வண்ணத்தை பெற்ற பிரேக் காலிப்பர் , ரூஃப் ரெயில்கள் , கதவு கைப்பிடிகள் , ஃபோக் விளக்கை சுற்றிய போன்ற இடங்களில் பெற்றுள்ளது. மேலும் சிறப்பு ஸ்டைலிஸ் பேட்ஜை சி பில்லரில் பெற்றுள்ளது. 140 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் எம் ஹாக் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 330 என்எம் ஆகும். இதில் 6…
ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வீன் மோட்டார்சைக்கிளில் டாப் வேரியண்ட் மாடலே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆப்பிரிக்கா ட்வீன் பைக்கில் 6 வேக டிசிடி ஆட்டோ பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வீன் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஹோண்டா வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி இந்த வருடத்தின் மத்தியில் இந்திய சந்தைக்கு வரவுள்ள ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வீன் 1000சிசி அட்வென்ச்சர் ரக ஸ்போர்ட்டிவ் பைக்கில் சர்வதேச அளவில் 998சிசி இஞ்ஜின் பெற்று 6 வேக DCT (Dual clutch Transmission ) ஆட்டோ பாக்ஸ் மற்றும் 6 வேக மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. 94 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 998சிசி லிக்யூடு கூல் பேரலல் ட்வீன் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 98 Nm ஆகும். இதில் 6 வேக DCT (Dual clutch Transmission ) ஆட்டோ பாக்ஸ் மற்றும் 6 வேக மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் உயர்ரக வேரியன்ட்…
ஜப்பான் நாட்டில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள 2017 சுசூகி வேகன்ஆர் & ஸ்டிங்கரே கார் படங்கள் தொகுக்கப்பட்டுள்ளது. புதிய HEARTECT பிளாட்பாரத்தில் வடிவமைகப்பட்ட மாடலாக வந்துள்ளது. படங்களை பெரிதாக காண படத்தின் மீது க்ளிக் பன்னுங்க 2017 சுசூகி வேகன்ஆர் கார் படங்கள் [foogallery id=”16323″] 2017 சுசூகி வேகன்ஆர் ஸ்டிங்கரே கார் படங்கள் [foogallery id=”16336″]