பிரான்ஸ் நாட்டின் பிஎஸ்ஏ குழுமத்தின் அங்கமான பீஜோ சிட்ரோவன் கார் நிறுவனம் மீண்டும் இந்தியாவின் சிகே பிர்லா குழுமத்துடன் இணைந்து கார் மற்றும் எஞ்சின்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. பீஜோ நிறுவனம் 2001ம் ஆண்டில் இந்திய சந்தையிலிருந்து வெளியேறியது. பியூஜியெட் சிட்ரியன் பீஜோ நிறுவனம் கடந்த 4 வருடங்களாகவே இந்திய சந்தையில் நுழைவதற்க்காக பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. சனந்த் தொழிற்பேட்டையில் புதிய ஆலை கட்டுமானத்தை தொடங்கி பீஜோ நிறுவனத்தின் தொடர் நஷ்டத்தால் இந்த ஆலை திட்டத்தை கைவிட்டது. ரூ.700 கோடி முதலீட்டில் தமிழகத்தில் பிஎஸ்ஏ குழுமம் சி.கே பிர்லா குழுமத்தின் கூட்டணியில் கார் மற்றும் எஞ்சின்களை தயாரிக்க உள்ளது. சிகே பிர்லா நிறுவனம் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் உரிமையாளராக உள்ளது. திருவள்ளுவரில் அமைந்துள்ள ஹிந்துஸ்தான் ஆலையில் இசுசூ எம்யூ7 எஸ்யூவிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றது. இதே ஆலையில் பியூஜியோட் சிட்ரியன் கார்களும் தயாரிக்கப்பட உள்ளது. முதல் ஒப்பந்ததின் அடிப்படையில் இந்துஸ்தான் மோட்டார்…
Author: MR.Durai
கடந்த 2016 ஆண்டு நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போ வாகன கண்காட்சி அரங்கில் கவனத்தை ஈர்த்த மாடல்களில் ஒன்றான ஹீரோ XF3R பைக் உற்பத்திக்கு தயார் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஹீரோ XF3R மாடல் கான்செப்ட் குறித்து வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில் இந்த மாடலுக்கான வடிவத்தை காப்புரிமை கோரி ஹீரோ மோட்டோகார்ப் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. முதன்முறையாக காட்சிக்கு வந்த எக்ஸ்எஃப்3ஆர் கான்செப்ட் மாடலில் 300 முதல் 350சிசி க்கு இடையிலான எஞ்சின் பொருத்தப்பட்ட 40 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் மாடலாகவும் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்று ஏபிஎஸ் வசதி ஆப்ஷனலாக இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. patent image source- gaadiwaadi ஹீரோ XF3R வருகை 2014 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியான ஹீரோ HX250 மாடல் உள்பட எக்ஸ்டீரிம் 200 எஸ், ஹேஸ்டர் போன்ற பெரும்பாலான பெர்ஃபாமென்ஸ்ரக மாடல்கள் இன்னும் அறிமுகம் செய்யப்படாமல் உள்ள நிலையில் எக்ஸ்எஃப்3ஆர் பைக்கிற்கும் காப்புரிமை…
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் யமஹா தனக்கே உரித்தான தனியான அங்கீகாரத்தை பெற்ற நிறுவனமாக விளங்குகின்றது. யமஹா எஃப்இசட்25 பைக் ரூ.1,19,500 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து யமஹாவின்அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் வாயிலாக பிப்ரவரி முதல் வாரத்தில் டெலிவரி தொடங்கப்பட உள்ளது. கவர்ச்சியான தோற்ற பொலிவுடன் மிக உறுதியான கட்டமைப்பினை பெற்ற எஃப்இசட்25 பைக்கில் உள்ள சில முக்கிய வசதிகளை தெரிந்துகொள்ளும் வகையிலான ஒரு முன்னோட்ட பார்வையாக இந்த செய்தி தொகுப்பு ஆகும். எஃப்இசட்25 ஸ்டைல் நேக்டு ஸ்டீரிட்ஃபைட்டர் மாடல் பைக்குகளில் மிகவும் சிறப்பு வாய்ந்த டிசைன் வடிவத்தை பெற்றுள்ள எஃப்இசட்25 பைக்கில் முன்பக்க எல்இடி ஹெட்லேம்ப் , டெயிலில் எல்இடி விளக்கு போன்றவற்றுடன் எல்சிடி டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டரை பெற்று இளம் வாடிக்கையாளர்களை கவரும் வகையிலான கூர்மையான டிசைன் தாத்பரியங்களை பெற்று அசத்துகின்றது. எஃப்இசட்25 எஞ்சின் யமஹாவின் மிக சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் 20.9 ஹெச்பி பவருடன் , 20…
