ரூபாய் 56 லட்சம் விலையில் ஜீப் ரேங்கலர் பெட்ரோல் எஸ்யூவி மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5 கதவுகளை கொண்ட ரேங்கலர் அன்லிமிடேட் மாடலின் அதிகபட்ச பவர் 285 ஹெச்பி ஆகும். ஜீப் ரேங்கலர் பெட்ரோல் ஆல் வீல் டிரைவ் ஆட்டோமேட்டிக் சிஸ்டத்துடன் 3.8 லிட்டர் வி6 பென்டாஸ்டார் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனுடன் அதிகபட்சமாக 285 ஹெச்பி பவர் , 247 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதில் 5 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கிடைக்கும். பல்வேறு ஆஃப் ரோடு அம்சங்களை பெற்றுள்ள ரேங்கலர் மாடலில் கமெண்ட் டிராக் 4 வீல் டிரைவ் அமைப்பு , எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் (ESC), ஹெவி டூட்டி சஸ்பென்ஷன் சாக்அப்சார்பர் , ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் (Hill Start Assist -HSA) உடன் எலக்ட்ரானிக் ரோல் மைகிரேஷன் மற்றும் ரிமோட் கிலெஸ் என்ட்ரி போன்றவற்றை பெற்றுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக இந்திய சந்தையில் டீசல் ஜீப்…
Author: MR.Durai
அடுத்த சில வாரங்களில் டாடா மோட்டார்சின் டாடா டிகோர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது. டிகோர் செடான் ரக மாடலானது டியாகோ காரினை அடிப்படையாக கொண்டதாகும். டெல்லி ஆட்டோ எக்ஸ்போ வாயிலாக காட்சிக்கு வந்த டிகோர் செடான் மாடல் மிகவும் சவாலான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. டியாகோ காரின் பெரும்பாலான அம்சங்களை டிகோர் காரும் பெற்றிருக்கும். டாடா டிகோர் முக்கிய விபரங்கள் 1. டிசைன் இம்பேக்ட் டிசைன் வடிவ தாத்பரியங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள டியாகோ காரின் தோற்றத்திலே அமைந்திருக்கும் கைட் 5 மாடலில் கூடுதலாக பூட் மட்டும் இணைக்கப்பட்டிருக்கும். 2. இன்டிரியர் டியாகோ காரின் இன்டிரியர் அமைப்பினையே பெற்றிருக்கும் கைட்5யில் கனெக்ட்நெக்ஸ்ட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இருக்கலாம்.இவற்றில் உள்ள வசதிகளில் முக்கியமானவை ஜூக் கார் ஆப் ஸ்மார்ட் போன் டர்ன் பை டர்ன் நேவிகேஷன் ஆப் பூளூடூத் , யூஎஸ்பி , ஆக்ஸ் தொடர்புகள் ரியர் பார்க்கிங் சென்சார் கியர் ஷிஃப்ட் இன்டிகேட்டர்…
ரஷ்யா சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 2017 ஹூண்டாய் வெர்னா கார் (ஹூண்டாய் சோலரீஸ்) தோற்ற மாற்றங்களுடன் பல்வேறு வசதிகளுடன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட வெர்னா மாடலை போன்ற அமைந்துள்ளது. இந்தியாவில் புதிய வெர்னா கார் வருடத்தின் இறுதியில் விற்பனைக்கு வரலாம். ஹூண்டாய் வெர்னா கார் ரஷ்யாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹூண்டாய் சோலரீஸ் கார் சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட மாடலை போன்ற தோற்ற அமைப்புடன் கூடுதலாக சில வசதிகளை பெற்று விளங்குகின்றது. முன்புறத்தில் க்ரோம் பூச்சூ கொண்ட பம்பர் பட்டைகள் , பனி விளக்கு அறை போன்றவற்றுடன் பக்கவாட்டில் சிறிய அளவிலான புராஃபைல் மாற்றங்களுடன் , புதிய வடிவத்தினை பெற்றுள்ள அலாய் சக்கரங்கள் , பின்புறத்தில் புதிய பம்பர் ,டெயில் விளக்கில் சிறிய மாறுபாடுகளை கொண்டுள்ளது. இன்டிரியர் அமைப்பில் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆதரவு போன்றவற்றுடன் பல்வேறு வசதிகளை பெற்று ஏபிஎஸ் இஎஸ்பி , முன்பக்க…
