ரூ.24,990 விலையில் ஹீரோ ஃப்ளாஷ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃபிளாஷ் மின்சார ஸ்கூட்டரை இயக்குவதற்கு பதிவு மற்றும் டிரைவிங் லைசென்ஸ் தேவையில்லை. ஹீரோ ஃப்ளாஷ் ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஃப்ளாஷ் ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 25 கிமீ வேகத்தில் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 65 கிமீ தொலைவு வரை பயணிக்கும் வகையிலான பேட்டரியின் திறனை வழங்குகின்றது. ஹீரோ ஃப்ளாஷ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 250 வாட் மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. பிளாஷ் ஸ்கூட்டரில் 48V/20AH VRLA மின்கலன் பொருத்தப்பட்டுள்ளது. மின்கலனை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 6 முதல் 8 மணிநேரம் வரை தேவைப்படும். 87 கிலோஎடை கொண்டுள்ள இந்த ஸ்கூட்டரில்எதிர்பாராமல் விபத்து ஏற்படும் சமயங்களில் மின்சார கசிவு ஏற்படாத வகையில் பேட்டரியில் இருந்து மின் இணைப்பினை துண்டிக்கும் வகையிலான சிறப்பு நுட்பத்தினை பெற்றுள்ளது. முதற்கட்டமாக 2000 அலகுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ள ஃபிளாஷ் ஸ்கூட்டர்கள் செய்யப்பட…
Author: MR.Durai
இந்தியாவின் பிரபல ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர் கவுதம் சென் எழுதிய மேஸ்ட்ரோ ஆஃப் டிசைன் : மார்செல்லோ காந்தினி புத்தகத்திற்கு 2016 ஆம் ஆண்டின் மிக அழகான புத்தகம் விருதினை வென்றுள்ளது. மேஸ்ட்ரோ ஆஃப் டிசைன் சில நாட்களுக்கு முன்னதாக பாரீஸ் நகரில் நடைபெற்ற 32வது சர்வதேச ஆட்டோமொபைல் விழாவில் புகழ்பெற்ற அட்டோமொபைல் பத்திரிக்கையாளரான கவுதம் சென் எழுதிய மேஸ்ட்ரோ ஆஃப் டிசைன் : மார்செல்லோ காந்தினி 2016 ஆம் ஆண்டின் மிகவும் அழகான புத்தகம் என்ற விருதினை வென்றுள்ளது. இந்த புத்தகம் உலக புகழ்பெற்ற இத்தாலி கார் டிசைன் மார்செல்லோ காந்தினி பற்றி சுமார் 800 பக்கங்களுக்கு அவருடைய வடிவமைத்த கார்களை பற்றிய புத்தகமாகும். இரண்டு தொகுதிகளை கொண்டுள்ள புத்தகம் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பக்கங்களை பெற்று 924 படங்களுடன் , 100க்கு மேற்பட்ட கார்களின் வடிவங்களை பற்றி விபரங்களை கொண்டதாகும். மார்செல்லோ காந்தினி வடிவமைப்பில் புகழ்பெற்ற கார்களான லம்போர்கினி மியுரா , கவுன்டச் மற்றும் டையப்லோ…
இந்தியாவின் மஹிந்திரா ஆட்டோமொபைல் குழுமத்தின் அங்கமான சாங்யாங் நிறுவனம் உலகின் முதன்முறையாக தொடுதல் மூலம் திறக்கும் வகையிலான கார் கதவுகளை உருவாக்கியுள்ளது. டச் விண்டோ தொடுதிரை கொண்ட ஸ்மார்ட்போன்களை போல தொட்டாலே திறக்கும் வகையிலான கதவுகளை சாங்யாங் மாடல்கள் இந்த வருடத்தின் இறுதியில் பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் மற்றும் பயணிகள் கார்களில் அமரவோஅல்லது வேளியேறும் பொழுதோ கைகளில் தொட்டாலோ கார் கதவுகள் தானாகவே திறந்து கொள்ளும். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சாங்யாங் பிரிவு தலைவர் சோய் ஜாங் சிக் கூறுகையில் சாங்யாங் தொடர்ந்து அடுத்த தலைமுறைக்கான சேவையை வழங்குவதில் முன்னரிமை அளிக்கும் வகையிலான புத்தாக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். இந்த நுட்பம் வரவுள்ள புதிய தலைமுறை சாங்யாங் ரெக்ஸ்டான் காரில் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது. மேலும் இதனை இந்திய சந்தையில் மஹிந்திராவின் பிரிமியம் எஸ்யூவி ரக மாடலில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான டொயோட்டா மற்றும் சுஸூகி நிறுவனமும் இணைந்து எதிர்கால