உலகின் முதல் டச் கதவுகளை பெறும் சாங்யாங்

இந்தியாவின் மஹிந்திரா ஆட்டோமொபைல் குழுமத்தின் அங்கமான சாங்யாங் நிறுவனம் உலகின் முதன்முறையாக தொடுதல் மூலம் திறக்கும் வகையிலான கார் கதவுகளை உருவாக்கியுள்ளது.

டச் விண்டோ

தொடுதிரை கொண்ட ஸ்மார்ட்போன்களை போல தொட்டாலே திறக்கும் வகையிலான கதவுகளை சாங்யாங் மாடல்கள் இந்த வருடத்தின் இறுதியில் பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் மற்றும் பயணிகள் கார்களில் அமரவோஅல்லது வேளியேறும் பொழுதோ கைகளில் தொட்டாலோ கார் கதவுகள் தானாகவே திறந்து கொள்ளும்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சாங்யாங் பிரிவு தலைவர் சோய் ஜாங் சிக் கூறுகையில் சாங்யாங் தொடர்ந்து அடுத்த தலைமுறைக்கான சேவையை வழங்குவதில் முன்னரிமை அளிக்கும் வகையிலான புத்தாக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்த நுட்பம் வரவுள்ள புதிய தலைமுறை சாங்யாங் ரெக்ஸ்டான் காரில் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது. மேலும் இதனை இந்திய சந்தையில் மஹிந்திராவின் பிரிமியம் எஸ்யூவி ரக மாடலில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Recommended For You