இந்திய வர்த்தக வாகன தயாரிப்பாளரான அசோக் லேலண்ட் நிறுவனத்தின் புதிய பார்ட்னர் மற்றும் குரு என இரு டிரக் மாடல்கள் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. பார்ட்னர் டிரக் எல்சிவி பிரிவிலும் குரு டிரக் ஐசிவி பிரிவிலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் நிசான் மற்றும் அசோக் லேலண்டின் எல்சிவி கூட்டணி பிரிவுக்கு பின்னர் அறிமுகம் செய்யப்பட்டுள்ள முதன்முறையாக எல்சிவி (Light Commercial Vehicle – LCV) மற்றும் ஐசிவி (intermediate commercial vehicle – ICV) ) ரகத்தில் டிரக்குகள் வெளிவந்துள்ளன. இந்த இரு மாடல்களுமே நாடு முழுவதும் உள்ள 375 அசோக் லைலண்டு டீலர்கள் வாயிலாக உடனடியாக விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அசோக் லேலண்ட் பார்ட்னர் 7 டன் வரையிலான தொடக்க நிலை எல்சிவி பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பார்ட்னர் டிரக்கின் எடை தாங்கும் திறன் 6.9 டன்லிருந்து 7.2 டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் 105 ஹெச்பி பவர்…
Author: MR.Durai
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரில் கூடுதல் வசதிகளை கொண்ட ஈக்கோஸ்போர்ட் பிளாட்டினம் எடிசன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பதிப்பில் 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பினை பெற்றுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிளாட்டினம் எடிசனில் மேற்கூரை கருப்பு வண்ணம் , 17 அங்குல அலாய் வீல் , முன் மற்றும் பின் பம்பர்களில் அப்லிக்யூஸ் மற்றும் 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் நேவிகேஷன் அமைப்பு , ரியர் வியூ கேமரா போன்றவற்றை பெற்றுள்ளது. 125 பிஎஸ் பவர் மற்றும் 170 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் என்ஜின் மற்றும் 100 பிஎஸ் பவர் மற்றும் 2015 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் TDCi எஞ்சின் மாடலிலும் இந்த வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த இரண்டிலும் 5 வேக மேனுவல்கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. ஆட்டோமேட்டிக் வேரியன்டில்பிளாட்டினம் எடிசன் அறிமுகம் செய்யப்பட வில்லை. சாதரன டைட்டானியம் ப்ளஸ் வேரியன்ட் மாடலை விட ரூ .…
மேம்படுத்தப்பட்ட கேடிஎம் ஆர்சி 200 மற்றும் ஆர்சி 390 பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. பிஎஸ்4 மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ற மாடலாக இரு கேடிஎம் ஆர்சி பைக்குகளும் வந்துள்ளது. ஃபுல் ஃபேரிங் மாடல்களான இரு பைக்குகளும் சிறிய அளவிலான ஸ்டைல் மாற்றங்களுடன் கூடுதலான வசதிகளை பெற்று வந்துள்ளது. மேலும் அடுத்த சில நாட்களிலே நாடு முழுவதும் டெலிவரி தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017 கேடிஎம் RC 200 புதிய கேடிஎம் ஆர்சி 200 பைக்கில் நேர்த்தியான புதிய கிராபிக்ஸ் மற்றும் வண்ணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. எஞ்சினில் எந்த மாற்றங்களும் இடம்பெறவில்லை. முன்பக்க டயரின் பிரேக் 20மிமீ அதிகரிக்கப்பட்டு தற்பொழுது 300மிமீ அகலத்தை பெற்றுள்ளது. 25 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 199சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு 19.2 என்எம் டார்க் வெளிப்படுத்துகிற்றது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. 2017 கேடிஎம் RC 390 மிக நேர்த்தியான புதிய பாடி கிராபிக்ஸ் மற்றும் கேடிஎம்…
