மகேந்திரா & மகேந்திரா நிறுவனத்தின் 4 மீட்டருக்கு குறைவான மாடலாக வெளிவந்த மகேந்திரா டியூவி 300 எஸ்யூவி காரை சில கஸ்டமைஸ் மாறுபாடுகளை பெற்று ஜீப் பிராண்டு எஸ்யூவி கார் போன்ற உருவத்தை பெற்றுள்ளது. மகேந்திரா டியூவி300 டாங்கி தோற்றத்தினை உந்துதலாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள டியூவி 300 காரானது மிக நேர்த்தியான மஹிந்திரா நிறுவனத்துகே உரித்தான பாக்ஸ் ஸ்டைல் வடிவமைப்பில் 5+2 என 7 இருக்கைகளுடன் சிறப்பான வசதிகளுடன் எம்ஹாக்80 1.5 லிட்டர் 3 சிலிண்டர் கொண்ட 84பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 230என்எம் ஆகும். இதில் 5 வேக மெனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கின்றது. எம் ஹாக்100 102 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 240 Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் தவிர ஆட்டோமேட்டிக் மெனுவல் கியர்பாக்சினை பெற்றுள்ளது. இதன் மைலேஜ் லிட்டருக்கு…
Author: MR.Durai
புதிதாக பைக் வாங்கியபொழுது இருந்த பிக்அப் நாளுக்குநாள் குறைகின்றதா ? சர்வீஸ் செய்த பிறகு கிடைத்த பிக்அப் சில வாரங்களிலே குறைகின்றதா ? என்ன காரணம் பிக்அப் எவ்வாறு அதிகரிக்கலாம்…. பைக்கில் பிக்அப் குறைவதற்க்கான முக்கிய காரணமே முறையற்ற பராமரிப்பு , எரிபொருள் , என்ஜின் ஆயில் போன்றவை ஆகும். பைக்கில் பிக்அப் சிறப்பான முறையில் கிடைக்க என்ன செய்யலாம். 1. காற்று பில்டர் காற்று பில்டர் தூய்மையாக இல்லையெனில் சிறப்பான பிக்அப் கிடைக்காது. புழுதிகள் மற்றும் தூசுகள் காற்று பில்டரில் அதிகமாக அடைத்திருந்தால் என்ஜினுக்கு தேவை காற்றினை உறிஞ்சும்பொழுது காற்றின் அளவு சிறப்பாக இல்லை என்றால் பிக்அப் எதிர்பார்க்க முடியாது. எனவே ஒவ்வொரு 1000 கிமீக்கு ஒருமுறை காற்று பில்டரை சுத்தம் செய்து பயன்படுத்துங்கள். தேவை ஏற்பட்டால் பில்டரை மாற்றிவிடுங்கள். 2. எரிபொருள் தரம் பெட்ரோல் அடிக்கும்பொழுது முடிந்தவரை ஒரே பெட்ரோல் நிலையத்தினை பயன்படுத்துங்கள். சிறப்பான பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல்…
பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் தேர்வுகளில் விற்பனைக்கு வந்த புதிய தலைமுறை டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி 10,000த்திற்கும் அதிகமான முன்பதிவுகளை பெற்று 2 முதல் 3 மாதம் வரையில் காத்திருப்பு காலம் அதிகரித்துள்ளது. இந்திய சந்தையில் 2009 ஆம் ஆண்டில் முதன்முறையாக விற்பனைக்கு வந்த ஃபார்ச்சூனர் 1 லட்சம் எஸ்யூவி கார்களை விற்பனை சாதனையை கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக பதிவு செய்திருந்தத்து. ஃபார்ச்சூனர் எஞ்சின் 2.8 லிட்டர் ஜிடி என்ஜினை பெற்று வெளிப்படுத்தும் ஆற்றல் 177 hp மற்றும் டார்க் 420Nm ஆகும். இதில் 6 வேக மெனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பிடித்துள்ளது. மேலும் 2WD மற்றும் 4WD என இருவிதமான டிரைவ் ஆப்ஷனிலும் கிடைக்கின்றது. 2.7 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றல் 166 hp மற்றும் டார்க் 245Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பிடித்துள்ளது. மேலும்…