ஆட்டோமோட்டிவ் இன்ஜின் எவ்வாறு இயங்குகின்றது என்பதனை தெரிந்து கொள்ளும்வகையில் ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் 2012-ல் வெளிவந்த என்ஜின் இயங்குவது எப்படி என்கின்ற தொடரின் பிடிஎஃப் பைல் வடிவில் இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ளும் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முந்தைய லிங்க் திறக்கவில்லை என்கின்ற புகாரினால் தற்பொழுது தரவிறக்கம் செய்யும் இணைப்பு மாற்றப்பட்டுள்ளது. தரவிறக்கம் செய்யாமல் இனைப்புகள் வாயிலாக படிக்க விரும்புபவர்களுக்காக கீழே உரலி முகவரிகள் வரிசையாக தொடுக்கப்பட்டுள்ளது. எஞ்சின் இயங்குவது எப்படி எஞ்சின் இயங்குவது எப்படி – தொடர் 2 என்ஜின் இயங்குவது எப்படி – தொடர் 3 இஞ்ஜின் இயங்குவது எப்படி – தொடர் 4 எஞ்சின் இயங்குவது எப்படி – தொடர் 5 எஞ்சின் இயங்குவது எப்படி – நிறைவு இன்ஜின் இயங்குவது எப்படி என்கின்ற முழுமையான தொடரில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களுமே அடிப்படையான தானூர்தி என்ஜின் இயங்கும் முறையாகும். தற்கால நவீன என்ஜின்களில் எண்ணற்ற நுட்பங்களுடன் கூடிய…
யமஹா இந்தியா நிறுவனம் எஃப்இசட் வரிசையில் யமஹா FZ25 பைக் ரூ.1.19 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. புதிய யமஹா எஃப்இசட்25 மாடலில் 20.9 ஹெச்பி ஆற்றல் தரவல்ல 249சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. மிக நேர்த்தியான ஸ்டீரிட் ஃபைட்டர் பைக் மாடலாக வந்துள்ள எஃப்இசட்25 எல்இடி ஹெட்லேம்ப் வசதியுடன் எல்இடி டெயில் விளக்கு ,எல்சிடி டிஸ்பிளே இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் மீட்டருடன் கருப்பு , வெள்ளை மற்றும் நீலம் போன்ற வண்ணங்களில் கிடைக்க உள்ளது. யமஹா எஃப்இசட்25 எஞ்சின் யமஹாவின் புளூ கோர் எஞ்சின் நுட்பத்துடன் சிறப்பான மைலேஜ் மற்றும் செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய ஏர் கூல்டு 4 ஸ்ட்ரோக் 249சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 20.9 ஹெச்பி பவரையும் 20 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. ஒரு லிட்டருக்கு 43 கிமீ மைலேஜ் வெளிப்படுத்தும் மாடலாக விளங்கும் FZ25 பைக்கில் முன்பக்க டயரில் 282மிமீ டிஸ்க் பிரேக் மற்றும்…
நாளை அதாவது ஜனவரி 24, 2017 யில் இந்தியா யமஹா நிறுவனம் பிரிமியம் சந்தையில் 250சிசி என்ஜின் கொண்ட புதிய யமஹா FZ250 பைக் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. நேக்டு ஸ்போர்ட்டிவ் மாடலாக 250சிசி பைக் விளங்கும். யமஹா FZ 250/ FZ200 இந்த புதிய யமஹா பைக் 200சிசி அல்லது 250சிசி என்ஜினை பெற்ற மாடலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் இந்திய யமஹா நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேப்பாட்டு பிரிவால் வடிவமைக்கப்பட்ட மாடல் என்பதனால் மிக சிறப்பான விலையை பெற்றிருக்கும். யமஹா எஃப்இசட் 250 என அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த பைக்கில் 20.5 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 250சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் டார்க் 20.5 என்எம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் 5 அல்லது 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். சமீபத்தில் வெளிவந்த சோதனை ஓட்ட படங்கள் வாயிலாக விற்பனையில் உள்ள FZ15…