புதுப்பிக்கப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் காரை இந்திய குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜி சற்று முன் அறிமுகம் செய்துள்ளார். வீட்டு காவிலில் இருந்த பொழுது தப்பி செல்வதற்கு பயன்படுத்திய 4 கதவுகளை கொண்ட ஜெர்மன் வான்டேரர் செடான் காரினை பயன்படுத்தினார். நேதாஜி அவர்களை வீட்டு காவலில் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள கோல்கத்தாவில் அடைத்திருந்த நிலையில் 1941 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மாறுவேடத்தில் தப்பிசென்றார். நேதாஜி தப்பிசெல்ல அவரது உறவினர் சிசார் போஸ் என்பவர் உதவி செய்துள்ளார். இந்த காரை நேதாஜி கோல்கத்தா முதல் கோமோ வரை ஓட்டிசென்று தப்பித்துள்ளார். நேதாஜி கார் BLA 7169 என்ற பதிவெண்ணை கொண்டுள்ள 4 டோர் ஜெர்மன் வான்டேரர் காரின் பெயின்ட் , பழைய பாகங்களை மாற்றி புதிய பாகங்களை சேர்ப்பது போன்றவற்றை புதுப்பித்து குறைந்த தூரத்தில் மட்டும் அதாவது 100 மீட்டர் முதல் 200 மீட்டர் வரை இயக்கும் வகையில் மறுஉருவாக்கம் செய்யப்படுதவதாக நேதாஜி ஆராய்ச்சி அமைப்பு…
இந்தியாவின் முன்னணி எம்பிவி ரக கார் மாடலான டொயோட்டா இனோவா காருக்கு போட்டியை தருகின்ற வகையில் டாடா ஹெக்ஸா கார் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. டாடா ஹெக்ஸா Vs டொயோட்டா இனோவா க்ரிஸ்டா என இரண்டு கார்களின் ஒப்பீட்டு சிறப்பு தகவல்களை தெரிந்து கொள்ளலாம். டிசைன் டாடாவின் ஆரியா காரின் அடிப்படையில் டாடா நிறுவனத்தின் புதிய இம்பேக்ட் டிசைன் வடிவ மொழியில் ஹெக்ஸா கார் பல்வேறு நவீன டிசைன் அம்சங்களுடன் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. டொயோட்டாவின் சர்வதேச TNGA பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய இனோவா க்ரிஸ்டா மாடல் நேர்த்தியான அம்சங்களுடன் உறுதியான கட்டமைபினை பெற்றுள்ளது. இரு மாடல்களுமே ஒன்றுக்கு ஒன்று சளைத்ததில்லை என்பதற்கு ஏற்ப மிக சிறப்பான தோற்றத்துடன் புராஜெக்டர் ஹெட்லேம்ப் வசதியுடன் இணைந்த பகல் நேர ரன்னிங் விளக்குகள் பெற்றுள்ளது. தேன்கூடு கிரில் அமைப்புடன் விளங்கும் ஹெக்ஸா கார் டாடாவின் கார்களுக்கு உரித்தான புதிய வடிவமொழியுடன் அழகாக காட்சியளிக்கின்றது. கம்பீரமான தோற்றத்தை வெளிப்படுத்தும்…
ரிலையன்ஸ் ஜியோ என்ற பெயரில் 4ஜி சேவையை வழங்கி வருகின்ற ரிலையன்ஸ் நிறுவனம் தற்பொழுது ஆட்டோமொபைல் சார்ந்த டெலிமேட்டிக்ஸ் சேவையை வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜியோ கார் ஜியோ 4ஜி சேவையில் ஜியோ ம்யூசிக் , ஜியோ நியூஸ் போன்றவற்றை போல ஜியோ கார் என்ற பெயரில் ஆப்ஸ் ஒன்றை உருவாக்கி வருவதாகவும் இதன் வாயிலாக ஜியோ வாடிக்கையாளர்கள் தங்களுடைய கார்களில் ஆட்டோமொபைல் சார்ந்த ஜியோ டெலிமேட்டிக்ஸ் கருவியை இணைத்து கொண்டால் காரின் எரிபொருள் அளவு , கார் இருப்பிடம் , கார் வேகம் , காரினை கட்டுப்படுத்தும் அமைப்புகள் , வைபை போன்ற பல சேவைகளை இந்த டெலிமேட்டிக்ஸ் வழங்கும். ஜியோ சிம் கொண்டு இயங்கும் வகையில் இந்த கருவியை ரிலையன்ஸ் வடிவமைத்து வருகின்றது. இதன் மூலம் வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனத்தின் பல்வேறு தகவல்களை விரைவாகவும் துள்ளியமாகவும் பெற வாய்ப்புகள் உள்ளது. இந்த கருவி விலையை ஜியோஃபை போன்றே…