2020 ஆட்டோ எக்ஸ்போவில் முதன்முறையாக மாருதி சுசுகி நிறுவனத்தின் ஃப்யூச்சரோ-இ கான்செப்ட் (maruti suzuki futro-e concept) வரும் கால கிராஸ்ஓவர் கார்களுக்கு இதன் வடிவ தாத்பரியங்களை பயன்படுத்தி எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.
முன் பக்கத்தில் மிக நேர்த்தியான எல்இடி ஹெட்லேம்ப் பெற்று கம்பீரமான வடிவமைப்பு மொழியைக் கொண்டுள்ளது. பியூச்சுரோ-இ பக்கவாட்டில் மிக நேர்த்தியான லைன்கள் வழங்கப்பட்டு அற்புதமாக அமைந்துள்ளது. அடுத்ததாக பின்புறத்தில் பக்கவாட்டு வரை நீட்டிக்கப்பட்ட மிகப்பெரிய டெயில் விளக்குகளைப் பயன்படுத்துகிறது.
இன்டிரியரை பொறுத்தவரை நான்கு இருக்கைககளை பெற்று மிகவும் எதிர்கால வடிவ தாத்பரியத்துக்கு ஏற்ப டிசைன் செய்யப்பட்டுள்ளது. மற்ற நுட்ப விபரங்கள் விரைவில் வெளியாகும்.
ஃபியூச்சுரோ-இ கான்செப்ட்டின் எஸ்யூவி எப்போது உற்பத்தி செய்யும் என்பதற்கான காலக்கெடுவை மாருதி அறிவிக்கவில்லை. இருப்பினும் இந்த எஸ்யூவி நடுத்தர சந்தையில் உள்ள கியா செல்டோஸ், ஹூண்டாய் கிரெட்டா போன்றவற்றை எதிர்கொள்ளும் என தெரிகின்றது.