அட்வென்ச்சர் ரக பைக் பிரிவில் வரவுள்ள கேடிஎம் அட்வென்ச்சர் 390 பைக் இந்தியாவிலே தயாரிக்கப்பட உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய 390 அட்வென்ச்சர் பைக் ஆனது டியூக் 390 பைக்கினை அடிப்படையாக கொண்டதாகும். 390 அட்வென்ச்சர் நேற்று விற்பனைக்கு வெளியிடப்பட்ட 2017 கேடிஎம் ஆர்சி390 மற்றும் ஆர்சி200 அறிமுகத்தின் பொழுது புத்தம் புதிய கேடிஎம் அட்வென்ச்சர் ரக மாடல் இந்தியாவிலே தயாரிக்கப்பட்டு விரைவில் விற்பனைக்கு வரும் என பஜாஜ் ஆட்டோ நிர்வாக இயக்குநர் ராஜீவ் பஜாஜ் தெரிவித்துள்ளார். கேடிஎம் நிறுவனம் மூன்று உயர்ரக அட்வென்ச்சர் மாடல்களை விற்பனை செய்து வருகின்றது. அவை கேடிஎம் 950 அட்வென்ச்சர் , கேடிஎம் 1190 அட்வென்ச்சர் மற்றும் கேடிஎம் 1290 அட்வென்ச்சர் போன்றவை ஆகும். இந்த பைக்குகளின் வடிவ தாத்பரியத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டு வரும் சிறிய ரக அட்வென்ச்சர் மாடல் பல்வேறு கட்ட தீவர சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் இதில் 2017 டியூக் 390 பைக்கில் இடம்பெற்றுள்ள அதே எஞ்சின்…
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் டிவிஎஸ் அகுலா 310 ஃபேரிங் பைக் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. வருகின்ற பிப்பரவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்துக்கு இடையில் விற்பனைக்கு வரவுள்ளது. அப்பாச்சி 300 பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக்கினை அடிப்படையாக கொண்ட இந்த மாடல் அப்பாச்சி 300 என அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது அல்லது மாற்றாக புதிய பிராண்டிலோ வரவதற்கு வாய்ப்புகள் உள்ளது. முழுதும் கார்பன் ஃபைபர் பாடியால் வடிவமைக்கப்பட அகுலா 310 மாடலில் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ள 34 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் இழுவைதிறன் 28Nm ஆகும். முழுதும் அலங்கரிக்கப்பட்ட மாடலாக வரவுள்ள அகுலா 310 மாடல் பிஎம்டபிள்யூ -டிவிஎஸ் கூட்டணியில் உருவாக்கப்பட உள்ள இந்த மாடல் ஓசூர் ஆலையில் தயாரிக்கப்பட உள்ளது. கேடிஎம் ஆர்சி390 , யமஹா ஆர்3 மற்றும் கவாஸாகி நின்ஜா 300 போன்ற பைக்குகளுடன் போட்டியிடும் வகையில் இந்த…
சிறிய ரக மைக்ரோ எஸ்யூவி மாடலாக விளங்கும் மஹிந்திரா கேயூவி 100 மாடலின் அனிவெர்ஸரி பதிப்பின் விபரங்கள் வெளியாகியுள்ளது. இரு வண்ண கலவையில் கேயூவி100 கிடைக்க உள்ளது. மேம்பட்ட வசதிகளுடன் வரவுள்ள புதிய கேயூவி100 காரில் கருப்பு வண்ண மேற்கூரையை சில்வர் மற்றும் சிவப்பு வண்ண மாடல்களில் மட்டுமே இரு வண்ண கலவையிலான தோற்ற பொலிவுடன் மிக நேர்த்தியான மாடலாக விளங்க உள்ளது. புதிய 15 அங்குல அலாய் வீல் , கருப்பு வண்ணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள இன்டிரியரை பெற்று விளங்கும். சமீபத்தில் வெளியான தகவலின் அடிப்படையில் பெட்ரோல் எஞ்சின் மாடலில் மைலேஜ் சார்ந்த மேம்பாடுகளை செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கேயூவி100 எஞ்சின் 82 bhp @ 5500 ஆர்பிஎம் யில் வழங்கும் 1198cc எம் ஃபால்கான் G80 பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 115 Nm 3500 முதல் 3600 ஆர்பிஎம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ்…