வருகின்ற 2017 கோடை காலத்தில் (மே) இந்திய சந்தையில் டெஸ்லா மின்சார கார்கள் விற்பனை வருவதனை டிவிட்டர் வாயிலாக டெஸ்லா தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் உறுதிப்படுத்தியுள்ளார். டெஸ்லா இந்தியா சர்வதேச அளவில் மிக வேகமாக மின்சார கார்தயாரிப்பில் வளர்ந்து வரும் டெஸ்லா நிறுவனம் இந்தியா வருகை குறித்தான கேள்விக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ள செய்தியில் ”Hoping for summer this year ” என குறிப்பிட்டுள்ளார். ஆரம்பகட்டத்தில் உள்ள இந்தியா மின்சார கார்களுக்கான துறையில் மஹிந்திரா நிறுவனம் சிறிய ரக கார்கள் மற்றும் இலகுரக வர்த்தக வாகனங்களை விற்பனை செய்து வருகின்றது. உலகயளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் டெஸ்லா மாடல் 3 கார் பல்வேறு நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது. வருகின்ற 2018 ஆம் ஆண்டு முதல் முழு உற்பத்தியை தொடங்க உள்ள டெஸ்லாவின் ஜிகா ஃபேக்ட்ரி வாயிலாக கட்டமைக்கப்பட்ட கார்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.…
ரூபாய் 47.98 லட்சம் விலையில் மேம்படுத்தப்பட்ட ஆடி ஏ3 கேப்ரியோ மாடல் கூடுதல் வசதிகளுடன் புதிய 1.4 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. புதிய ஆடி ஏ3 கேப்ரியோ 150 ஹெச்பி பவரை வெளிப்படுத்துகின்றது. ஆடி ஏ3 கேப்ரியோ 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 148 bhp பவரையும், 250 NM டார்க் வெளிப்படுத்தும். 7 வேக டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் நோக்கில் சிலிண்டர்களின் தேவைக்கேற்ப எரிபொருளை வழங்கும் Cylinder on Demand (COD) அமைப்பினை பெற்று விளங்குவதனால் A3 கேப்ரியோலே ஒரு லிட்டருக்கு 19.20 கிமீ மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்இடி ஹெட்லைட்டுகள், பகல்நேர ரன்னிங் விளக்குகள் போன்றவற்றுடன் சாஃப்ட் டாப் எனப்படும் துணியால் ஆன கூரை திறந்து மூடும் கூரை அமைப்பு உள்ள ஏ3 மாடலில் 7 அங்குல தொடுதிரை MMI இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , சாட்டிலைட் நேவிகேஷன் , பேங்…
ரூபாய் 1.27 கோடி விலையில் போர்ஷே கேயேன் S பிளாட்டினம் பதிப்பு மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரு எஞ்சின் ஆப்ஷன்களிலும் கேயேன் எஸ் வந்துள்ளது. போர்ஷே கேயேன் S விற்பனையில் உள்ள சாதரன கேயேன் மாடலை விட கூடுதலாக பலவேறு வசதிகளை கொண்டுள்ள எஸ் பிளாட்டினம் மாடின் டீசல் வேரியன்டில் 4,134cc ட்வீன் டர்போ 8 சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பவர் 380 bhp மற்றும் 850Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. பெட்ரோல் மாடலில் 3,604cc ட்வீன் டர்போ 8 சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பவர் 414 bhp மற்றும் 550Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. பை-ஸெனான் ஹெட்லேம்ப் பெற்று விளங்கும் கேயேன் S மாடலில் 21அங்குல அலாய் சக்கரம் வீல் ஆர்ச் ,பாடி கிளாடிங் போன்றவற்றுடன் கருப்பு, மஹோகனி , சில்வர்…