ஆட்டோமொபைல் சந்தைக்கு ஏற்ற பாதுகாப்பு அம்சங்கள் , நுட்பங்களை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு மெகா கூட்டணியை அமைத்துள்ளனர். டொயோட்டா-சுஸூகி டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன் மற்றும் சுஸூகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனங்களுக்கு இடைய ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வாயிலாக எதிர்கால ஆட்டோமொபைல் சந்தைக்கு ஏற்ற பாதுகாப்பு அம்சங்கள் , சுற்றுச்சூழல் சார்ந்த அம்சங்கள் மேலும் இரு நிறுவனங்களும் மாடல்கள் மற்றும் உதிரிபாகங்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் ஒப்பந்தத்தை வகுத்துள்ளது. இரு நிறுவனங்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள உடன்படிக்கையின் வாயிலாக மிகவும் சவாலான விலையில் ஹைபிரிட் மாடல்கள் மற்றும் பாதுகாப்பு சார்ந்த அம்சங்களை மேம்படுத்தப்படலாம் என கருதப்படுகின்றது. இதுகுறித்து கருத்து தெரிவித்த டொயோட்டா தலைவர் அகியோ டொயோடா (Akio Toyoda) சுஸூகி நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவது நல்லதொரு வாய்ப்பாக அமைந்துள்ள நிலையில் நன்றி தெரிவிப்பதுடன் இந்த கூட்டணி வாயிலாக கூடுதலாக பல தகவல்களை டொயோட்டா கற்கவும் , சிறப்பான…
வருகின்ற மார்ச் 7ந் தேதி சர்வதேச அளவில் 2017 ஜெனிவா மோட்டார் ஷோ வாயிலாக டாமோ ஃப்யூச்சரோ ஸ்போர்ட்ஸ் கான்செப்ட் கார் மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. டாடா ஃப்யூச்சரோ கார் விற்பனைக்கு 2018 தொடக்க மாதங்களில் வரவுள்ளது. டாடாவின் புதிய துனை நிறுவனமாக களமிறங்கியுள்ள டாமோ பிராண்டில் ஸ்போர்ட்ஸ் மற்றும் பிரிமியம் ரக மாடல்களை தயாரிக்க டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது. முதல் கான்செப்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள ஃப்யூச்சரோவில் உள்ள சில முக்கிய வசதிகளை பார்க்கலாம். டாமோ ஃப்யூச்சரோ ரூ. 25 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகின்ற ஃப்யூச்சரோ (TAMO Futuro) மிட் என்ஜின் ஸ்போர்ட்டிவ் காரில் இரண்டு இருக்கை ஆப்ஷனுடன் டாடாவின் ரெவோட்ரான் 1.2 லிட்டர் ட்வீன் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கலாம். இதன் பவர் அதிகபட்சமாக 180 ஹெச்பி வரை வெளிப்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. <!–nextpage–> ஃப்யூச்சரோ காரின் வடிவ தாத்பரியங்களில் மிகுந்த கவனம் செலுத்தும் நோக்கில் புகழ்பெற்ற கார்…
ரூபாய் விலையில் ஹோண்டாவின் புதிய சிட்டி கார் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. 2017 சிட்டி காரில் தோற்ற மாற்றங்கள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் எஞ்சினில் எந்த மாற்றங்களும் இல்லாமல் வந்துள்ளது. சமீபத்தில் தாய்லாந்து , மலேசியா போன்ற சந்தைகளில் விற்பனைக்கு வெளியிடப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் ஹோண்டா சிட்டி கார் டீலர்களிடம் வர தொடங்கி விட்டது. கூடுதலான வசதிகளுடன் எஞ்சின் பவரில் மாற்றங்கள் இல்லாமல் வரக்கூடும். புதிய சிட்டி கார் விபரம் 1. டிசைன் நவீன சிவிக் காரின் டிசைன் தாத்பரியங்களை பெற்று மிக நேர்த்தியான க்ரோம் பூச்சூ கிரிலை பெற்று அதன் மத்தியில் ஹோண்டா லோகோ பதிக்கப்பட்டுள்ளது. புதிதாக இணைக்கப்பட்டுள்ள டாப் வேரியன்டில் மிக நேர்த்தியான எல்இடி ஹெட்லேம்ப் , பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்குகள் , காரின் பக்கவாட்டில் முந்தைய 15 அங்குல அலாய் வீலுக்கு மாற்றாக புதிய வடிவம் கொண்ட 16 அங்குல அலாய் வீல் , நேர்த்தியாக…