புதிய தலைமுறை சாங்யாங் G4 ரெக்ஸ்டான் எஸ்யூவி மாடல் சியோல் மோட்டார் ஷோ அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மஹிந்திராவின் புதிய பிரிமியம் எஸ்யூவி மாடல் ரெக்ஸ்டான் மாடலை அடிப்படையாக கொண்டதாக இருக்கும்.

ரெக்ஸ்டான் எஸ்யூவி

  • தென்கொரியாவில் நடைபெறுகின்ற சியோல் மோட்டார் ஷோ அரங்கில் புதிய ரெக்ஸ்டான் அறிமுகம்
  • மஹிந்திரா எக்ஸ்யூவி700 மாடல் இதன் அடிப்படையிலே அமைந்திருக்கும்.
  • ஃபார்ச்சூனர், எண்டேவர், போன்ற மாடல்களுக்கு சவாலாக விளங்கும்.

தென்கொரியா சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள புதிய ரெக்ஸ்டான் எஸ்யூவி மாடலில் சர்வதேச அளவில் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வரவுள்ளது. ஆனால் இந்திய சந்தையில் மேம்படுத்தப்பட்ட புதிய ரெக்ஸ்டான் விற்பனைக்கு வராது என மஹிந்திரா உறுதிப்படுத்தியுள்ளது.

புதிதாக சாங்யாங் பிராண்டு லோகோ மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் LIV-2 கான்செப்ட் மாடலின் வடிவ தாத்பரியங்களின் முக்கிய அம்சங்களை பெற்றுள்ள புதிய ரெக்ஸ்டான் மாடலில் முன், பின்பக்க பம்பர் புதுப்பிக்கப்பட்டிருப்பதுடன் , புதிய அலாய் வீல் , பாடி வண்ண கிளாடிங் போன்றவற்றில் பல மாற்றங்களை பெற்று மிக நேர்த்தியாக அமைந்துள்ளது.

இன்டிரியர் அமைப்பில் பல புதிய வசதிகள் பெற்றிருப்பதுடன் இரு வண்ண கலவையிலான டேஸ்போர்டினை பெற்றிருப்பதுடன் 9.2 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆப்பிள் கார் பிளே , ஆண்ட்ராய்டு மிரர்ரிங் வசதி , 3டி முறையில் வாகனத்தை சுற்றி கண்கானிக்கும் வகையிலான கேமராவை பெற்றுள்ளது. 2.2 லிட்டர் என்ஜினை பெற்றுள்ள எஸ்யூவி மாடலின் ஆற்றல் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

இந்தியாவில் புதிய மஹிந்திரா ரெக்ஸ்டான்

புதிய தலைமுறை ரெக்ஸ்டான் எஸ்யூவி காரை அடிப்படையாக கொண்ட புதிய பிரிமியம் எஸ்யூவி மாடல் மிகவும் சவாலான விலையில் பல்வேறு நவீன வசதிகளுடன் எக்ஸ்யூவி 500 எஸ்யூவி மாடலுக்கு மேலாக ஃபார்ச்சூனர், எண்டேவர், டிகுவான் போன்ற எஸ்யூவிகளுக்கு சவாலான ஏற்படுத்தும் வகையிலான மாடலாக எக்ஸ்யூவி 700 அல்லது வேறு ஏதேனும் புதிய பெயரில் 2.2 லிட்டர் டீசல் என்ஜினை பெற்றதாக வரவுள்ளது.